Skip to main content

ஆமணக்கு Ricinus communis

ஆமணக்கு Ricinus communis L; Euphorbiaceae
இதனிற் சிற்றாமணக்கு, பேராமணக்கு என 2வகை உண்டு. சிற்றாமனக்கில் வெள்ளை சிவப்பு என 2 வகை உண்டு. அனைத்திற்கும் குணம் ஒன்றே என்றாலும் சிற்றாமணக்கு சிறந்தது என்பர்.
வளரியல்பு; உள்ளீடற்ற எளிதில் உடையும் குறு மரம்.
மாற்றுப்பெயர்; கொட்டைமுத்து
இலை; மாற்றடுக்கில் வெண்பூச்சுடைய கை வடிவ மடல்கள்.
காய்; முட்களுடன்கூடிய மூன்று விதைகளுடன் வெடித்துச் சிதறும்.
மருத்துவ பாகம்; வேர், இலை, விதை. செய்கை; இலை; க்ஷீரவர்தினி, சோபநாசினி. எண்ணை ;  மலகாரி (Laxative), சமனகாரி, வரட்சியகற்றி (Emollient)                      

ஆமணக்கு இலை Recinuscommunis leaves
மிக்கவெழுங் காமாலை மிஞ்சிமூ லக்கடுப்பும்
துக்கமிகு முந்திவலித் தொல்லைப்போம் –மக்கட்கு
நாமணக்கப் பாலூட்டும் நாரியற் குப் பாற்சுரக்கும்
ஆமணக்கின் சீரிலையா லாம்
- ஆமனக்கு இலையால் காமாலை,மூலக்கடுப்பு,வயிற்றுவலி போன்றவை நீங்கும்,தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.                                   

ஆமணக்கு நெய்(Castor oil)
ஆமணக்கு நெய்யா லனைவர்க்குமுண்டு நலம்
பூமணக்குமேனி புரிகுழலே வாய்மணக்க
கொள்ளில் வயிறுவிடுங் கோரமுள்ள வாயுவறு
முள்ளில் வருகுன்மம்போ மோர்
அம்பொனிற மும்விந்து மாங்குடலி நேற்றமது
மைம்பொறிச் சூடெரிவு மாறுங்காண் –அம்புவியிற்
பாமணக்கு மின்பமொழிப் பாவாய் நலஞ்செறிந்த
ஆமணக்கு நெய்யுண் டறி.
(பதார்த்தகுண சிந்தாமணி)
- எண்ணை; விரோசனித்து கோரவாதம், குன்மம், குடலேற்றம், தேகம், கண், மூக்கு, செவி, வாய் எரிச்சல் நீக்கும்.பொன் நிறமும்,தாது விருத்தி உண்டாகும்.

சிற்றாமணக்கு நெய் (Ricinis Communis Seed Oil)
மருந்தினழலும் வளியான்மூ லத்துட்
பொருந்து மழலுமறப் போக்குங் – குருந்திற்கு
நற்றா யெளவனர்க்கு நாளுமழ லைத்தணி
சிற்றாமணக்கின் நெய்தான் றேர்
- சிற்றாமணக்கு நெய் பற்பல ஔஷதங்களின் வெப்பங்களையும்,வாயுவினால் மூலத்திலுண்டாகின்ற உஷ்ணங்களையும் நீக்கும்.அன்றியும் சிசுக்களைத் தாய் வளர்ப்பது போல் உடலை வளர்ப்பிக்கும்.

1.   இலையை எரித்து சாம்பலை எடுத்து சுத்தமான தண்ணீரில் கரைத்து, தெளிவை வடிகட்டிக் காய்ச்ச கிடைக்கும் உப்பை ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நொய்க் கஞ்சியில் சிறிது பெருங்காயம் சேர்த்துக் கலந்து குடித்து வர உடம்பு இளைத்து மெலிய ஆரம்பிக்கும்.
2.   இதே உப்பு, பார்லி, நெல்லி முள் சூரணம் வகைக்கு ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர உடல் பருமன் குறைந்து வரும்.
3.   இலையில் நெய் தடவி அனலில் வாட்டி மார்பில் வைத்துக் கட்டி வரத் தாய்ப்பால் அதிகரிக்கும்.
4.   இலையைச் சின்னதாக அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுத்து கட்டி வர மூலக் கடுப்பு, கீல் வாதம், வாத வீக்கம் குணமாகும். மேலும் கீல் வாதங்களுக்கும்,வாதரத்த வீக்கங்களுக்கும் ஒற்றடம் கொடுத்து அதனையே வைத்துக் கட்ட குணமாகும்.
5.   துளிரை ஆமணக்கு எண்ணெய்யில் வதக்கித் தொப்புளில் வைத்து கட்ட, வெப்ப வயிற்று வலி குணமாகும்.
6.   இலையுடன் கீழாநெல்லி இலையைச் சமபாகமெடுத்து அரைத்து 30 கிராம் காலையில் மட்டும் 3 நாள் சாப்பிட்டு நான்காம் நாள் பேதிக்குக் கொடுக்க, காமாலை தீரும்.
7.   வேரை லேசாக நசுக்கி சிறிது தேனுடன் பிசைந்து கொஞ்சம் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து மறுநாள் காலையில் பிழிந்து சக்கையை நீக்கிவிட்டு நீரை மட்டும் 100 மில்லியளவு தினமும் காலையில் குடித்துவர வயிற்றின் பளுவும், உடல் பருமனும் வீக்கமும் குறையும்.
8.   விளக்கெண்ணெய் 30 மில்லியுடன் சிறிது பசும்பால் அல்லது இஞ்சிச்சாறு கலந்து குடிக்க நான்கைந்து முறை பேதியாகும். பசியின்மை, வயிற்று வலி சிறுநீர்ப்பாதை அழற்சி,வெட்டை,நீர்க்கடுப்பு,மாதவிடாய் கோளாறுகள், இரைப்பிருமல்,பாண்டு,ஆறாத கட்டிகள்,தொண்டை அழற்சி மூட்டுவலி குணமாகும்.
9.   விளக்கெண்ணெய் 1/2 – 1 தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுக்க மலம் இளக்கமாகி வெளியேறும்.
10.  குழந்தைகளுக்கு ஆமணக்கு எண்ணெய்யுடன் பேயன் வாழைப்பழத்தைத் துண்டு துண்டாக அரிந்து ஊறப் போட்டு கற்கண்டைப் பொடி செய்து கலந்து தினம் காலை 2 துண்டு வாழைப்பழமும் சிறிது எண்ணெய்யும் கொடுத்து வர சகல சூடும் தணிந்து ஆரோக்கியமாக வளரும்                             
11.  வயிற்று வலியால் துன்புறுவோருக்கு கொடுக்க, சாந்தமாய்ப் பேதியாகும்.
12.  கண்கள், மருந்து வேகத்தாலும், தூசுகள் விழுந்து அருகி சிவந்தாலும், சிற்றாமணக்கெண்ணை கண்ணிலிட, சிவப்பு மாறும்; அருகலும் குணமாகும்.
13.  தோல் நீக்கிய விதையை மெழுகுபோல் அரைத்துப் பற்றுப்போட ஆறாத புண்கள்ஆறும். கட்டிகள் பழுத்து உடையும்.மூட்டுவலி,கணுச்சூலை வீக்கம் குறையும்.
14.  வேரை அரைத்துப் பற்றுப்போட பல்வலி நீங்கும்.
15.  மலக்கட்டும், வயிற்று வலியும் உள்ளபோதும், சூதகக் கட்டு அல்லது சூதகத் தடையுடன் அடிவயிற்றில் வலிகாணும் போதும், அடிவயிற்றின் மீது சிற்றாமணக்கு எண்ணெயை இலேசாகத் தடவி, அதன் மீது சிற்றாமணக்கு இலையை வதக்கிப் போட்டுவர, அவைகள் குணப்படும்.
16.  விளக்கெண்ணெயுடன் துளசிச் சாறு, வெங்காயச் சாறு, எலுமிச்சைசாறு சம அளவு காய்ச்சி 15 மில்லி அளவு உட்கொண்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் அகலும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...