போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..!
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
| பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் |
![]() |
| கலியுக மகான் ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர் |
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.
பரம்பொருள்
அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 13/03/1988 ஐீவசமாதிக்கு பின் மாரிமுத்து சுவாமிகள் 1988 ஐப்பசி மாதம் பக்த சபையை மதுரையில் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை பௌர்ணமி தோரும் சபை கூடுகின்றது.
நோக்கம் மற்றும் இலக்கு
நோக்கம் மற்றும் இலக்கு
- "ஆதி அந்தம் இல்லாத ஸநாதன தர்மம்" அதன்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தழைத்த சித்தரியலை மனித சமூகம் வளம்பெற, உடல் நலம்பெற, ஆன்மிகம் தளைத்தோங்க, மருத்துவ இயல், வானவியல், மானுடவியல் கோட்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஆராய்ந்த உண்மைகளை பண்பாடு மாறாமல் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் கொண்டு செல்வது.
- பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் கோவில் அமைத்து அவர்களின் எளிய வாழ்க்கை முறை, கலியுக சேவைகள், மற்றும் நிகழ்த்திய அற்புதங்களை சொற்பொழிவாற்றுவது.
- முகாம்கள் அமைத்து இயற்க்கை உணவு மற்றும் இயற்க்கை மருத்துவப் முக்கியதுவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
- ப்ராணயாமம் மற்றும் யோகாசன பயிற்சி அளிப்பது, அதில் தேர்ந்தவர்களுக்கு வர்மம் மற்றும் சித்த மருத்துவ பயிற்சி அளிப்பது.
- இயற்க்கை சார்ந்த சமூகநலத்திட்டங்கள் - இயற்கையை பாதுகாத்தல், மரம் நடுதல், நீராதாரங்களை பாதுகாத்தல், குறித்து விழிப்புணர்வு மற்றும் களபணி மேற்கொள்வது.
- சாதி, மத, இன, மொழி, அரசியல் வேறுபாடு அகற்றி சகோதரத்துவம், மனித நேயம் தழைக்கச் செய்தல், நீதி, நேர்மை, ஒழுக்கம், தேச ஒற்றுமை, தெய்வீக வழிபாடு, சித்தர்கள் வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைப் பரப்புதல்.
- பாரம்பரிய நூல்கள், ஓலைச்சுவடிகள், ஏடுகளை புதுப்பித்தல் மற்றும் பிற்கால சந்ததியினருக்கு பயன் பெரும் வகையில் கொண்டு செல்வது.
- வலியார்கள் மூலம் எளியார்க்கு ஆசிரமம் அமைத்து உயர் கல்வி உதவி, தாய் தந்தையர் இல்லம், சித்தமருத்துவ சிகிச்சை, சித்தமருந்து, சிகிச்சை பயனாளர்க்கு விடுதி, மூன்று வேளை அன்னதானம் மேலும் பல திட்டங்களை செயல்படுத்துவது.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவசமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.













