Skip to main content

கூடாத நாட்களில் செய்யக் கூடாதவை

உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் கர்மா என்பது உண்டு;நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் அஷ்ட திக் பாலகர்கள் ஒவ்வொரு நொடியும் கண்காணித்து வருகின்றார்கள்;இவர்களுக்கு நவக்கிரகங்கள் துணையாக இருக்கின்றன;பகல் பொழுது சாட்சியாக சூரியனும்,இரவுப் பொழுது சாட்சியாக சந்திரனும்,நட்சத்திரங்களும் இருக்கின்றன;

மனிதர்கள் கணக்கு தப்பும்;கடவுள் கணக்கு கச்சிதமானது;எந்த ஒரு கொம்பனும், ஜின்  மந்திரவாதியும் சிறிதும் தப்ப முடியாது;

அசுபதியில் துவங்கி ரேவதி வரை இருக்கும் 27 நட்சத்திரங்களும் நல்ல நட்சத்திரங்களே;ஞாயிற்றுக்கிழமை துவங்கி சனிக்கிழமை வரை இருக்கும் ஏழு கிழமைகளும் நல்ல நாட்களே! 

குறிப்பிட்ட நட்சத்திரம்,குறிப்பிட்ட கிழமையில் உதயம் ஆகும் போது அது கூடாத நாளாக மாறிவிடுகின்றது;இதை தவ ஆற்றலால் கண்டுபிடித்தவர் சிலாதர் மகரிஷி;அப்படி கண்டுபிடித்த ஜோதிட+ஆன்மீக உண்மைகளை  மனித குல நன்மைக்காக நமக்கு தொகுத்து அளித்தவர் அகத்தீசர்!

ஞாயிற்றுக்கிழமையும் பரணி நட்சத்திரமும்
திங்கட்கிழமையும் சித்திரை நட்சத்திரமும்
செவ்வாய்க்கிழமையும் உத்ராடம் நட்சத்திரமும்
புதன் கிழமையும் அவிட்டம் நட்சத்திரமும்
வியாழக்கிழமையும் கேட்டை நட்சத்திரமும்
வெள்ளிக்கிழமையும் பூராடம் நட்சத்திரமும்
சனிக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும்
இவைகள் தான் கூடாத நாட்களின் பட்டியல்;இது பற்றி புராணக் கதைகளும் இருக்கின்றன;

இந்த நாட்களில் தம்பதியாக வாழ்ந்து வருபவர்கள் குழந்தைக்காக தாம்பத்யம் செய்யாமல் இருப்பது அவசியம்;இல்லாவிட்டால்,ஆன்மீக சிந்தனை கொண்ட குழந்தை பிறக்காது;வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு நாளும் தகாத செயல்களைச் செய்யும் குழந்தை தான் பிறக்கும்;புராண காலத்திலேயே சில ரிஷிகளுக்கு இப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்திருக்கின்றன;

இந்த நாட்களில் திருமணம் செய்யக் கூடாது;புதுமனை புகுவிழா வைக்கக் கூடாது;கடன் வாங்கக் கூடாது;கடன் கொடுக்கக் கூடாது;வேலையில் சேரக் கூடாது;தொழில் நிறுவனம் ஆரம்பிக்கக் கூடாது;வீடு கட்ட ஆரம்பிக்கக் கூடாது;நகை வாங்கக் கூடாது;கும்பாபிஷேகம் செய்யக் கூடாது;பாலாலயம் செய்யக் கூடாது;

இந்த நாட்களில் கோவிலுக்குச் செல்லலாம்;புதிய வழிபாடு ஆரம்பிக்கலாம்;
இந்த நாட்கள் முழுவதும் இறைவழிபாட்டுக்கு ஒதுக்குவது அவசியம்;

இந்த நாட்களில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் தகாத செயல்கள் செய்தவர்களாக இருக்கின்றார்கள்;இப்பிறவியில் ஆன்மீகத்தை முகமூடியாக அணிந்து கொண்டு சமுதாயத்திற்கு தீங்கு செய்துகொன்டு  இருக்கின்றார்கள்;வெகு சிலர் மட்டுமே உண்மையான ஆன்மீகத் தேடலுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்று சித்தர் பெருமக்கள் தெரிவிக்கின்றார்கள்;இவர்களுக்கு ஒரு பரிகாரம் தெரிவித்துள்ளார்கள்:

தமது வாழ்நாள் முழுவதும் சுயம்பு லிங்கமாக இருக்கும் ஆலயத்தில் திருப்பணிகள்,உழவாரப் பணிகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்;

இன்றைய காலகட்டத்தில் அடிக்கடி அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வெவ்வேறு ஊர்களுக்குப் பயணிக்கும் சூழ்நிலைதான் பலருக்கு இருக்கின்றது;எந்த ஊருக்குச் செல்கின்றார்களோ,அங்கே இருக்கும் சுயம்பு லிங்கம் கோவிலில் அறப்பணிகள் செய்து வர வேண்டும்;

1940 முதல் 1980 வரை இம்மாதிரியான அமைப்பில் பல கோடி பேர்கள் பிறந்துள்ளார்கள்:பஞ்சாங்கத்தை ஆய்வு செய்து பார்த்ததில் தெரிகின்றது;இவர்கள் பெரும்பாலும் நாத்திக அமைப்புகளில்,அறக்கட்டளைகளில்,கட்சிகளில் இருந்து கொண்டு நமது சனாதன தர்மத்திற்கு மகத்தான தீங்குகள் செய்து கொண்டு இருக்கின்றார்கள்;இதை(பல ஆண்டுகள் போராடி) மிகவும் சிரமப்பட்டு தான் கண்டுபிடிக்க முடிந்தது;இக்கட்டுரையை வாசித்த பின்னராவது தெய்வீக காரியங்களுக்கு தடங்கல் செய்யாமல் பக்திக்கு வரும்படி கேட்டுக் கொள்கின்றோம்; 

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...