Skip to main content

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!!

நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு

உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து

வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை

கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் கண்படும் இடங்களில், உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று.

மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும்.

இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,அம்மரக்கன்று வளர,வளர அதைநட்டவரின் வாழ்க்கை மலரும் அந்த மரக்கன்றை நட்டவரின் பிறந்த ஜாதகத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களையும் அந்த மரக்கன்று ஈர்த்துவிடும். அம்மரக்கன்று பூத்து, காய்க்கும்போது, உரியவரின் வாழ்க்கையும் செழிப்பாகத்துவங்கும். அவரது கர்மவினைகள் நீங்கியிருக்கும் .கர்ம வினைகளை வெற்றிகொள்ள ‘விருட்ச சாஸ்திரம் ’இப்படி ஒரு வழிகாட்டுகிறது.

இப்போது உங்களது பிறந்த நட்சத்திரத்துக்குரியவிருட்சம் எனப்படும் மரம் எதுவெனப்பார்ப்போம்

அஸ்வினி

1 ம் பாதம் - காஞ்சிதை (எட்டி)

2 ம் பாதம் - மகிழம்

3 ம் பாதம் - பாதாம்

4 ம் பாதம் - நண்டாஞ்சு

பரணி

1 ம் பாதம் - அத்தி

2 ம் பாதம் - மஞ்சக்கடம்பு

3 ம் பாதம் - விளா

4 ம் பாதம் - நந்தியாவட்டை

கார்த்திகை

1 ம் பாதம் - நெல்லி

2 ம் பாதம் - மணிபுங்கம்

3 ம் பாதம் - வெண் தேக்கு

4 ம் பாதம் - நிரிவேங்கை

ரோஹிணி

1 ம் பாதம் - நாவல்

2 ம் பாதம் - சிவப்பு மந்தாரை

3 ம் பாதம் - மந்தாரை

4 ம் பாதம் - நாகலிங்கம்

மிருகஷீரிஷம்

1 ம் பாதம் - கருங்காலி

2 ம் பாதம் - ஆச்சா

3 ம் பாதம் - வேம்பு

4 ம் பாதம் - நீர்க்கடம்பு

திருவாதிரை

1 ம் பாதம் - செங்கருங்காலி

2 ம் பாதம் - வெள்ளை

3 ம் பாதம் - வெள்ளெருக்கு

4 ம் பாதம் - வெள்ளெருக்கு

புனர்பூசம்

1 ம் பாதம் - மூங்கில்

2 ம் பாதம் - மலைவேம்பு

3 ம் பாதம் - அடப்பமரம்

4 ம் பாதம் - நெல்லி

பூசம்

1 ம் பாதம் - அரசு

2 ம் பாதம் - ஆச்சா

3 ம் பாதம் - இருள்

4 ம் பாதம் - நொச்சி

ஆயில்யம்

1 ம் பாதம் - புன்னை

2 ம் பாதம் - முசுக்கட்டை

3 ம் பாதம் - இலந்தை

4 ம் பாதம் - பலா

மகம்

1 ம் பாதம் - ஆலமரம்

2 ம் பாதம் - முத்திலா மரம்

3 ம் பாதம் - இலுப்பை

4 ம் பாதம் - பவளமல்லி

பூரம்

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - வாகை

3 ம் பாதம் - ருத்திராட்சம்

4 ம் பாதம் - பலா

உத்திரம்

1 ம் பாதம் - ஆலசி

2 ம் பாதம் - வாதநாராயணன்

3 ம் பாதம் - எட்டி

4 ம் பாதம் - புங்கமரம்

ஹஸ்தம்

1 ம் பாதம் - ஆத்தி

2 ம் பாதம் - தென்னை

3 ம் பாதம் - ஓதியன்

4 ம் பாதம் - புத்திரசீவி

சித்திரை

1 ம் பாதம் - வில்வம்

2 ம் பாதம் - புரசு

3 ம் பாதம் - கொடுக்காபுளி

4 ம் பாதம் - தங்க அரளி

சுவாதி

1 ம் பாதம் - மருது

2 ம் பாதம் - புளி

3 ம் பாதம் - மஞ்சள் கொன்றை

4 ம் பாதம் - கொழுக்கட்டை மந்தாரை

விசாகம்

1 ம் பாதம் - விளா

2 ம் பாதம் - சிம்சுபா

3 ம் பாதம் - பூவன்

4 ம் பாதம் - தூங்குமூஞ்சி

அனுஷம்

1 ம் பாதம் - மகிழம்

2 ம் பாதம் - பூமருது

3 ம் பாதம் - கொங்கு

4 ம் பாதம் - தேக்கு

கேட்டை

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - பூவரசு

3 ம் பாதம் - அரசு

4 ம் பாதம் - வேம்பு

மூலம்

1 ம் பாதம் - மராமரம்

2 ம் பாதம் - பெரு

3 ம் பாதம் - செண்பக மரம்

4 ம் பாதம் - ஆச்சா

பூராடம்

1 ம் பாதம் - வஞ்சி

2 ம் பாதம் - கடற்கொஞ்சி

3 ம் பாதம் - சந்தானம்

4 ம் பாதம் - எலுமிச்சை

உத்திராடம்

1 ம் பாதம் - பலா

2 ம் பாதம் - கடுக்காய்

3 ம் பாதம் - சாரப்பருப்பு

4 ம் பாதம் - தாளை

திருவோணம்

1 ம் பாதம் - வெள்ளெருக்கு

2 ம் பாதம் - கருங்காலி

3 ம் பாதம் - சிறுநாகப்பூ

4 ம் பாதம் - பாக்கு

அவிட்டம்

1 ம் பாதம் - வன்னி

2 ம் பாதம் - கருவேல்

3 ம் பாதம் - சீத்தா

4 ம் பாதம் - ஜாதிக்காய்

சதயம்

1 ம் பாதம் - கடம்பு

2 ம் பாதம் - பரம்பை

3 ம் பாதம் - ராம்சீதா

4 ம் பாதம் - திலகமரம்

பூரட்டாதி

1 ம் பாதம் - தேமா

2 ம் பாதம் - குங்கிலியம்

3 ம் பாதம் - சுந்தரவேம்பு

4 ம் பாதம் - கன்னிமந்தாரை

உத்திரட்டாதி

1 ம் பாதம் - வேம்பு

2 ம் பாதம் - குல்மோகர்

3 ம் பாதம் - சேராங்கொட்டை

4 ம் பாதம் - செம்மரம்

ரேவதி

1 ம் பாதம் - பனை

2 ம் பாதம் - தங்க அரளி

3 ம் பாதம் - செஞ்சந்தனம்

4 ம் பாதம் - மஞ்சபலா

தங்களுக்குரிய நட்சத்திரங்கள் , பாதங்கள் அறிந்து விருட்சங்கள் வளர்த்து, வளம் பெறுங்கள்.

சில மரங்கள் -நீங்கள் கேள்விப்படாததாக இருக்கலாம்.அருகில் இருக்கும் சித்தமருத்து-வரையோ, அல்லது, கூகுள்லெயோ தேடிப்பாருங்கள் இல்லையா, அந்தநட்சத்திரத்துக்கு மற்றபாதங்களுக்குரிய பரிச்சயமான மரங்களை வளர்க்கலாம்.

மரங்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஸ்தல

விருட்சங்கள் உண்டு.அந்த ஸ்தல விருட்சத்தின் அடியில், அருகில் நீங்கள் அமர்வது, நீங்கள்

அந்த ஆலயத்தின் கருவறைக்குள் அமர்வதுக்கு ஒப்பானது. ஆலயத்தை சுற்றி இருக்கும் அருள் அலைகளை ஸ்தல விருட்சம் கிரகித்து வெளியிடுகிறது. திருவண்ணாமலை சென்றால், அந்த மகிழ மரத்தடியில் சில நிமிடங்கள் அமர்ந்து, உணர்ந்து பாருங்கள். உங்கள் ஊரில் அருகில் இருக்கும் ஸ்தலங்களில் விருட்சங்களின் அடியில் அமர்ந்து உணர்ந்து பார்த்துவிட்டு. உங்கள் அனுபவங்களை எழுதுங்கள் ..

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள் இவை :

அஸ்வதி – எட்டி

பரணி -- நெல்லி

கார்த்திகை – அத்தி

ரோகிணி --- நாவல்

மிருகசீரிஷம் --- கருங்காலி

திருவாதிரை - செங்காலி

புனர்பூசம் - மூங்கில்

பூசம் - அரசு

ஆயில்யம் - புன்னை

மகம் - ஆல்

பூரம் - புரசு

உத்திரம் - இலந்தை

அஸ்தம் - மகாவில்வம்

சுவாதி - மருதம்

சித்திரை - அகண்ட வில்வம்

விசாகம் - விளா

அனுஷம் - மகிழம்

கேட்டை - பராய்

மூலம் - மரா

பூராடம் - வஞ்சி

உத்திராடம் - பலா

திருவோணம் - எருக்கு

அவிட்டம் – வன்னி

சதயம் – கடம்பு

பூரட்டாதி -- மா

உத்திரட்டாதி – வேம்பு

ரேவதி – இலுப்பை


ஒவ்வொரு மரத்தையும் நட்சத்திர அதிதேவதையுடன் பூஜை செய்தால் வாழ்வில் நலம் பெருகும்.

வருஷாதி விருட்சங்கள்


பிரபவ - கருங்காலி மரம்

விபவ - அக்ரூட்மரம்

சுக்ல - அசோக மரம்

4.ப்ரமோதூத

பிரஜோர்பத்தி - பேயத்தி மரம்

ஆங்கீரஸ் - அரசுமரம்

திருமுக - அரைநெல்லி

பவ - அலயாத்தி

யுவ - அழிஞ்சில் மரம்

தாது - ஆச்சாமரம்

ஈஸ்வர - ஆலமரம்

வெகுதான்ய - இலந்தை மரம்

பிரமாதி - தாளைபனைமரம்

விக்ரம - இலுப்பை மரம்

விஷு - ருத்திராட்சம்

சித்ரபானு - எட்டி மரம்

யுவபானு - ஒதியம்

தாரண - கடுக்காய் மரம்

பார்த்திவ - கருங்காலி மரம்

வியய - கருவேலமரம்

சர்வஜித் - பரம்பை மரம்

சர்வதாரி - குல்மோகூர்மரம்

விரோதி - கூந்தல் பனை

விக்ருதி - சரக்கொன்றை

கர - வாகை மரம்

நந்தன - செண்பகம்

விஜய - சந்தனம்

ஜய - சிறுநாகப்பூ

மன்மத - தூங்குமூஞசி மரம்

துன்முகி - நஞ்சுகண்டாமரம்

ஏவிம்பி - நந்தியாவட்டை

32.விளம்பி

விகாரி - நாவல்

சார்வரி - நுணாமரம்

பிலவ - நெல்லி மரம்

சுபகிருது - பலா மரம்

சோபாகிருது - பவழமல்லி மரம்

குரோதி - புங்கம் மரம்

விசுவாவக - புத்திரசீவிமரம்

பராபவ - புரசுமரம்

பிலவங்க - புளிய மரம்

கீலக - புன்னை மரம்

சவுமிய - பூவரசு மரம்

சாதாரண - மகிழமரம்

விரோதிகிருத - டம்பை

பரீதாபி - மராமரம்

பிரமாதீச - மருதமரம்

ஆனந்த - மலைவேம்பு

ராட்சஸ - மாமரம்

நள - முசுக்கொட்டை மரம்

பிங்கள - முந்திரி

காளயுக்தி - கொழுக்கட்டை மந்தாரை

ஸித்தார்த்தி - தேவதாரு

ரவுத்ரி - பனை மரம்

துன்மதி - ராமன்சீதா

துந்துபி - மஞ்சள் கொன்றை

ருத்ரோத்காரி- சிம்சுபா

ரக்தாக்ஷி

குரோதன - சிவப்புமந்தாரை

அட்சய - வெண்தேக்கு

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

பாவங்களுக்கான வியாதிகள்

பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...