Skip to main content

ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவன்

ஹோரை அறிந்து நடப்பவன் எதிலும் வெற்றிபெறுவன் என்பது சித்தர் வாக்கு. சுப நிகழ்ச்சிகளான திருமணம், கிரகப்பிரவேசம், வீடு குடித்தனம் செல்ல, சீமந்தம், பொருள் வாங்க விற்க, பெண் பார்ப்பது, பதவியேற்பது, குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல், இல்லற சம்பந்தமான காரியங்களை ஜாதகரின் லக்னத்திற்கு, ராசிக்கு அடுத்து சுபஹோரை என்கிற ஒருமணி நேரம் மிக முக்கியமானதாகும்.


இதில் ஏழு கிரகங்கள் தான் முக்கியமானவை அதிலும் சுபகிரங்களான குரு, சுக்ரன், புதன், சந்திரன் ஹோரைகள் தான் முக்கிய தலைமை வகிக்கும். இதில் சாய கிரகங்களான ராகு கேது பங்கு கிடையாது, அவற்றிற்குச் சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனால், ஒவ்வொரு நாளும் ராகு காலம் என்று ஒன்றரை மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிரகங்கள் சூரினுக்கும் பூமிக்கும் இடையில் மற்றும் சூரியனுக்கு அப்பால் சுற்றும் கிரகங்கள் என இரண்டு நிலையாக பிரிக்கப்படுகிறது. இதில் மெதுவாகச் சுற்றுவது தொடங்கி வேகமாகச் சுற்றுவது வரை என எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

சூரிய உதயத்திலிருந்து ஒவ்வொரு கிழமைகளுக்குரிய கிரகத்தை ஒருமணிநேரம் என்று 24 பங்காகப் பிரித்துக் கணக்கிடப்படுகிறது எப்படி என்று பார்ப்போம். ஒரு வாரத்தில் வரும் 7  கிழமைகளுக்குரிய கிரகத்தை அடிப்படையாகக் கொண்டு அன்று உதயமாகும் சூரியனைக் கணக்கில் கொண்டு, அன்றைய கிழமைதான் அன்றைய முதல் ஒரு மணி நேர ஆட்சிபுரியும் ஹோரை அதற்கு பின்வரும் அனைத்து கிரகங்கள் தொடர்ச்சிகளான ஹோரைகளாக வரும். அதாவது சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்று வரிசைப்படும். இந்த ஹோரை கணித வரிசையானது பூமியில் உள்ள உள் மற்றும் வெளிக் கிரக வரிசையாகும். 

உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் 6-7 சூரியனின் ஹோரை அதற்கடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஹோரை, 8-9 மணி வரை புதன் ஹோரை, 9-10 வரை சந்திரன் ஹோரை, 10-11 வரை சனி ஹோரை, 11-12 மணி வரை குரு ஹோரை, 12-1 மணி வரை செவ்வாய் ஹோரை. இதன் சுழற்சியாக மீண்டும் சூரியன் ஹோரை துவங்கும். ஹோரையின்  தோராயணமான கட்டம் தெளிவாக கீழே குறிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் இடத்திற்கு இடம் மாறுபடும் சில விநாடிகள் மட்டுமே மாற்றம் இருக்கும். கிரகங்கள் சூரினுக்கும் பூமிக்கும் இடையில் மற்றும் சூரியனுக்கு அப்பால் சுற்றும் கிரகங்கள் என இரண்டு நிலையாகப் பிரிக்கப்படுகிறது. இதில் மெதுவாக சுற்றுவது தொடங்கி வேகமாக சுற்றுவது வரை என எடுத்துக் கொள்ளப்படுகிறது. 


குரு, சுக்கிரன், சந்திரன், புதன் நல்ல ஹோரைகள் மற்ற சூரியன், செவ்வாய், சனி நல்ல ஹோரைகள் அல்ல.  ஒவ்வொரு  ஓரையில் என்ன என்ன செய்யலாம் என்று பார்ப்போம். 

சூரிய ஓரை

சுபகாரியங்கள் செய்ய மற்றும் புதிதாக எந்த அலுவல்களையோ செயல்களை இந்த  சூரியன் ஓரை ஏற்றதல்ல. ஆனால் இந்த ஓரையில்  உயில் சாசனம் எழுத, பெரியோர்கள் ஆசிபெற, மற்றவரின் சிபாரிசு பெற,  மற்றவர்களிடம் ஆலோசனை பெற, அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விஷங்களை மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். இந்த ஓரை நடக்கும் நேரத்தில் பொருள் ஏதேனும் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைக்குமானால் மிகவும் தாமதித்து அப்பொருளின் நினைவு மறைந்தபின் கிழக்கு திசையில் கிடைக்கலாம்.

சந்திர ஓரை 

சந்திர ஓரை காலத்தில் எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். குறிப்பாகப் பெண்கள் தொடர்புகொண்ட சுப விசேஷங்கள் மிகவும் ஏற்ற காலம் இது. இந்த ஓரைகளில் புதிய தொழில் தொடங்க, வர்த்தகம் தொடங்க, வியாபார விஷயமாகவோ பிரயாணம்  மேற்கொள்ளலாம், ஆன்மீக யாத்திரை செய்யலாம், பெண் பார்ப்பது மற்றும் திருமணம் விழாக்கள், சீமந்தம், மொட்டையடிப்பது, காது குத்துதல், வெளிநாடு செல்ல, பதவி ஏற்பது, பேச்சுவார்த்தை  செய்யலாம், வேலை விண்ணப்பிப்பது, சேமிப்பு துவங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ளலாம். அதிலும் வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் மிகவும் நல்ல நேரமாகக் கருதப்படுகிறது. இந்த ஓரையில் எந்தப்பொருள் காணாமல் போனாலும் கிடைக்காது.

செவ்வாய் ஓரை 

இந்த செவ்வாய் அசுப கிரகம், எல்லாக் கிழமையில் வரும் இந்த ஓரை எந்தவித நல்ல காரியங்களும் செய்ய உகந்த நேரமல்ல. செவ்வாய் ஓரையானது யுத்தம், பொருள் அழிவு, நோய், விபத்து, ஆகியவற்றை உண்டாக்கும். இருப்பினும் இந்த ஓரையில் நிலம் வாங்குவது விற்பது பற்றிய பேச்சு வார்த்தை, அக்ரிமென்ட் போடுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது, ஆயுதப் பிரயோகத்தைப் பயன்படுத்தி யுத்தம் செய்யலாம். பல போர்கள் முற்காலத்தில் இந்த ஓரையில் செய்வார்கள். செவ்வாய் பெரிய அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தைப் பிரயோகம் செய்து சமாதான கட்டுக்குள் கொண்டுவர முடியாது. இந்த ஓரையில் தெய்வீகத் தொடர்பான விஷயங்களையோ, முருகரை அம்பாளை வழிபடலாம். இந்த ஓரை நேரத்தில் பொருள்கள் காணாமல் போனால் சீக்கிரம் முயன்றால் தெற்கு திசையில் கிடைத்துவிடும்.

புதன் ஓரை

புதன் என்றவுடன் அனைவரும் புத்தி என்று தெரியும். இந்த ஓரையில் புத்தியைப் பலப்படுத்தும் கல்வி சேர்க்கை, தகவல் தொடர்பு, நிலம் வாங்க, பெண் பார்க்க, திருமணம், ஜோதிடம் பார்க்க மற்றும் பேச, கதை கட்டுரைகள் மற்றும் எழுத்துத் தொடர்பான வேலை தொடங்குவதற்கும், நற்காரியங்கள் ஆரம்பிக்க, வாங்கி சேமிப்பு, வழக்குப் பதிவு ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம் ஆகும். சுப காரியங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேசவும் முடிவெடுக்கவும் இந்த நேர உகந்தது. பயணங்கள் மேற்கொள்ளவும் செய்யலாம். இந்த ஓரையில் காணாமல்போகும் விரைவில் அதிக சிரமமின்றி கிடைத்து விடும். திருமணம் விஷயமாகப் பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடாது.

குரு ஓரை

குரு ஓரையில் தொடங்கும் எல்லாவித  நற்காரியம் முக்கிய வெற்றியில் முடியும், நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் சந்தோஷம் ஏற்படுத்தும். இந்த ஓரையில் எல்லாவகை சுப காரியங்களுக்கு மிகவும் ஏற்ற நேரம், திருமணம், குரு உபதேசம் ஆசீர்வாதம் பெற, புது வேலைக்குச் சேர, வியாபாரம், மருத்துவம் பார்க்க, விவசாயம் செய்ய நல்லது. ஆடை மற்றும் பொருள்கள் வாங்கவும், தங்கம் வாங்க, சட்டத்திற்கும் ஏற்ற காரியங்கள், வீடு மனை வாங்க சரியான முழு சுப ஓரை ஆகும்.  இந்த நேரத்தில் காணாமல்போன பொருள்களைப் பற்றி வெளியில் சொன்னாலே போதும் உடனே கிடைத்துவிடும்.

சுக்கிர ஓரை

சுக்கிர என்பவன் போகக் காரகன் அதனால் ஆடம்பரமான வாழ்க்கை வாழத் தேவையான அடுக்குமாடி அல்லது கட்டிய வீடு, புது  வாகனம், ஆடை, வெள்ளி ஆபரணம் மற்றும் வீட்டிற்கு வேண்டிய அலங்கார பொருள்கள், நட்பு, காதல் புரிவதற்கு, கேளிக்கை நிகழ்ச்சிகள், பெண்கள் தொடர்பான சகல காரியங்களிலும், விவசாயத்திற்கும், பயணங்கள் செய்ய, பெண் பார்க்க, சாந்தி முகூர்த்தத்திற்கு மிக முக்கிய ஓரையாகும். இந்த ஓரையில் காணாமல் போன பொருள் மேற்கு திசையில் சில நாள்களில் கிடைக்கும்.

சனி ஓரை 

இது ஒரு அசுப கிரக ஓரை அதனால் இந்த ஓரையில் தான் சிறை வாசம், சண்டை, எதிரிகளால் துன்பம் போன்றவை ஏற்படும். எந்தவித சுபகாரியங்களும், அறுவைச்சிகிச்சை செய்தல் மற்றும் புதிதாக எந்த வேலையும் செய்யக்கூடாது. இருப்பினும் பொருள் சேர்க்கை பற்றிப் பேசவோ, கடனை அடைப்பதற்கு முயற்சியோ, பழைய வீடு, வாகனம் மற்றும் இயந்திரம் வாங்க, பூர்வ ஜென்ம பாவம் தீர்க்க, உழைப்பு பற்றிய பேச்சு வார்த்தையோ, சட்டப்பூர்வமான விஷயங்களைப்பற்றி முடிவெடுக்கவோ, மரம் செடி நடுதல், நடைப்பயணம் துவங்க நல்லது. இந்த ஓரையில் காணாமல்போன பொருள் கிடைக்காது கிடைத்தாலும் பல வருடம் கழித்து எதிர்பாராத விதமாகக் கிடைக்கலாம். சனிக்கிழமை அன்று சந்திர ஓரை தவற்றை ஏற்படுத்தும்

ஜோதிடர்களுக்கு ஹோரையை வைத்துத்தான், நல்ல நாளில் முக்கிய நல்ல நேரத்தைக் கணக்கிடவே முடியும். இன்னும் ஓரை பற்றிச் சொல்லவேண்டுமானால் வெள்ளிக்கிழமை, குரு ஹோரையைத் தேர்ந்தெடுக்கக்கூடாது. சிலநேரங்களில் ஹோரை தோஷத்தினால் பாதிப்பு ஏற்படும். நம்மை அறியாமலே ஓரைகளின் கதிர்வீச்சை உணர முடியும் அதற்கேற்ப முற்காலத்தில் “கட்டளை கலித்துறையில்” எந்தெந்த ஓரையில் பிறந்தால் எவ்வாறெல்லாம் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஹோரை என்பது காலத்தின் ரகசிய கணக்கு, அதனைத் தெரிந்துவைத்துச் செயல்பட்டால் நல்லது. ஒருவருக்கு இந்த சுப ஹோரைகள் மிக மோசமான தசை, புத்தி காலத்திலும் நமக்கு உதவ முற்படும், இதனால் நற்பலனையும் மற்றும் சந்தோஷத்தையும், அள்ளித்தரும் என்பது முன்னோர்கள் வாக்கு.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...