"வாழைப் பழந்தின்றால் வாய்நோகு மென்றுசொல்லித்
தாழைப் பழத்தின்று சாவெனக்கு வந்ததடி
தாழைப் பழத்தைவிட்டுச் சாகாமற் சாகவல்லோ
வாழைப் பழந்தின்றால் என் கண்ணம்மா!
வாழ்வெனக்கு வாராதோ!"
- அழுகணிச் சித்தர் -
அழகு அணிச் சித்தர் என்பது நாளடைவில் திரிந்து அழுகணிச் சித்தர் என்று ஆகிவிட்டது.
இவருடைய பாடல்களில் அணி அழகாக அமைந்து இருப்பதால் அழகு அணிச் சித்தர் என்ற பெயர் இவருக்கு வந்ததாக கூறுவார்கள்.
இவருடைய பாடல்களில் யோகம் பற்றிய அழமான கருத்துக்களே அதிகமாக உள்ளது. இந்தக் கருத்துக்கள் அனைத்தும் படிப்பவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ, பாடல்களின் சந்தம் படிப்பவர்களை மயக்கும் விதத்தில் உள்ளது என்பது என்னமோ உண்மை.
பொதுவாக இவர் தனது பாடல்களில் "உன்னை அறியாமல் உலகத்தில் உள்ளவைகளை அறிவதால் எந்தவிதப் பயனுமில்லை" என்னும் கருத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.
இவர்,
அழுகணி சித்தர் பாடல் 200
ஞான சூத்திரம் 23
அழுகண் வைத்தியம்
அழுகண் யோகம்
அழுகண் ஞானம்
ஆகிய நூல்களை இயற்றியதாக சொல்லப் படுகிறது.
நாகப் பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் இவர் சமாதி இன்றும் உள்ளதாக சொல்லப்படுகிறது.
அழுகணிச் சித்தர் ஜீவசமாதி...

Comments
Post a Comment