Skip to main content

சொறிசிரங்கு கரப்பான் தவளைச்சொறி தோல்நோய் scabies eczema phrynoderma dermatitis






ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி,எலி,பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை,மாதா,பிதாக்கள் மன நோக்காட்டாலும்,தெய்வ உருக்களை அழித்தலாலும்,பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.
தோலைப் பற்றிய 18வகை சொரிப்படைகளைக் கூறுவது கிரந்தி என்று அறிக. 
கருங்கிரந்திகுணம்: தேகத்தில் எரிவு தினவு கண்டு கறுப்பாய் தடித்ததில் அடிக்கடி செம்முளை போல் தோன்றி நீர்கட்டி வெடித்து வற்றி கறுமையான அசருண்டாகி உதிரும் தழும்பு கருப்பாயிருக்கும் சிலவேளை ரணமாய் இருக்கும்                     
செங்கிரந்திக்குணம்: தேகத்தில் செம்மை நிறமாய் வட்டவட்டமாய் தடித்துப் படர்ந்து இவற்றின் மத்தியில் வெண்மையாய் சுற்று ஓரங்களில் முளைமுளையாய்ச் சீழ்கட்டி வற்றிச் சிவந்து சருகுபோல் உதிர்ந்து தழும்பு சிவப்பாய் இருக்கும்        
அரிகிரந்திகுனம்;தேகத்தில் சிறுசிரங்குபோல் தோன்றி படர்ந்து மாறாத்தினவு அரிப்பு காணும்.                                             
ஆலங்காய்கிரந்திகுணம்;தேகாதியந்தமும் கழற்காய்போல் தோன்றி ஒவ்வொன்றாய் வெடித்துப் புண்ணாகும்.                                         
கள்ளிப்பூகிரந்திகுணம்;கள்ளிப்பூபோல் தடித்து அரித்து இரணமாகும்.  
பேய்ச்சொறியின் குணம்; அடிக்கடி தேகத்தில் தினவு கண்டு காசுபோல் தடித்துச் சிவந்து மறையும்.
  • நம் உடலில் உள்தோல் (enterdermis) வெளிதோல் (epidermis) களில் வீக்கம், எரிச்சல், வலி உண்டு பண்ணுவதற்கு டெர்மட்டிட்டிஸ் (dermatitis) என்று பெயர்.
  • படர்தாமரை (eczema); பலவகை உண்டு.
    அழுகின்றஎக்ஸிமா (weeping eczema);சொறிந்த இடங்களிலிருந்து நீர் வடியும் .
  • குடியேறும் எக்ஸிமா (migrating eczema); ஓர் இடத்தில் குணமாகி மற்றோரிடத்தில் தோன்றும்.
  • எரிஸிப்பிலஸ் (erysipelas); தோலுக்கு அடியில் உள்ள நிணநீர்க்குழாய் பாதிக்கப்படுவதால் உடலில் எந்த இடத்திலும் தோன்றும்.  தோன்றிய இடத்தில் நமைச்சல்,எரிச்சல்,வலி மூன்றும் இருக்கும். தோன்றும் முன் குளிர், காய்ச்சல், தோலில் தடிப்பு விறைப்பு. தோல் சிவத்தல், வீக்கம், கொப்புளம் காணும்
  • எரீத்தமா(erythema) ;தோல் சிவந்து காணும்.அளவுக்கு மிஞ்சிய மது,அஜீரணம் போன்றவற்றால் உண்டாகும்.
  • இக்தியோசிஸ் (ichthyosis); தடிக்கச்செய்து பாம்பு, மீன் போன்றவற்றிற்கு இருப்பது போல் செதில்களை தோற்றுவிப்பது.
  • இம்பெட்டிகோ(Impetigo); முகம், கழுத்து, கைகள் இவற்றில் கொப்புளங்களாக வெடித்து பொருக்குகளாக உதிரும். போஷாக்குக் குறைவினால் தோன்றும்.
  • எச்சில்தழும்பு (Ringworm/tinea); வட்டமாக தோல் மஞ்சள் நிறமாய் தோன்றி,நமைச்சல் உண்டாக்கி சொறிந்தால் உதிரும். 
  • ஸைக்கோஸிஸ் (sycosis/Barber's rash ) முகவாய்க்கட்டையில் தோன்றும். நமைச்சல், எரிச்சல், வீக்கம்,வலி எல்லாம் கலந்திருக்கும்.
  • ஷிங்கிள்ஸ் (Shingles/herpes zoster); பெருங்குடலில் உள்ள நச்சுநீர்கள் நரம்பு மண்டலத்தை தாக்குவதால் உண்டாகும்.4 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். இறங்கும் போது வயிறு, முகம், நெஞ்சு, கைகளில் மொச்சை அல்லது பட்டானியளவு கொப்புளங்கள் 10-20 தோன்றும். கொப்புளங்களைச்சுற்றி வீக்கம், எரிச்சல் காணும். தாமாகவே உடைந்து சீழ் வடியும்.
1.   பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2 தினம் மூன்று வேளை சாப்பிட்டு அருகன் தைலம் மேலே பூசிவர கரப்பான் குணமாகும்.
2.   வல்லாரைநெய் 5-10மிலி  5-10மிலி பாலுடன் கலந்து தினம் 2வேளை சாப்பிட்டு,அருகன்தைலம் சமன் உளுந்துதைலம்  கலந்து பூச தவளைச்சொறி குணமாகும்                                                     
3.   பறங்கிபட்டைசூரணம் 1-2கிராம்  5-10மிலி பாலுடன் தினமிருவேளை கொண்டு திரிபலாசூரண குடிநீர் கொண்டு சுத்தம் செய்துவர  சொறிசிரங்கு தீரும்                                  
4.   வேப்பிலையுடன் மஞ்சள்  சேர்த்தரைத்துப்பூச சொறிசிரங்கு  குணமாகும்     
5.   அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்தரைத்துபூச அடங்காத தோல் வியாதிகள் அடங்கும். சொறி சிரங்கு,புண்கள், படர்தாமரை, உடலரிப்பு குணமாகும்                                    
6.   குப்பைமேனியுடன் உப்பு,மஞ்சள் சேர்த்தரைத்துப்பூசிவர சொறிசிரங்கு, தோல் வியாதிகள்  குணமாகும்                                                                              
7.   பொரித்த  வெங்காரத்தை  தே.எண்ணையில்  குழைத்துப் பூச  சொறிசிரங்கு குணமாகும்                                                     
8.   ஆடுதீண்டாபாளை இலைசாற்றுடன் சமன்  தே.எண்ணை  கலந்து  காய்ச்சி வடித்து பூச  தோல் நோய்கள், சிரங்கு, கரப்பான், வண்டுக்கடி  தீரும்                              
9.   கஸ்தூரிமஞ்சள்தூளை வெந்நீரில் குழைத்துப்பூசி குளிக்க தோல் நோய்கள், கரப்பான்  தீரும். சருமம்  பளபளக்கும்                                                               
10.  கஸ்தூரி மஞ்சளுடன் சமன் துளசி சேர்த்தரைத்து பூசி வெந்நீரில் குளிக்க தோல் நோய்கள்  தீரும்                                             
11.  கஸ்தூரிமஞ்சள்தூள்  100-250மிகி  வெந்நீரில்  சாப்பிட்டுவர  சொறிசிரங்கு குணமாகும்.வியர்வை  நாற்றம்  நீங்கும்.                                                                    
12.  குடசப்பாலைபட்டையை நெல்லிக்காயளவரைத்து, 400மிலி நீரிலிட்டுக் காய்ச்சி பருகி  பட்டைச்சாறுடன் சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி வடித்துப் பூச தோல்நோய்கள், கரப்பான், சிரங்கு குணமாகும்.
13.  கோவைஇலை சாற்றுடன் சமன் தே.எண்ணை  கலந்து காய்ச்சி வடித்துபூசி, இலையை  சிதைத்து  2ல்1ன்றாய்  காய்ச்சி தினமிருவேளை பருகியும் வர சொறி சிரங்கு குணமாகும்.
14.  நுணா இலைகளையரைத்துப்பூச புண்கள், சிரங்குகள் குணமாகும்.
15.  நல்வேளை விதையெண்ணையை  பூசிவர  சொறிசிரங்கு, புண்கள்  குணமாகும்.
16.  நிலவேம்பு  சமூலத்தையரைத்துப்பூசி, ஊறவைத்துக் குளிக்க வண்டுக்கடி, சொறி சிரங்கு  குணமாகும்.
17.  நிலாவாரை  கஷாயத்தால் கழுவ சொறி சிரங்கு குணமாகும்.
18.  வெள்ளருகு சமூலத்தையரைத்து ,வெந்நீரில்  குழைத்து பூசி  1மணிநேரம்  கழித்து  கழுவ சொறிசிரங்கு,ஊறல்,தோல்நோய்கள்  கட்டுப்படும்.
19.  முட்சங்கன்  இலையை  அரைத்துப்பூச  காயம்,சொறிசிரங்கு  குணமாகும்.
20.  ஆவாரைபூவுடன் சமன் பச்சைபயறு  சேர்த்தரைத்து  வெந்நீரில்  குழைத்துப் பூசி  ஊறவைத்துக் குளிக்க  தோலரிப்பு,நமைச்சல்  குணமாகும்.
21.  தொட்டாற்சுருங்கி  இலைசாற்றை  பூசிவர  ஒவ்வாமை,தோல்தடிப்புகள் குணமாகும்.
22.  ஆவாரம் பூச்சூரணத்தை  பாலில்  கலந்து பருகிவர  உடல்சூடு, தோல்வறட்சி  நீங்கி பலம் பெறும்.                                                                                  
23.  ஆவாரைபூக்களை கூட்டு  அல்லது  குடிநீர் செய்து  உண்டுவர  தோல்வறட்சி நீங்கும்.
24.  வெப்பாலை  இலைகளை  தே.எண்ணையில்  சூரியபுடமிட்டு,தடவி வர  செல் உதிர் படை (சோரியாசிஸ்)போன்ற  தோல்வியாதிகள்  குணமாகும்.     
25.  கடுகுஎண்ணையை  பூசி வர  கிரந்திப்புண், தோல் வியாதிகள்  குணமாகும்.
26.  கைபிடி அவுரி இலைகளை  2ல்1ன்றாய் காய்ச்சி  தினமிருவேளை 200மிலி பருகிவர  கானாக்கடி,ஒவ்வாமை,தோல்நோய்கள்  குணமாகும்.
27.  கல்யாணமுருங்கைபட்டை கஷாயம் கொண்டு கழுவிவர புண்கள், தோல் நோய்கள் குணமாகும்.
29.  சீமையகத்தி வேரை  எலுமிச்சைசாற்றிலரைத்து பூச  தோல்நோய்கள் குணமாகும்.
30.  மரமஞ்சள் கட்டையை  பாலிலூறவைத்து  அரைத்துப்பூச தோல்நோய்கள் குணமாகும்.
31.  வேப்ப எண்ணயை பூச தோல்நோய்கள்  குணமாகும்.
32.  நாயுருவி வேர்  அல்லது  இலைகளையரைத்துப் பூசிவர கொப்புளம்,சிரங்கு குணமாகும்.
33.  காட்டுமல்லிகை  இலையை  அரைத்துப்பூச  வெண்குஷ்டம்  குணமாகும்.
34.  கைப்பிடி அருகம்புல், 10மிளகு  சேர்த்திடித்து  ஒன்றாய்க்காய்ச்சி, பனங்கற்கண்டு சேர்த்து, 200 மிலி, தினமிருவேளை  இளம்சூட்டில்  பருகிவர  உடல்அரிப்பு , நமைச்சல், வியர்வைநாற்றம், வெள்ளை ஆகியன நீங்கும்.
 35.  உப்பை  பொடித்து  அரிப்பு  ஏற்படும் இடத்தில்  நன்றாக  தேய்த்து  1மணி நேரம் கழித்து  குளிக்க  அரிப்பு  அடங்கும்.
36.  கைப்பிடி கரிப்பான் இலைகளுடன்  10மிளகு  சேர்த்தரைத்து  தே.எண்ணை யில் குழைத்துப்  பூச சிரங்கு  குணமாகும்.
37.  புங்கம்பூ, புளியம்பூ, சீரகம், நன்னாரிவேர், வெப்பாலைஅரிசி, வசம்பு  வகைக்கு 370 கிராம், 1லி பசும்பாலிலரைத்து, 1லி ந.எண்ணெயில்  கலந்து, காய்ச்சி  வடித்து  1/2-1தேகரண்டி காலையில் மண்டலம் கொள்ள சகல கரப்பானும், தோல் வியாதிகளும்  தீரும்.
38.  புங்கவேர், சிற்றாமணக்குவேர், சங்கன்வேர் வகைக்கு 40கிராம், பூண்டுச்சாறு அரை லிட்., வி.எண்ணை 2லி, வாதரசுவேர்பட்டை20கிராம் , கடுகுரோகிணி 10 கிராம் இடித்துப் போட்டு  15நாள்  சூரியபுடமிட்டு,  காலை1தேகரண்டி பருகிவர சருமரோகம், சொறிசிரங்கு, கரப்பான், புண்புரைகளும் தீரும்.
39.  மஞ்சளை  கோமியத்திலரைத்துபூச சொறிசிரங்கு  தீரும்                      
40.  குப்பைமேனி இலைகளை  கீரையாக  சமைத்துண்ண  நமைச்சல்,அரிப்பு  நீங்கும்.
41.  குப்பைமேனி சாறுடன் சமன்  ந.எண்ணை  கலந்து  காய்ச்சி  கடுகு  திரளும் பதத்திலெடுத்துப் பூச  வலி,வீக்கம்,சொறிசிரங்கு  தீரும்.
42.  நன்னாரி வேரூறல் குடிநீர் 30மிலி தினமிருவேளை பருகிவர வாதநோய், தோல் நோய்  தீரும்.
43.  சிவனார்வேம்பு  சமூலக் குடிநீர்  பருகிவர  சோரியாசிஸ்(செல்உதிர்படை) போன்ற  நாட்பட்ட தோல்நோய்கள்  நீங்கும்..                                                               
44.  சிவனார்வேம்பு  சமூலச்சாம்பலை  தே.எண்ணையில்  குழைத்துப்பூச பூஞ்சை தொற்றால்  ஏற்படும்  தோல்நோய்  தீரும்.
45.  சிவனார்வேம்புவேரை ந.எண்ணையில் காய்ச்சிபூச சொறிசிரங்கு,படைகள் குணமாகும்.
46.  பிரம்மதண்டு இலையை அரைத்துப்பூச சொறிசிரங்கு,படை குணமாகும்.
47.  மல்லிகை இலையை அரைத்துப்பூசிவர சொறிசிரங்கு குணமாகும்.
48.  பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை  பொடித்துக் கலந்து  தடவிவர  உடலில் எரிச்சல்,அரிப்பு  குணமாகும்.
49.  தேள்கொடுக்கிலைச்சாறு பூசிவர  சொறிசிரங்கு  புண்  ஆறும்.
50.  கிரந்திநாயகம்  இலைகளை  கசக்கி  தேய்க்க  ஊறல்.அரிப்பு, கானாக்கடி, சிறுவிஷம்  தீரும்.
51.  மஞ்சணத்திக்கொழுந்தை இடித்த சாறு வேளைக்கு அரைக்கால்படி வீதம் 3நாள் சாப்பிட எச்சிக்கிரந்தி தீரும்.                                                                                          
52.  கள்ளிக்கொழுந்தை பிட்டவித்து சாறுபிழிந்து அதில் நல்லெண்ணை சிறிது கலந்து 3நாள் கொடுத்து 6நாள் பத்தியமிருக்க செங்கிரந்தி,கருங்கிரந்தி,தடிப்பு தீரும். 
53.  வாகைக் கொழுந்தை இடித்து 150மிலி சாறுபிழிந்து சிறிது நல்லெண்ணை கலந்து 3நாள் கொடுத்து 6நாள் பத்தியமிருக்க கள்ளிப்பூகிரந்தி குணமாகும்
54.  வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
55.  பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை தேமல் உள்ள இடங்களில் பூசி வர தேமல் அகலும்.
56.  கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வர தேமல், படை, குணமாகும்.
57.   அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து பூச தேமல் குணமாகும்.
58.  100மிலி நீரில் 5 கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர தேமல் குறையும்.
59.  நாயுருவி இலைச் சாற்றை தடவி வர தேமல், படை குணமாகும்.
60.  எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்துடன் தண்ணீர் சேர்த்து குழைத்துப் பூசி குளித்து வர தேமல் குறையும்.
61.  மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேய்த்து வர தேமல் குறையும்.
62.  எலுமிச்சை பழச்சாற்றை தேய்க்க தேமல் மறையும்.
63.  சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து பூசி வர தேமல் நீங்கும்.
64.  துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து பூச தேமல் நீங்கும்.
65.  அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து பூச தேமல் குணமாகும்.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....