Skip to main content

தேமல், வெண்படை, படர்தாமரை, தொழுநோய் TINEA VERSI COLOR, LEUCODERMA





ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி, எலி, பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை, மாதா, பிதாக்கள் மன நோக்காட்டாலும், தெய்வ உருக்களை அழித்தலாலும், பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக.

1.   திரிபலாசூரணமாத்திரை மூன்று, தினமிருவேளை சாப்பிட்டுவர  வெண்படை  நீங்கும்
2.   அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம், 5-10மிலி தேனில் கலந்து, தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும்
3.   கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும்
4.   பலகறைபற்பம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1கிராம், 5-10மிலி பாலில் கலந்து பருகி, அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும்
5.   சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல்  குணமாகும்
6.   திருநீற்றுப்பச்சை  இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும்
7.   திப்பிலிச்சூரணம்  அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்பிட்டுவர தேமல் குணமாகும்
8.   சோற்றுக்கற்றாழை சோற்றை தினமும் பூசிவர வெண்படை குணமாகும்
9.   மஞ்சள்,அருகம்புல் சேர்த்தரைத்துப்பூசி,குளித்துவர சொறி,சிரங்கு, படர்தாமரை, புண்கள்,உடல் அரிப்பு குணமாகும்.
10. சந்தனக்கட்டையை எலுமிச்சைசாறிலரைத்துப்பூச படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு குணமாகும்
11. சீமையகத்திவேரை,எலுமிச்சை சாற்றிலரைத்துப்பூச படர்தாமரை குணமாகும்
12. கோவையிலைச்சாற்றுடன் சமன் தே.எண்ணை கலந்து காய்ச்சி,வடித்துப் பூச படை,சொறி, சிரங்கு குணமாகும்
13. வல்லாரைசமூலத்தை,5ல்1ன்றாய்க் காய்ச்சி,வடித்து,50மிலி, தினமிரு வேளை நீடித்துப் பருக தொழுநோய் குணமாகும்
14. வேப்பிலையையரைத்து இரவில் பற்றிட்டு காலையில் கழுவ படை, சிரங்கு குணமாகும்
15. துவரைவேரை தே.எண்ணையில் கலந்து காய்ச்சி,உடலில் தேய்த்துவர கரும்புள்ளி, வெண்புள்ளி ஆகியன தீரும்
16. சிவனார்வேம்புவேர்,வாலுளுவைஅரிசி சமனெடுத்து,கருடன்கிழங்குச் சாற்றிலரைத்து குழித்தைலமிறக்கி,5-10துளிகள் உள்ளுக்கு கொடுத்து, மேலேயும் பூசிவர வெண்குஷ்டம், தொழுநோய் தீரும்
17. குப்பைமேனிஇலை,சீமைஅகத்திஇலை,உப்பு,மிளகு சேர்த்தரைத்துப் பூச படை,தேமல் குணமாகும்
18. சிவனார்வேம்புவேர்த்தைலம் 10துளி பாலுடனருந்த தொழுநோய்,படை தீரும்
19. சிவப்புஅழிஞ்சில்வேர்பட்டைதூள்100மிகி,கிராம்பு,சாதிக்காய்,சாதிபத்திரி சமன் கலந்த பொடி 200மிகி,கலந்து தேனில் குழைத்துச்சாப்பிட தொழுநோய் குணமாகும்
20. அழிஞ்சில்விதை எண்ணையைப்பூசி,உள்ளுக்கும் ஓரிரு துளி கொடுத்துவர தோல்நோய் குணமாகும்
21. வாய்விளங்கத்தை நீரிலரைத்துப் பூச படைகள் குணமாகும்
22. கொன்றைதுளிர்,புளியந்துளிர்,மிளகு சமனெடுத்தரைத்துப் பற்றிட படர்தாமரை குணமாகும்
23. அழிஞ்சில்வேர்பட்டை சூரணம் 100மி.கி. தினம்2வேளை,1வாரம் கொள்ள பாம்பு ,எலி, வெறிநாய், கடிவிடங்கள் ,தொழுநோய், கிரந்தி,புண், வயிற்றுப் போக்கு குணமாகும் .                                                                                 
 24. அத்திப்பழங்களை மட்டுமே அதிகம் உண்டுவர குஷ்டம் குனமாகும்.
25. முந்திரி மர பழங்களை மட்டுமே சாப்பிட்டுவர 2மாதத்தில் எவ்வளவு பெரிய குஷ்டமும் குணமாகும்.                                  
26. முள்ளங்கிவிதையை காடியில்(வினிகர்)ஊறவைத்து இரவில் பூசிபடுக்க வெண்குஷ்டம் மறையும்.
27. அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.
28. வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து அரைத்து தினம் தேய்த்துக் குளித்து வர உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாகும்.
29. கடுக்காய் வேர், பட்டை இலை, பூ உலர்த்தி இடித்து சலித்து காலை, மாலை 1/2 கரண்டி பசும்பாலில் கலந்து உண்டு வர தொழு நோய் குணமாகும்.
30.   வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
31. பூவரச மரத்தில் காய்களை அம்மியில் உரசி வரும் மஞ்சள் நிறப் பாலை தேமல் உள்ள இடங்களில் பூசி வர தேமல்அகலும் .                 
32. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள், மருதோன்றி அரைத்து பூச தேமல் குணமாகும்.
33. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வர தேமல்,படை,குணமாகும்
34.  நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பால் சர்க்கரை சேர்த்து குடித்துவர தேமல் குறையும்.
35. நாயுருவி இலைச் சாற்றை தடவி வர தேமல், படை குணமாகும்.
36. எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்துடன் தண்ணீர் சேர்த்து குழைத்துப் பூசி குளித்து வர தேமல் குறையும்.
37. மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேய்த்து வர தேமல் குறையும் .     
38. எலுமிச்சை பழச்சாற்றை தேய்க்க தேமல் மறையும்.
39.  சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து பூசி வர தேமல் நீங்கும்
40.  துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து பூச தேமல் நீங்கும்

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம் உண்டாகும். அ

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் போற்

அளவை முறைகள்

சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகள் குறித்து பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. சித்தர்களின் பாடல்களில் குறிப்பிட்டிருக்கும் அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவைகளை குறித்த சந்தேகங்களுடன் தொடர்ந்து நிறைய மின்னஞ்சல்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே அனைவரின் சந்தேகங்களை விளக்கும் பொருட்டும், மற்றவர்கள் அறிந்து கொள்ளவும் இந்த பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். முகத்தல் அளவைகள் ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர். ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர். ஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர். ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர். ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு. ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லிட்டர். ஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர். ஒரு குப்பி = எழுநூறுமில்லி லிட்டர். ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு. ஐந்து சோடு = ஒரு அழாக்கு. இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு. இரண்டு உழக்கு = ஒரு உரி. இரண்டு உரி = ஒரு நாழி. எட்டு நாழி = ஒரு குறுணி. இரண்டு குறுணி = ஒரு பதக்கு. இரண்டு

பிண்ணாக்கீசர்

"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல் தேவமாதா இரவல் - ஞானம்மா தெரியா அலைவாரே.!" "இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம் துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மா சொன்னால் வருமோசம்.!" - பிண்ணாக்கீசர் - இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார். இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர் சொல்கிறார். பாம்பாட்டிச் சித்தருக்கு சீடராக இருந்த இவாருக்கு மச்ச முனி சீடராக இருந்ததாக சொல்லப் படுகிறது. இவரது பாடல்களில் ஞானம்மா என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம். இவர், பிண்ணாக்கர் மெய்ஞானம் பிண்ணாக்கர் ஞானப்பால் பிண்ணாக்கர் முப்பூச் சுண்ணச் செயநீர் ஆகிய நூல்களை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. இவர் கேரளத்திலுள்ள நங்குனாசேரி என்னுமிடத்தில் சமாதியடைந்ததாக சொல்லப் படுகிறது.