Skip to main content

தேரையர் அருளிய தாதுபுஷ்டி லேகியம்

தாது என்றால் நமது உடலில் உள்ள நரம்பு ஆகும். ஆணின் சுக்கிலத்தையும்(விந்து) தாது எனச் சொல்வதுண்டு. தாது புஷ்டி லேகியம் என்பதை நரம்புகளை வலிவாக்கி உடல் உறுப்புகளை பொலிவாகவும் மிளிரச் செய்யும் மருந்து என பொருள் கொள்ளலாம். நவீன அலோபதி மருத்துவத்தில் உள்ள வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளைப் போல ஒன்றுதான் இந்த தாது புஷ்டி லேகியம். இதனை ஆண்,பெண் இருபாலாரும் பயன்படுத்தலாம்.

தாம்பத்திய உறவு சிறக்க, குழந்தைப் பேறு கிடைக்க இந்த தாது புஷ்டி லேகியம் வாராது வந்த மாமருந்து என்பது மாதிரியான விளம்பரங்களை இன்றைக்கும் நாளிதழ்களில் நாம் பார்க்கக் கூடியதாய் இருக்கிறது.உடலை உறுதி செய்து உவப்புடன் வாழ்ந்திட நமது முன்னோர்கள் உருவாக்கிய இந்த மருந்தினைக் குறித்த இது மாதிரியான பல தவறான கருத்தாக்கஙக்ள் நம்மிடையே இருப்பது வருத்தமான உண்மை.

எனவே இந்த தாது புஷ்டி லேகியத்தை நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மருந்து என்கிற வகையில் அணுகுவதே சரியானதாக இருக்கும். தாது புஷ்டி லேகியம் பற்றி பல் வேறு சித்தர் பெருமக்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அதன் தயாரிப்பு முறைகளும் அவர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றும் தனித்துவமானவை, வேறுபட்டவை. அவரவரின் உடலின் தன்மை மற்றும் குறைபாடுகளைப் பொறுத்து இந்த லேகியத்தின் தயாரிப்பு முறைகள் மாறுபடும். இந்தத் தகவல் தேரையர் அருளிய “தேரையர் வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

"காத்திடுவாய் கருவேலின்பசை தானுங்கொள்
கைமுறையாய்ச் சொல்கிறேன் பலமிரண்டு
பாத்திடுவாய் சுக்கொடு சர்க்கரை பேரீச்சம்பழம்
பாகுவெந்தயம் கொப்பரைத் தீக்காட்டி
சேத்திடுவாய் வகையொன்று பலமே யொன்று
திறமாக வடிசெய் கோதுமைப் பொரிமா
யேத்திடுவாய் பலமெட்டு பனைவெல்லம்தான்
யெட்டுப் பலம் பாகுபிடித் தூளைப்போடே."

"போட்டடா லேகியம் போலக் கிண்டி
புகழான ஆவின்நெய் பலம்நால் விட்டு
ஆட்டடா எலுமிச்சங்காய் போலந்தி
அப்பனே மண்டலமோ ரரைதான் கொள்ளு
ஓட்டடா கிரந்தி வெள்ளை யிடுப்பு நோய்தான்
உத்தமனே தாதுபுஷ்டி மிகவுண்டாகும்
மாட்டடா நெய்யன்னம் வெல்லத்தோ டுண்ணு
மாதர் மயக்கம் புளிமண்டலமே தள்ளு."

கருவேலம் பிசின் இரண்டு பலம், சுக்கு, சர்க்கரை, பேரீச்சம் பழம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றில் வகைக்கு ஒரு பலம் வீதம் எடுத்து, அவற்றை ஒன்று சேர்த்து கல்வத்தில் இட்டு நன்கு இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து எடுத்துக் கொள்ளவேண்டுமாம் (இதுவே சூரணம் எனப்படும்). பிறகு ஒரு மண் பானையில் எட்டு பலம் பனைவெல்லத்தையும் இட்டு அடுப்பில் வைத்து எரிக்க பனைவெல்லம் உருகி பாகு பத்தில் வருமாம். அப்போது முன்னர் சலித்து எடுத்து வைத்த சூரணத்தை சிறிது சிறிதாக பானையில் போட்டு கிண்ட வேண்டுமாம்.

அது சற்று இறுகிய நிலையில் வந்ததும் அதனுடன் பசுவின் நெய் நான்கு பலம் விட்டுக் கிண்டி அடுப்பில் இருந்து இறக்கி ஆறவைத்து, சேமித்துக் கொள்ளவேண்டுமாம். இதுவே தேரையர் அருளிய தாது புஷ்டி லேகியம்.இந்த தாதுபுஷ்டி லேகியத்தில் எலுமிச்சம் காய் அளவுக்கு  எடுத்து காலை மாலை என்று இரு வேளையாக, தொடர்ந்து இருபத்தி நான்கு நாட்கள் சாப்பிட்டு வரவேண்டுமாம்.

இதனால் தாதுபுஷ்டி உண்டாகுமாம். அது தவிர கிரந்தி, வெள்ளை, இடுப்பு நோய் போன்றவைகளும் குணமாகும். பத்தியமாக சாதத்தில் நெய், வெல்லம் சேர்த்து சாப்பிடவும். புளியையும், பெண் சேர்க்கையும் மருந்துண்ணும் நாட்களில் இருந்து நாற்பத்தெட்டு நாட்கள் நீக்கிவிடவேண்டும் என்கிறார்.

குறிப்பு :- ஒரு பலம் என்பது தற்போதைய அளவுகளில் 35 கிராம் ஆகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...