Skip to main content

ஆடாதொடை Adhatodavasicanees ; Acanthaceae

ஆடாதோடைக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்
- பழமொழி
மாற்றுப்பெயர்கள் ; ஆடாதோடை,ஆடு தொடா மூலி
வளரியல்பு ; ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் குறுஞ்செடி.
இலை    ; நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளும்,வெண்ணிறப் பூவும்
மருத்துவ பாகம் ; இலை,பூ,வேர்
செய்கை  ; கபஹரகாரி, கிருமிநாசினி, அங்காகர்ஷணநாசினி
மருத்துவ குணம் ; இலை கப ஆதிக்கம்,வாத தோஷம்,பற்பல சுரம்,சந்நிபாதம், வயிற்றுநோய் நீக்கும்.
வேர் ; இருமல்,அக்கினிமந்தம்,சுவேதபித்தம், கஷ்டசுவாசம்,கபரோகம் நீக்கும்.
                              
"ஆடாதோ டைப்பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்குநாடின்
மிகுத் தெழுந்த சன்னிபதின்மூன்றும் விலக்கு
மகத்துநோய் போக்குமறி"
- ஆடாதொடை இலை கப ஆதிக்கம், வாத தோஷம், பற்பல சுரம், சந்நிபாதம், வயிற்றுநோய் ஆகியவற்றை நீக்கும்.

"காசமொடு மந்தங் கதித்தபித்தங் கொடுஞ்சு
வாசங்கழுத்துவலிமுதனோய் – கூசியே
யோடாதிராங் கொருநாளு மொண்டொடியே
யாடாதோ டைத்துருக் கஞ்சி."
- ஆடாதொடை வேரினாலிருமல், அக்கினி மந்தம், சுவேதபித்தம், கஷ்டசுவாசம், களரோகம் முதலியவை போம்.
இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் ஆடாதோடை என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.
1.   ஆடாதொடை இலை,வேர்,மிளகு சேர்த்துக் காய்ச்சி,வடித்து, தேன் கலந்து பருகக் காய்ச்சல் குணமாகும்
2.   ஆடாதொடை,கோரைக்கிழங்கு,பற்பாடகம்,விஷ்ணுக்கிரந்தி,துளசி,பேய்ப்புடல், கஞ்சாங்கோரை,சீந்தில் வகைக்கு 30கிராம்,இடித்து,1லி.நீரில் 500மிலியாகக் காய்ச்சி,வடித்து(அஷ்டமூலக்குடிநீர்)30-60மிலி,வேளைக்கு பருகிவர எவ்வித சுரமும் தீரும்
3.  சுக்கு,திப்பிலி,கிராம்பு,சிறுகாஞ்சொறிவேர்,அக்கராகாரம்,முள்ளிவேர்,கடுக்காய்தோல், ஆடாதொடை,கற்பூரவல்லி,கோஷ்டம்,சிறுதேக்கு,நிலவேம்பு,வட்டத் திருப்பி முத்தக்காசு வகைக்கு சமன்,3ல்1ன்றாய் காய்ச்சிப் பருக இருமல் சளியுடன் கூடிய சுரம் குணமாகும்
4.   பற்பாடகம்,கண்டங்கத்திரி,ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40 கிராம், சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிகுவேளை,4நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்.
5.   இலைச்சாறு,தேன் சமன் கலந்து சர்க்கரை சேர்த்து தினம் 4 வேளை கொடுக்க நுரையீரல் இரத்த வாந்தி,கோழை மிகுந்து மூச்சுத்திணறல்,இருமல்,இரத்தம் கலந்து கோழை வருதல், குணமாகும்.
அளவு;
குழந்தைகள் - 5+5 துளிகள்
சிறுவர்       – 10 +10 துளிகள்
பெரியவர்கள் - 15+15 துளிகள்
6.   இலைச்சாறு 2 தேகரண்டி எருமைப்பாலில் காலைமாலை கொடுத்து வர சீதபேதி,இரத்தப்பேதி குணமாகும்.
7.   10 இலைகளை 2ல் 1ன்றாய்க் காய்ச்சி 250மிலி,காலைமாலை தேன் கலந்து 40 நாட்கள் சாப்பிட்டுவர என்புருக்கிக்காசம்(TB), இரத்தக்காசம்,சளிச்சுரம், சீதளவலி, விலாவலி, தீரும்.
8.   வேருடன் சமன் கண்டங்கத்திரி வேர் சமன் சேர்த்துப் பொடித்து ½ - 1 கிராம் தேனில் சாப்பிட்டுவர நரம்பு இழுப்பு,சுவாசகாசம்,சன்னி, ஈளை,இருமல், சளிச்சுரம், என்புருக்கி,குடைச்சல் வலி குணமாகும்.
9.   இலையும்,சங்கன் இலையும் வகைக்கு 1பிடி ½ லி நீரில் போட்டு பாதியாய்க் காய்ச்சி காலைமாலை பருகிவரக் குட்டம்,கரப்பான், கிரந்தி,மேகப்படை, ஊறல், விக்கல்,வாந்தி,வயிற்றுவலி தீரும்.
10.  உலர்ந்த ஆடாதொடை இலைத்தூளை ஊமத்தை சுருட்டிப் புகை பிடிக்க மூச்சுத் திணறல் உடனே தீரும்.(அளவுக்கு அதிகமாக புகைப்பின் மயக்கம் வரலாம்)
11.  700 கிராம் தூய இலைகளை நெய் விட்டு வதக்கி,அக்கரா, சித்தரத்தை, இலவங்கம் வகைக்கு 10 கிராம்,ஏலம்4 பொடித்துப் போட்டு பொன் வறுவலாய் வறுத்து,2லி நீர் விட்டு 1லி ஆக வற்றக் காய்ச்சி வடித்ததில் 1கிலோ சர்க்கரை சேர்த்து தேன் பதமாய்க் காய்ச்சி (ஆடாதொடை மணப்பாகு) வெந்நீரில் 1 கரண்டி கலந்து சாப்பிட்டுவர நீர்க்கோவை தீரும்,தினம் 3 வேளையாக நீடித்து கொடுத்துவர காசம்,என்புருக்கி,மார்ச்சளி, கப இருமல், புளூரசி, நீடித்த ஆஸ்துமா, நிமோனியா குணமாகும். குரல் இனிமை உண்டாகும்.
12. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் கலந்து குடிக்க சுவாச மண்டல உறுப்புகள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.
13. வேர்கசாயம் கடைசி மாதத்தில் காலை மாலை சாப்பிட்டுவர சுகப்பிரசவம் ஆகும். (ஆடாதொடையிலிருந்து கிடைக்கும் காரத்தன்மையுடைய வாசிசைன் மெதர்ஜின் போன்ற மருந்துகளுக்கு இணையானது. பழங்காலத்தில் செவிலியர்கள் சுலபமாக பிரசவம் ஏற்பட பயன்படுத்தினர்)
14. இலைகளோடு, வேர் எடுத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி ஒரு நாளைக்கு இரு வேளை ஒரு வாரம் குடித்து வர மூச்சிரைப்பு நோய் குறையும்.
15. இலைக்கசாயம் 25 மிலியுடன் சிறிது திப்பிலி சூரணம்,தேன் கலந்து தினம் 2 வேளை கொடுத்து வர இரத்தம் சுத்தியாகும்.கபம் குறையும்.கஷ்டசுவாசம் தீரும்.
16. இலையின் ஈர்க்கு,நிலவேம்பு,சீந்தில்கொடி,பேய்ப்புடல்,வெப்பாலை அரிசி வகைக்கு 20கிராம் இடித்து 2ல்1ன்றாய்க் காய்ச்சி வேளைக்கு 25மிலி தினம் 2-3 வேளை கொடுக்க விஷம்,குளிர்சுரம் குணமாகும்.
17. ஈர்க்கு,திப்பிலி,சுக்கு,சித்தரத்தை,ஓமம்,கண்டங்கத்திரி வகைக்கு 10கிராம் முன் போல் தேன் சேர்த்து கொடுக்க கபசுரம் நீங்கும்.
18. வேர்பட்டை 80கிராம்,பூ கதிர் 160கிராம்,பேரரத்தை,சித்தரத்தை, வாய்விளங்கம், சிறு தேக்கு,கோரைக்கிழங்கு,இச்சிப்பட்டை,கரிமஞ்சள்,மிளகு,கண்டங்கத்திரி வகைக்கு 10 கிராம்,தூதுவேளை உலர்ந்த இலை,காஞ்சொறிவேர் வகைக்கு 80கிராம்,அரிசித்திப்பிலி 120கிராம்,கோஷ்டம், காட்டாத்திப்பூ வகைக்கு 10கிராம் இடித்துப் பொடித்து,20கிராம் சாம்பிராணி பதங்கம்கூட்டிக் கலந்து(ஆடாதொடை சூரணம்) 5கிராம் பாலில் கலக்கி தினம் 2வேளை 10-20 நாள் கொடுத்துவர சீதள சம்பந்தத்தாலுண்டான சுவாசகாசம், இரைப்பிருமல் தீரும்.
19.  ஆடாதொடை இலைகளை நடுநரம்பு நீக்கி,10மிளகு,1பிடிதுளசி,2 வெற்றிலை சேர்த்து,சிதைத்து,4ல்1ன்றாய் காய்ச்சி,கற்கண்டு கலந்து, தினமிருவேளை பருக இருமல்,சளி,தொண்டைக்கட்டு தீரும் வறட்டு இருமல்  குணமாகும்.
20.  ஆடாதொடையை  தேன் விட்டு வதக்கி,தாளிசபத்திரி.அரிசிதிப்பிலி, அதிமதுரம் சமன்  பொடித்துப்  போட்டு, 4ல்1ன்றாய்க்  காய்ச்சி, 50மிலி  அருந்திவர காசநோய், இருமல், இரைப்பு  குணமாகும்                                                                                                                          
21.  .தூதுவேளை,ஆடாதொடை,கண்டங்கத்திரி வேர்,சித்தரத்தை நான்கையும் அரைத்து நீரிலிட்டு காய்ச்சிப் பருக,1தேகரண்டி குழந்தைகளுக்குக் கொடுக்க சளி,மூக்கடைப்பு தீரும்.        
22.  கண்டங்கத்திரி,ஆடாதொடை,வேர் வகைக்கு 50கிராம்,திப்பிலி 5 கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி,தினம் 4வேளை பருக கப இருமல் தீரும்
23.  ஆடாதொடைஇலையை இடித்து பிட்டவித்து சாறு100மிலியில் திரிகடி திப்பிலி பொடி கலந்து உட்கொள்ள ஈளை இருமல் தீரும்.  
24.  ஆடாதோடை இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடிக்க, சளி, காய்ச்சல் கட்டுக்குள் வரும்.
25.  ஆடாதொடைஇலை5,மிளகு10,துளசிஇலை1பிடி,வெற்றிலை2,சேர்த்திடித்து 4ல்1ன்றாய்க் காய்ச்சி 75மிலி,தினம்2,3வேளை சாப்பிட மூக்கழற்சி குணமாகும்
26.  ஆடாதொடைஇலை,வேர்,மிளகு  சேர்த்துக்  காய்ச்சி,வடித்து,தேன் கலந்து பருக  காய்ச்சல்   குணமாகும்
27.  பற்பாடகம், கண்டங்கத்திரி, ஆடாதொடை,சுக்கு,விஷ்ணுக்கிரந்தி வகைக்கு 40கிராம்,சிதைத்து 4ல்1ன்றாய் காய்ச்சி,25மிலி தினமிருவேளை, 4 நாள் கொடுக்க நச்சுச்சுரம் தீரும்
28.  விஷ்ணுக்கிரந்தி சமூலம், ஆடாதொடைவேர், கண்டங்கத்திரிவேர், தூதுவேளை வகைக்கு 30கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி, காலை மாலை 50மிலி கொடுக்க என்புருக்கிக்காய்ச்சல் தீரும்
29.  கண்டங்கத்திரி சமூலம், ஆடாதொடை வகைக்கு30கிராம், விஷ்ணு கிரந்தி பற்பாடகம் வகைக்கு 15கிராம்,சீரகம்,சுக்கு வகைக்கு 10கிராம் சிதைத்து, 4ல்1ன்றாய் காய்ச்சி,100மிலி 4-6வேளை  சாப்பிட்டு வர நிமோனியா, ப்ளு (மண்டைநீரேற்றக்காய்ச்சல்) தீரும்
30.  திரிகடுகு,திரிபலை,வெப்பாலையரிசி,கடுகுரோகிணி,ஆடாதொடைவேர், மஞ்சள், மரமஞ்சள் வகைக்கு10கிராம் இடித்து கசாயம் செய்து கொடுக்க கண்டகூச்ச சன்னி தீரும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...