Skip to main content

அவுரி Indigoferra tinctoria


அவுரி என்னும் நீலியடா அவள் 64 பேரைக் கொண்டவளடா -பழமொழி-
நீலி, சாய வேர் முதலாய 64 பெயர்கள் உண்டு
வளரியல்பு ; சிறு செடி
இலை அமைப்பு ; கரும்பச்சை
மருத்துவ பாகம் ; சமூலம்
குணம் ; தீர்க்கும் நோய்கள்
இலை
"உரியவு ரித்தழைதானோது பதிணெண்
ணரிய நஞ்சைத் தின்றவர்க்கு மாகுந் – தெரிவரிய
வாதவெப்பு காமாலை மைந்தர்க் குறுமாந்தஞ்
சீதமகற்றுந் தெளி."
"சந்நி பதின்மூன்றுஞ் சந்தொடித்த வாதமுத
லுன்னு விஷக்கடியு மோடுங்காண் – மின்னுங்
கவுரிநிற முண்டாகுங் காசினியு ளேநல்
லவுரி யிலையா லறி"

செய்கை ; சோபாநாசினி, விஷநாசகாரி, வியதாபேதகாரி, மலகாரி, உற்சாககாரி.
அவுரி இலை தாவர கந்தமூல விஷங்கள் 18ம், வாதசுரம், காமிலம், மாந்தம், சீதளம், சந்நிபாதங்கள், கீல்வாதம், சர்ப்பவிஷம் இவற்ரை நீக்கும். தேகத்திற்குப் பொன் மேனியைத் தரும்.

வேர்
"எல்லா விஷங்களுக்கு மேற்ற முறிப்பாகும்
பொல்லாச் சுரமூர்ச்சை பொங்குவேட்டை நில்லாப் 
பவுரிதருங் குன்மமுதற் பன்னோ யொழிவு
மவுரி தருவேருக் கறி"

செய்கை ; விஷநாசகாரி.
அவுரி வேரினால் சர்வ விஷம், சுரம், மூர்ச்சை, வெள்ளை, வயிற்றுநோய் முதலிய பல ரோகங்கள் போம்.        
  1. இலையை அரித்து கொட்டைப் பாக்களவு காலை 200மிலி வெள்ளாட்டுப்பாலில் 3 நாள் கொடுக்க மஞ்சள்காமாலை, அந்திமாலை தீரும்.
  2. இலையை அரைத்து சிரங்குகளுக்குப் பூசி மாலை ஸ்நானம் செய்விக்க ஆறும்
  3. இலைச் சாற்றை உலர்த்திப் பொடித்தி சிரங்குகளின்மேல் தூவ ஆறும்.
  4. மேற்படி பொடியை 100மிகி ,நீரில் கலந்து தினம் 2 வேளை கொடுக்க ரத்தவாந்தி,காக்கைவலி, ஈரல்களின் வீக்கம், நரம்புகளைப் பற்றிய ரோகம் நீங்கும்.
  5. மேற்படி பொடியை சிற்றாமணக்கெண்ணையில் குழைத்து குழந்தைகளின் வயிற்ரைச் சுற்றி தடவ மலத்தை வெளியாக்கும்.
  6. இலை,கையாந்தகரை, குப்பைமேனி, கொட்டைக்கரந்தை, வல்லாரை, பொற்றலைக்கையாந்தகரை, செருப்படைபொடித்து சமன் கலந்து  திரிகடி, காலைமாலை, தேனில் கொடுத்துவர ஸ்திரிகளுக்குண்டான உதிரக்கட்டு, வயிற்றிலுண்டாகின்ற கிருமிக் கூட்டம், கீல்வாதம், சர்ப்பவிஷம் நீங்கும்.தேகம் பொன்மேனியாகும். இம்முறை கற்பத்தில் ஒன்று.இச்சா பத்தியம் புளி, புகையிலை, போகம் நீக்கவும்.
  7. வேரை அரைத்து நெல்லிக்காயளவு,200மிலி பசும்பாலில் கலந்து காலை 8 நாள் கொடுக்க விஷ சிலந்தி, எலிவிஷம் போம்.உப்பில்லாப் பத்தியம்.
  8. வேர்,சுக்கு வகைக்கு 10கிராம் இடித்து சுண்டக் காய்ச்சி கொடுக்க மருந்து வீறு தணியும்.
  9. வேர்ப்பட்டையுடன் மிளகு சேர்த்தரைத்து கொட்டைப்பாக்களவு,ஆவின் பால் அல்லது வெள்ளாட்டுப்பாலில் கொடுக்க விஷ செந்துக்களின் கடிவிஷமும்,நஞ்சுபொருள் விஷமும்,கரப்பான் வகைகளும் தீரும்.
  10. வேர் 20கிராம், அறுகம்புல் 30கிராம்,மிளகு 3, மையாய் அரைத்து புன்னைக் காயளவு தினம் 3 வேளை உப்பு, புளி நீக்கிச் சாப்பிட பாம்பு, தேள், பூரான், செய்யான் நஞ்சு நீங்கும். காலைமாலை சாப்பிட்டு இச்சாபத்தியமிருக்க மருந்து வேகம் தணியும்.
  11. வேர் 30கிராம்,பெருநெருஞ்சில் இலை 50கிராம் அரைத்து எலுமிச்சை யளவு மோரில் கொடுக்க வெள்ளை தீரும்.
  12. வேர்பட்டை,இலை,பொரித்த பெருங்காயம், மிளகு சமனரைத்து சுண்டைக்காயளவு மத்திரை செய்து தினம் 3 வேளை கொடுக்க நரம்புச் சிலந்தி, ஓடுவாயு கட்டிகள், கீல்வாதம் தீரும்.
  13. 1பிடி இலை, 2 சிட்டிகை சீரகம் 6 மிளகு இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து வேளைக்கு 2மடக்கு தினம் 4வேளை கொடுக்க வாதக்காய்ச்சல், சன்னிக்காய்ச்சல், கீல்வாதம், குன்மம், மாந்தம், காமாலை தீரும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...