கலியுகம் பற்றி மகான் கோரக்கர் யோகி பர மானந்த கலியின் தோற்றம் உண்மை நிற சாதிமத பேதம் மெத்த பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும் மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர் உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு. கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும் நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை வாளே முன் பின் வயது ஆண்டு நூறு வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன் கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே – கோரக்கர் இன்னும் சொல்கிறேன...