Skip to main content

மாரிமுத்து சித்தர்

போற்றுவோர் அருள் பொன் பொருள் பெறுக..!
தூற்றுவோர் தூய உள்ளம் பெறுக..!
கலியுக மகான் ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்
கலியுக மகான் ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்
சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் இவர் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி, சிரித்து விஞ்ஞானத்தின் முன்னோடியாக, மெய்ஞானத்தின் விஞ்ஞானியாக, மனிதனும், வீடும், நாடும், உலகமும், நலம் பெற, முன்னேற பல்வேறு அறிவுரைகளை நமக்கு அளித்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்து நம்முடன் ஓருவராய் வாழ்கிறார்.
"சிந்தை தெளிந்து இருப்பவ ஆர், அவனே சித்தன்"
- அவரே நமது ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர் -
ஆகமமாகிய இந்த மனித உடம்பிலே தெய்வபக்தி கொண்டு அருட்ஷக்தியை வளர்த்து ஆன்ம பரிமாணத்தில் மக்களிடையே வானவர்களாகவும், மனித தெய்வங்களாகவும் உலவி அருளை வழங்கி வருகின்ற  மகான், ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர்.
சுவாமிகள் தன் சிறு வயதிலேயே பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தரிடம் அடியாராக இணைந்து கொண்டார். சித்தரியியலில் உள்ள அனைத்து குருகுல பயிற்சி, செய்முறைகளை முடித்துக்கோண்டு சித்திகளை பெற்றபின் பரம்பொருள் வாக்குக்கு இணங்க இல்லறத்தில் இணைத்துக்கொண்டார். 






இல்லறத்தில் இருந்த பொழுதும் தேடி வரும் அடியார்க்கு சித்தமருத்துவ முறையில்  அற்புதங்கள் நிகழ்த்தி வந்தார். மதுரை அரசு மருத்துவமனை பணிஓய்வுக்கு பின் இல்லற கடனை முடித்து கொண்டு பிறவி கடனை எதிர்நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார்.
பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் போல் மனிதவடிவில் உள்ள சுவாமியை தரிசிக்க பல மாவட்டத்தில் இருந்து அடியார்கள், சபை மெய்யன்பர்கள், முக்கிய பிரமுகர்கள் வருவதுண்டு. இன்றைய காலகட்டத்தில் தேர்ந்த வர்மக் கலை ஆசான் மற்றும் நரம்பியல் வைத்தியர்களுக்கே புரியாத அல்லது தெரியாத பல நுட்பங்களை, பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் சித்தர்கள் செய்த வர்ம அற்புதங்களை தற்பொழுதும் நிகழ்த்தி கொண்டிருக்கிறார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல அடியார்களை வர்மம் மற்றும் மூலிகைகளை கொண்டும், ஆதியும் அந்தமும் ஆன பரம்போருள் அருள்வெளி சித்தர் ஆசியில், வழியில்  பெற்ற சித்திகளை கொண்டும் அடியார் அவர்தம் பிறவிப்பயனை ஏற்றவாறு அற்புதங்களை நிகழ்த்தி கொண்டிருக்கிறார்.
உலகமக்களுக்கு போகர் சித்தர் அளித்த நவபாஷண முறையை செய்து காட்டியவர், சூரியன் கண்ணை கட்டி வருணனை வருடி மழையை கொண்டு வந்தவர், மரணத்தின் பிடியை அவிழ்தவர், வெளி உலகிற்க்கு தெரிவிக்க முடியாத பற்பல அதிசயங்கள், தேவரகசியங்கள், அஷ்டமாசித்துக்கள், அற்புதங்களை நிகழ்த்தியவர். சர்வசாதார்ணமாக பரம்பொருள் அருட்பெரும் ஜோதியிடம் நேரடியாக, இயல்பாக உரையாடுவார், அது மட்டுமல்லாது குடுப்பணை உள்ளவர்களுக்கு தத்ருபமாக காட்டியும் உள்ளார். "யாதும் ஊரெ யாவரும் கேளிர்" என்று, "கண் போன போக்கில் கால் போகிறது" என்றும், தற்பொழுது பரம்பொருள் வழியில் சென்று கொண்டிருக்கிறார். சுவாமிகளுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது.



  1. சுவாமியின் சேவை கலியில் மிக தேவை என்பதனை அறிந்தவர்கள் அனைவரும் சபை மெய்யன்பர்களாக உள்ளனர்.
  2. தம் கருத்துக்களை மறைபொருளாக பல்வேறு அரிய சொற்களைப் பயன்படுத்திக் கூறிச்செல்வார்.
  3. தேடி வரும் சபை மெய்யன்பர்களுக்கு சுவாமிகள் தேடி சென்று சித்தமருத்துவம் வழங்குகிறார்.
  4. சபை மெய்யன்பர்கள் இல்ல விழாக்களுக்கு தலைமை தாங்கியும் இல்லாதோருக்கு பொருள் உதவியும் செய்து நடத்தி வருகிறார்.
  5. சபை மெய்யன்பர்கள் மூலம் வரும் மருத்துவர்களால் கைவிடப்பட்ட அடியார்கள், பிரமுக்கர்களுக்கு பலருக்கு சிகிச்சை அளித்துள்ளார், மேலும் எங்கெங்கோ சென்று முடியாமல் போன பலருக்கு சித்தமருத்துவ சிகிச்சை அளித்து நலமுடன் வாழ வழிவகை செய்துள்ளார்.
  6. சபை மெய்யன்பர்களுடன் இணைந்து பல சமூகநலத்திட்ட களபணிகள் ஆற்றியுள்ளார்.
  7. அரசு உயர் அதிகாரி மற்றும் முக்கிய பிரமுக்கர் சபை மெய்யன்பர்கள் வாயிலாக பல உதவிகளை செய்துள்ளார்.
  8. சபையில் பௌர்ணமி தோறும் அன்னம் வழங்குகிறார்.
  9. இருக்கும் இடத்தில் பெற்று தன்னிடம் உள்ளதையும் சேர்த்து இல்லாத இடங்களை சுயநலமற்று சரிசெய்து வருகிறார்.
  10. இடம் பற்றாக்குறை, அடியார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தேவையை பூர்த்தி செய்ய, சபையின் சேவையை விஸ்திகரிக்க ஆசிரமம் அமைக்கும் முயற்ச்சியில் உள்ளார்.
பரம்போருள் அருட்பெரும் ஜோதிக்கு தனது பிறந்த ஊர் அருகில், கம்பம் கூடலுர் மலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைக்கும் முயற்சியில் உள்ளார். ஆசிரமத்திற்க்கு வரும் அடியார்களுக்கு அன்னம் அளித்து இலவசமாக சித்தமருத்துவ முறையில் சிகிச்சை வழங்கவுள்ளார். பல ஆயிரக்கணக்கான ஆண்டு பழமை வாய்ந்த யோகாசனம், வர்மம் மற்றும் சித்தமருத்துவ கலையை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கவும் உள்ளார்.

ஓம் ஸ்ரீ மாரிமுத்து சித்தர் சுவாமிகள் மாதம் தோறும் மதுரையில் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் அவர்களுக்கு பௌர்ணமி பூஜை நடத்தி சபை மெய்யன்பர்களுக்கு உபதேசம் செய்து ஆசி வழங்கி வருகிறார். ஆண்டு தோறும் பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம், ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஐீவசமாதி கோயில் குரு பூஐையில் கலந்துகொண்டு அருள்ஆசி வழங்கி வருகிறார்.

Videos:




ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பக்த சபை
121, அருள்வெளிசித்தர் இல்லம், திருவள்ளுவர் நகர், மதுரை—625006.
ஓம் ஸ்ரீ அருள் மாரிமுத்து சித்தர் ஆஸ்ரமம்
EB ரோடு, குமுளி லோயர் கேம்ப், கூடலூர் அஞ்சல், தேனி மாவட்டம் - 625518, தமிழ்நாடு.
ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஜீவ சமாதி
பூதேரிபண்டை கிராமம், வடமங்கலம் சாலை, ஸ்ரீ பெரும்புதூர் - 602105.

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...