Skip to main content

குரு வணக்கம்

சித்தர்களின் மரபியல் குரு, சிஷ்ய பாரம்பரியத்தின் மீது கட்டமைக்கப் பட்டது. இங்கே குருவே எல்லாவற்றுக்கும் மேலானவராகவும், இறை நிலைக்கு இனையானவராகவும் வைத்துப் போற்றப் படுகின்றனர். குருவை வணங்குவதும் அவர் வழி நிற்றலுமே மேன்மையாக போற்றப் பட்டிருக்கிறது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த பாரம்பர்யத்தை அறிந்து தெளிய நினைக்கும் எவரும் குரு வழிபாட்டினைப் பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

சித்தர்களின் எந்த ஒரு செயலும், முயற்சியும் தங்களின் குருவினை முன் வைத்தே துவங்கியிருக்கின்றனர். ஒவ்வொரு சீடரும் தன் குருவினை தியானிக்கவும், வணங்கிடவும் தனித்துவமான சூட்சும மூல மந்திரங்களை பயன் படுத்தினர். இதன் பின்னால் இருக்கும் மகத்துவம் நமக்கு பிடிபடாவிடினும் இதன் காரண காரியங்களை குருமுகமாக நிச்சயம் பெற இயலும்.
நந்தீசர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி!"

அகத்தியர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”

திருமூலர் மூல மந்த்திரம்...
"ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி!"

போகர் மூல மந்திரம்...
"ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி!"

கோரக்கர் மூல மந்திரம்...
“ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி!"

தேரையர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லபம் நசீம் ஸ்ரீ தேரைய சித்த சுவாமியே போற்றி!"

சுந்தரானந்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி!"

புலிப்பாணி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலீம் ஸ்ரீ புலிப்பாணி சித்த சுவாமியே போற்றி!"

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி!"

காக புசண்டர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்வம் ஸ்ரீ காக புசண்ட சித்த சுவாமியே போற்றி!"

இடைக்காடர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி!"

சட்டைமுனி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி!"

அகப்பேய் சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ அகப்பேய் சித்த சுவாமியே போற்றி!"

கொங்கணவர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி!"

சிவவாக்கியர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி!"

உரோமரிஷி மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் கிலம் ஸ்ரீ உரோம ரிஷி சுவாமியே போற்றி!"

குதம்பை சித்தர் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி!"

கருவூரார் மூல மந்திரம்...
"ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி!"

குரு வணக்கமும், சித்தர் வணக்கமும் ஒன்றா?, என நேற்று நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் சந்தேகம் எழுப்பி இருந்தார். அது பற்றிய சில விவரங்களை தந்துவிட்டு நமது குரு வணக்கத்தை தொடர விரும்புகிறேன்.

சித்தர் வணக்கம் என்பது குழந்தைகள் குருகுல வாசத்தினை ஆரம்பிக்கும் போது குருவானவர் ”சித்தர் வணக்கம்” என்கிற மந்திரத்தை உச்சரித்து துவங்குவார். ‘‘ஹரி நமோத்து சிந்தம்’’ என்பதே சித்தர் வணக்க மந்திரம். நமக்கு முந்தைய தலைமுறை வரையில் பின்பற்றப் பட்ட இந்த பழக்கம் சமீப காலத்தில் வழக்கொழிந்து போய்விட்டது. மற்றபடி இந்த சித்தர் வணக்கத்துக்கும், சித்தர்கள் மரபியலுக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.

இன்னமும் துல்லியமாக சொல்வதானால் இந்த சித்தர் வணக்கம் சமண மதத்தோடு தொடர்புடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் நூலில் கடவுள் வாழ்த்தாக முதல் பாடலை சித்தர் வணக்கம் என்று பின்வருமாறு எழுதியிருக்கிறார்.

"மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே"

எனவே இந்த சித்தர் வணக்கத்திற்கும் நாம் எழுதிக் கொண்டிருக்கும் குரு வணக்கத்திற்கும் தொடர்பில்லை.

சித்தர்களுக்கான மூல மந்திரங்கள் ஒவ்வொன்றும் தொடர்புடைய சித்த புருஷர்களை என்றும் தங்கள் தொடர்பில் வைத்திருக்க சீடர்கள் பயன்படுத்திய சூட்சுமமாகவே கருதப் படுகிறது. இந்த மந்திரங்களை முறையாக பயன் படுத்துவதன் மூலம் தாங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு செயலுக்கும் தங்கள் குருநாதரின் அருளும், ஆசியும் கிடைப்பதுடன்....சமயங்களில் அவர்களை நேரடியாக தரிசிக்கும் வாய்ப்புக் கூட கிட்டுமாம்.

குரு வணக்கமும்... குரு தரிசனமும்...!

ஆத்ம சுத்தியுடன், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாது குருவருளை நாடுவோர் மட்டுமே இத்தகைய முயற்சிகளில் ஈடுபட வேண்டும். கபட எண்ணங்களை முன்வைத்து செய்யப்படும் முயற்சிகள் தோல்வியில் முடியும். சித்தர்கள் என்பவர்கள் ஆசாபாசங்களை கடந்தவர்கள். வழிபாடுகள் என்கிற பெயரிலான ஆராதனைகளை அவர்கள் விரும்புவதும் இல்லை, ஏற்றுக் கொள்வதுமில்லை. ஆனால் இன்றைக்கு பலர் ஆயிரத்தெட்டு போற்றிகளை கொண்ட பூசை முறைகளை சித்தர்களுக்கானது என கூறிவருகின்றனர்.

இனி வணங்கும் முறையினை பார்ப்போம்....

அமைதி நிறைந்த தூய்மையான, வெளிச்சம் மிகுந்த அறையொன்றில், கிழக்கு முகமாய் நாம் வணங்க விரும்பும் சித்தரின் படம் ஒன்றினை வைத்து, அதன் முன்னால் ஒரு திரியினைக் கொண்ட விளக்கு ஒன்றினை ஏற்றி வைத்திட வேண்டும். சுத்தமான குவளை ஒன்றில் நீர் நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு அங்குலம் விட்டமும் மூன்று மில்லிமீட்டர் தடிப்பான ஒரு செப்பு நாணயம் ஒன்றை சித்தர் படத்தின் முன்னர் வைத்திட வேண்டும்.

இப்போது சித்தரின் படத்திற்கு முன்னால் ஒரு துணி விரித்து அதில் பத்மாசனத்தில் அமர வேண்டும். பத்மாசனத்தில் அமர சிரமப் படுவோர் சாதாரணமாக அமர்ந்து கொள்ளலாம். மூச்சினை சீராக்கி, உடம்பை தளர்த்தி அமைதி நிலைக்கு வர வேண்டும். இந்த தருணத்தில் முந்தைய பதிவில் நாம் குறிப்பிட்ட மூல மந்திரத்தினை (நாம் வைத்த படத்திலுள்ள சித்தருக்குரிய) நூற்றியெட்டு முறை மனதில் மட்டுமே ஜெபிக்க வேண்டும். இந்த முறையில் தினமும் சூரிய உதயத்தின் போதும், அஸ்மனத்தின் போதும் தொடர்ந்து தினசரி இரண்டு முறை செய்திட வேண்டும்.

இந்த பூசை முறையில் சிலவற்றை ஒழுங்குடன் செய்தல் வேண்டும். ஒவ்வொரு முறையும் குரு வணக்கத்திற்கு முன்னர் குவளையில் புதிய நீர் நிரப்பிட வேண்டும். எக்காரணம் கொண்டும் மலர்களையோ, பழங்கள் அல்லது உணவு பொருட்களை படையல் போடுவது போன்றவற்றை செய்திடக் கூடாது. சித்தர்கள் புறவழிபாட்டினை வெறுப்பவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த முறையில் குரு வணக்கத்தினை எத்தனை ஆர்வத்துடனும், ஆத்ம சுத்தியுடனும் செய்து வருகிறோமோ அத்தனை விரைவில் நாம் வணங்கும் சித்தரின் அருளாசி கிடைக்கும். நமது முயற்சியின் தீவிரத்தினை பொறுத்து குறிப்பிட்ட அந்த மகா புருஷரின் திருவுருவ தரிசனமும் கிடைக்குமாம்.

மெய்யான குருவருள் நாடுவோருக்கு இந்த முறை கிடைத்தற்கரிய ஒரு வாய்ப்பு.

குருவின் பாதம் பணிவோம்.

ஆன்மிகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரணநிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேதான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்றுநோக்கி உறையவும் தெளியவும்  மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகிறது.

இந்த பரிபூரண நிலையே  சித்த நிலை அல்லது சமாதி என்கிறோம். சித்தநிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது.. கருணையும், அன்பும் பெருகியநிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரியநிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்களே குரு எனச் சொல்லிக் கொள்வதுமில்லை. அல்லது தங்களுக்கென குருபீடம் அமைத்துக் கொண்டு பொய்யான மதங்களையும், மந்தைகளையும் உருவாக்குவதுமில்லை. அப்படி செய்கிறவர்கள் போலியானவர்கள்..

தகுதியானவர்கள் ஞானத்தேடலை உணர்ந்த  மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழிநடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ளமனமின்றி பற்றி பணிந்து பயன்பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டி சித்தர்.

"உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக் குருவைக்
கள்ளமனந் தன்னைகத் தள்ளிக்கண்டு கொண்டன்பாய்க்
களித்துக் களித்து நின்று ஆடுபாம்பே".

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...