Skip to main content

அக்கரகாரம்


1. மூலிகையின் பெயர் :- அக்கரகாரம்.
2. தாவரப்பெயர் :- ANACYCLUS PYRETHRUM.
3. தாவரக்குடும்பம் :- COMPOSITAE.
4. வேறு பெயர்கள் :- அக்கார்கரா, ஸ்பானிஷ்பெல்லிடோரி, அக்கரம் முதலியன.
5. தாவர அமைப்பு :- அக்கரகாரம் என்னும் மூலிகைச் செடி கருமண்கலந்த பொறைமண்ணில் நன்கு வளரும். இதன் அமிலத்தன்மை 5 - 6 சிறந்தது. வட ஆப்பிரிக்க வரவான இது ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப் பட்ட மூலிகையாகும். தமிழ் நாட்டில் 1000 முதல் 1500 அடி வரை உயரம் உள்ள மலைப் பிரதேசங்களில் பயிரிடலாம். இந்திய மருத்தவத்தில் அதிக

மதிப்பு உடையது. இலைகள் 15 செ.மீ. நீளமானதாகவும் ஆரம்பத்தில் இளம்பச்சை நிறமாகவும், முதிர்சியாகின்ற தருணத்தில் லேசான ஊதா நிறத்திற்கும் மாறிவிடும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்புப் புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு செடியிலும் சுமார் 7-10 பூக்கள் இருக்கும். வேர்களில் சல்லி வேர்கள் அதிகம் காணப்படும். வேர்கள் 5 - 10 செ.மீ. நீளமானதாக இருக்கும்.
ஜெர்மனி, எகிப்து, கனடா, நாடுகளில் பயிர் செய்யப்படிகிறது. இந்தியாவில் காஷ்மீர், இமாசலம் பிரதேசம், உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பயிர் செய்யப்படுகிறது. வேர்களில் அனாசைக்ளின்பெல்லிட்டோரின், எனிட் ரைன் ஆல்கஹால், ஹைடிரோகரோலின், இன்யூலின், ஆவியாகும் தன்மை உள்ள எண்ணெய், செசாமையின்I, II, III, IV, அமைடுகள் ஆகியவை குறைந்த அளவில் வேரில் உள்ளன. இதில் இருந்து பெல்லிட்டோரின் அல்லது பைரித்திரின் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது நட்ட ஆறு மாதத்தில் அறுவடை செய்யலாம். ஒரு மாத வயதுடைய நாற்றை நடவேண்டும். இலைகள் பழுப்பு நிறமாக மாறி, பூக்கள் காய்ந்து விடும் தருணத்தில் அறுவடை செய்ய வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். வேர்களை நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் பரப்பி பத்து நாட்கள் உலர்த்த வேண்டும். இது பயிரிடஏற்ற பருவம் ஏப்ரல், மே மாதங்களாகும். அக்கரகாரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. பயன் படும் பாகங்கள் :- வேர்கள் மட்டும்.

7. மருத்துவப் பயன்கள் :-
மருந்துப் பொருட்கள் செய்யப் படுகின்றன.இந்திய மருத்துவத்தில் ஆம்பர் மெழுகு மருந்துப் பொருள் செய்யப்பயன்படுகிறது. வாதநோய் நிவாரணத்திற்கும், நரம்புத்தளர்ச்சி நோயால் ஏற்படும் காக்காய் வலிப்பு நோயிக்கும் உடனடி நிவாரணமாகும். மூளையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

"அக்கரகாரம் அதன்பேர் உரைத்தக் கால்
உக்கிரகால் அத்தோடம் ஓடுங்காண் - முக்கியமாய்
கொண்டால் சலம் ஊறும் கொம்பனையே! தாகசுரம்
கண்டால் பயந்தோடுங் காண்."

அக்கரகாரத்தால் பயங்கரமான வாத தோஷமும் தாக சுரமும் நீங்கும். இதன் வேர் துண்டை வாயிலடக்கிக் கொள்ளின் சலம் ஊறும்.

உபயோகிக்கும் முறை :-
இரண்டு பணவெடை அக்கரகாரத்தைத் தட்டி வாயிலிட்டு அடக்கிச் சுரக்கும் உமிழ் நீரை சுவைத்து விழுங்க நாவின் அசதி, பல்வலி, உண்ணாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல் தாகம் இவைகள் போம். ஒரு பலம் அக்கரகாரத்தை இடித்து ஒருபாண்டத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காச்சி வடிகட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் விட்டு அடக்கிக் கொப்பளித்து உமிழ்ந்துவிடவும். இப்படி தினம் 2 - 3 முறை மூன்று நாட்கள் செய்ய வாயிலுண்டான விரணம், தொண்டைப் புண், பல் வலி, பல்லசைவு முதலியவைகள் நீங்கும். இதனைத் தனியாக இடித்தெடுத்து சூரணத்தையாவது அல்லது பற்பொடிக்காக கூறப்பட்ட இதர சரக்குகளுடன் கூட்டியாவது பற்றேயித்து வர பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையும் நீங்கும், இதனைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் குழித்தைல முறைப் படி தைலம் வாங்கி உணரச்சி குறைவான இடங்களில் தேய்க்க உணர்ச்சி உண்டாகும். ஆண்குறிக்கு லேசாகப் பூச தளர்ச்சி நீங்கி இன்பம் அதிகரிக்கச் செய்யும். அக்கரகாரச் சூரணத்திற்கு சமனெடை சோற்றுப்புக் கூட்டிக் காடிவிட்டு அரைத்து உண்ணாற்கிற்றடவ அதன் சோர்வை நீங்கும். இதனை நாவிற்தடவ தடிப்பை மாற்றும். இதன் தனிச் சூரணத்தை மூக்கிலூத மூர்ச்சை தெளிவதுடன் பற்கிட்டலையும் திறக்கச்செய்யும். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி உபயோகப் படுத்து வதுண்டு.

தொண்டைக் கம்மல் குணமாக...
அக்கராகார வேரினை நீரில் அலசி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். அதில், தேவைக்கேற்ற அளவு எடுத்துக்கொண்டு அதனைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். அதனை ஒரு லிட்டருக்கு 75 முதல் 100 கிராம் என்ற வகையில் குடிநீரில் இட்டு சுமார் பத்து மணி நேரம் ஊறவைக்க வேண்டும். வேர்த்துண்டுகள் நன்கு ஊறிய ஊறல் நீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த ஊறல் நீரில் தினமும் இரு வேளையும் வாய் கொப்பளித்துவர வேண்டும். அல்லது ஒரு சிறிய வேர்த் துண்டை வாயில் வைத்து மென்றுவர வேண்டும். அக்கராகார வேரினை இவ்வாறு பயன்படுத்தி வருவதால் உள்நாக்கு வளர்ச்சி, தொண்டைக் கம்மல், நாக்கு அசைவற்றுப் போகுதல், காய்ச்சலினால் ஏற்படும் வறட்சி ஆகியவை நீங்கும்.
வலிப்பில் இருந்து விடுதலை பெற...
சுத்தம் செய்து உலர்த்திய அக்கராகார வேரினை நன்கு இடித்துத் தூளாக்கித் துணியால் சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தத் தூளை மூக்கில் வைத்து உறிந்தால் காக்கை வலிப்பால் உண்டாகும் நரம்புப் பிடிப்பு குணமாகும்.
பல் வலி நீங்க...
அக்கராகார வேர்த் தூளை 30 கிராம் அளவு எடுத்துக்கொண்டு அதனை ஒரு லிட்டர் குடிநீரில் இட்டு, கால் லிட்டர் அளவு ஆகும் வரை நன்கு கொதிக்கவைக்க வேண்டும். காய்ச்சிய அந்த வேர்க் கஷாயத்தை வடிகட்டி, ஆறவைத்துக்கொள்ள வேண்டும். இதைப் பயன்படுத்தி ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வர வேண்டும். இதனால் பல் வலி நீங்குவதோடு பல் ஆட்டமும் குறையும். அதோடு வாய், தொண்டை ஆகியவற்றில் புண்கள் இருந்தாலும் குணமாகிவிடும்.

தளகண்டாவிழ்தம் :- அக்கரகாரம், அதிமதுரம், சுக்கு, சிற்றரத்தை, கிராம்பு, திப்பிலி, திப்பிலிமூலம், பவளம், மான்கோம்பு, ஆமைஓடு இவைகளை தனித்தனி சந்தனக் கல்லின் பேரில் தாய்ப்பால் விட்டு ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு புளியங்கொட்டைப் பிரமாணம் சந்தனம் போலுறைத்து ஒரு கோப்பையில் வழித்துச் சேகரமு செய்யவும். அப்பால் முன் போல் அந்தச் சந்தனக் கல்லின் பேரில்தாய்ப் பால் விட்டு உத்திராட்சம், பொன், வெள்ளி, இவைகளிலொவ் வொன்றையும் 30 - 40 சுற்றுறையாக உறைத்து அதனாலேற்பட்ட விழுதையும் வழித்து முன் சித்தப் படுத்திய கோப்பையில் சேர்க்கவும். இதற்குமேல் கறுப்புப் பட்டுத் துணியில் மயிலிறகை முடிச்சுக் கட்டித்தேனில் தோய்த்து ஒரு காரம் படாத சட்டியின் மத்தியில் வைத்து அடுப்பிலேற்றி எரித்து நன்றாகக் கருகின பின் அதனில் அரைவிராகனெடை நிறுத்து ஒரு கல்வத்தில் போட்டு அத்துடன் முன்கோப்பையில் சித்தப்படுத்தி வைத்துள்ள கற்கத்தை வழித்துப் போட்டு அப்பட்டமான தேன் விட்டுக் குழம்புப் பதமாக அரைத்து வாயகண்ட கோப்பையில் பத்திரப படுத்துக. வேண்டும் போது விரலாலெடுத்து நாவின் பேரில் அடிக்கடி தடவிக் கொண்டு வர சுர ரோரகத்தில் காணும் நாவறட்சி, விக்கல், வாந்தி, ஒக்காளம், இவை போம். இன்னும் சில நூல்களில் இச்சரக்குகளுடன் வில்வப் பழத்தின் ஓடு, விழாம் பழத்தின் ஓடு இவற்றை உறைக்கும் படி கூறப் பட்டிருக்கின்றன. இவையும் நற்குணத்தைக் கொடுக்கக் கூடியனவே.

அக்கரகார மெழுகு :-அக்கரகார கழஞ்சி 10, திப்பிலி கழஞ்சி 7,கோஷ்டம் கழஞ்சி 4, சிற்றரத்தை கழஞ்சி 8, கிராம்பு கழஞ்சி 7, இவைகளைத் தனித்தனி இடித்துச் சூரணம் செய்து கல்வத்திலிட்டு அதனுடன் சிறு குழந்தைகளின் அமுரியால் (மூத்திரம்) 2 நாழிகை சுறுக்கிட்டு 2 விராகனெடை பூரத்தைக் கூட்டி தேன் விட்டுக் கையோயாமல் மெழுகு பதத்திலேயே 2 சாமம் அரைத்து வாயகண்ட சீசாவில் பத்திரப் படுத்துக. இதனை வேளைக்கு அரை அல்லது ஒரு தூதுளங்காய்ப் பிரமாணம் தினம் இரு வேளை மூன்று நாள் கொடுக்க எரிகுன்மம், வலிகுன்மம், நாவின் சுரசுரப்பு, தோஷாதி,சுரங்கள் தீரும். இந்த மெழுகை நீடித்துக் கொடுக்கக் கூடாது. நோய்பூரணமாகக் குணமாகாவிடில் மீண்டும் ஒரு வாரம் சென்ற பின்கொடுத்தல் நன்று. ( இம்மருந்தை உண்ணும் காலத்தில் புளி தள்ளி இச்சாப் பத்தியமாக இருத்தல் வேண்டும

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...