Skip to main content

ஆலமரம் Ficus Benghalensis

ஆலமரம் Ficus Benghalensis L,; Moraceae
வளரியல்பு; கிளைகளிலிருந்து விழுதுகளுடன் கூடிய பெரு மரம்.
இலை; மாற்றடுக்கில் அகலமானவை
மருத்துவ பாகம் ; இலை,பூ,பழம்,விதை,பட்டை,வேர்,விழுது,பால்.
செய்கை ; விழுது, பட்டை, இலை –சங்கோசனகாரி, பலகாரி, விதை –,காமவிர்த்தினி,  பால் – சங்கோசனகாரி, சீதளகாரி, பலகாரி, காமவிர்த்தினி
மருத்துவ குணம் ; பால் – பிரமேகம் நீக்கும், குளிர்ச்சி தரும், பல் இறுக்கும், தாதுபுஷ்டி உண்டாக்கும். கொளுந்து இரத்த அதிசாரம் போக்கும், புல்லுருவி விஷபாக ரோகம் நீக்கும்.

ஆலம்பால்மேக மறுத்தசையும் பல்லிறுக்குங்
கோலமுடிக்குக் குளிர்ச்சிதரும் – ஞாலமதின்
மெத்தவுமே சுக்கிலத்தை விருத்தி செய்யுந்
தப்பாமற் சுத்தமதி சொல்.
- ஆலம்பால் பிரமேகத்தை நீக்கும், ஆடும் பற்களை இறுகச் செய்யும்.சிகைக்குக் குளிர்ச்சியைத் தரும்.தாது புஷ்டியுண்டாக்கும்.

சொல்லுகின்ற மேகத்தைத் துஷ்ட வகக்கடுப்பைப்
கொல்லுகின்ற நீரிழிவைக் கொல்லுங்கா –ணல்லாலின்
பாலும் விழுதும் பழமும் விதையும்பூவும்
மேலுமிலையுமென விள்
- ஆலமரத்தின் பால், விழுது, பட்டை, பழம், விதை, பூ, இலை இவற்றால் பிரமேகம், வயிற்றுக்கடுப்பு, மேகநீர் இவை நீங்கும்.

வடமரவீழ் பல்லிறுக்கு மாமேகம் போக்கு
மடர்கொழுந்தி ரத்தப்போக் காற்றும்-படரதிலாம்
புல்லுருவி யொன்றெய்திற் பொல்லா விடபாக
வல்லுருவி லுண்மை மதி
- ஆல மரத்தின் விழுது தந்தங்களை இறுகச் செய்யும்.பிரமேகத்தை நீக்கும்.இந்த மரத்தில் முளைத்த புல்லுருவியால் விஷபாக ரோகம் நீங்கும்.

  1. பழத்தை உலர்த்தி பொடி செய்து சர்க்கரை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வர  மூலம் குணமாகும்.
  2. மரப்பட்டை,வேர்ப்பட்டை,மொட்டு,கொளுந்து,பழம்,விழுது வகைக்கு 40கிராம், 4ல் 1ன்றாய்க் காய்ச்சி,250மிலி காலைமாலை குடித்துவர மேக எரிச்சல், மேகப்புண்,மேக ஒழுக்கு(White discharge)தீரும்.
  3. பால் 20 துளி சர்க்கரையுடன் காலையில் சாப்பிட்டு புளி,காரம் நீக்க ஒரு மண்டலத்தில் கொறுக்கு தீரும்.
  4. பாலை காலைமாலை தடவிவர வாய் ரணம், நாக்கு உதடு வெடிப்பு, கைகால் வெடிப்பு, பல் ஆட்டம் தீரும்.
  5. ஆலம்பட்டை, அத்திப்பட்டை, அவுரி வேர்பட்டை வகைக்கு 40கிராம்,10 மிளகுடன் இடித்து , 8லி நீரில் 2லி ஆகக் காய்ச்சி, வேளைக்கு250மிலி தினம் 3வேளை குடித்துவர ரச பாஷாணவீறு தணியும்.
  6. மரபட்டை, வேர்பட்டை வகைக்கு 200கிராம் சிதைத்து 4லி நீரிலிட்டு காய்ச்சி தினம் காலை ஒருகுவளை 1-4 மண்டலம் குடித்துவர மதுமேகம் (Diabaties) குணமாகும். (4 நாட்களுக்கு ஒருமுறை தயார் செய்து கொள்ளலாம்)
  7. பழம், விழுது, கொளுந்து சம அளவு அரைத்து 30கிராம் காலை மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர 120 நாளில் விந்து அணுக்கள் உற்பத்தி ஆகும்.
  8. விழுது துளிர், விதை அரைத்து 5கிராம் பாலில் 5-7நாள் சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும்.வெட்டை, மேகம், உடல் எரிவு,காங்கை தீரும்.
  9. துளிர் இலை அரைத்து 5கிராம் தயிரில்கலந்து கொடுக்க இரத்தபேதி, இரத்த அதிசாரம் நிற்கும்.
  10. விழுதைக் கொண்டு பல் துலக்க பற்கள் உறுதிப்படும்.
  11. விழுதுநுனி கொளுந்துச் சாற்றில் ஜவ்வரியை ஊறவிட்டுலர்த்தி கஞ்சி அல்லது அல்வா செய்து சாப்பிட தாது பலப்படும்.
  12. பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொள்ள பல்வலி தீரும்.                                                  
  13. அத்தி, ஆலம், அரசு, விதைகளை சம அளவில் பொடித்து அல்லது பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலை உரமாக்குகிறது.தாது விருத்தியாகும்.
  14. விதையுடன் அரசம்விதை சேர்த்து பால் விட்டரைத்து 5 கிராம் 5-7 நாள் கொடுக்க இரத்தக்கக்கல் நீங்கும்.தாது பலப்படும்.
  15. பட்டை 40-60கிராம் 500மிலி நீரிலிட்டு 150மிலியாக்கி வடித்து பனங்கற்கண்டு சேர்த்து காலைமாலை பருகிவர பிரமேகம்,இரத்தப்பிரமேகம்,நீர்கடுப்பு நீங்கும்.
  16. மரத்தின் புல்லுருவியை ஞாயிற்றுக்கிழமை சூரியன், சந்திரன், புதன் ஒரே ராசியில் இருக்கும்போது காப்புகட்டி எடுத்துவந்து தேள் முதலிய விஷம் தீண்டிய இடத்தில் சுத்தமான நீரில் உரைத்துப்போட விஷமிறங்கும்.
  17. பாலை வாயிலிட்டு கொப்புளித்து சிறிதுநேரம் அடக்கிவைத்து துப்ப நா ரணம் ஆறும்.
  18. பாலுடன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க பிரமேகம்,தாதுக் குறைவு நீங்கும்.
  19. விழுது துளிரை அரைத்து கொட்டைப்பாக்களவு,தயிரில் கலந்து கொடுக்க இரத்த அதிசாரம் நீங்கும்.
  20. ஆல்,அரசு,இச்சி வித்து சூரணித்து இலேகியம் கிளரி சாப்பிட தாது விருத்தியாகும்.
  21. விழுது துளிர், விதை பாலில் அரைத்துக்ழற்சிக்காய் அளவு தினம் 1வேளை 5-7 நாள் பாலில் கொடுக்கப் பால் சுரப்புண்டாகும். வெட்டை, மேகம், உடல் எரிவு, காங்கை முதலியவை தீரும்.
  22. பாலை கால் வெடிப்புகளுக்குப் போட்டுவர வேதனை தணிந்து ஆறும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...