Skip to main content

காட்டு எலுமிச்சை

எலுமிச்சையின் மகிமை பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். சிட்ரஸ் அமிலம் நிறைந்தது, ஆன்டி ஆக்சிடண்ட் பண்புகள் கொண்டது, எடை குறைப்புக்கு உதவுவது என்று அதன் நன்மைகள் கணக்கிலடங்காதது. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எலுமிச்சையை அடிக்கடி பயன்படுத்தச் சொல்கிறார்கள். இந்த எலுமிச்சையில் காட்டு எலுமிச்சை என ஒன்றும் பலருக்குத் தெரியாத ஒரு வகை இருக்கிறது.

எலுமிச்சையில் நிறைய வகைகள் உள்ளது. எலுமிச்சை எதுவாக இருந்தாலும் உணவில் சேர்த்துக் கொள்கிறோம். ஆனால், காட்டு எலுமிச்சையின் மருத்துவ பண்புகள் தனித்துவமானது.

காட்டு எலுமிச்சைகளில் சாதாரண எலுமிச்சையை விட சிட்ரஸ் அமிலம் அதிகம். அதே நேரத்தில் இது அதிக ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளது. இந்த காட்டு எலுமிச்சையிலிருந்து எண்ணெய் மற்றும் சுவை கூட்ட கூடிய விஷயங்களில் புளிப்பு சுவையை கொடுப்பது வாசனை திரவியங்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது, சாதாரணமாக நாம் பயன்படுத்தும் எலுமிச்சைக்கும், காட்டு எலுமிச்சைக்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பார்ப்போம்.

எலுமிச்சை

எலுமிச்சையை கொதிக்க வைத்து, அதோடு இஞ்சி சேர்த்து குடிக்கும்போது நம் உடலில் நோய் எதிர்ப்பு பண்புகளை உருவாக்கி கொரோனா வைரஸை அழிக்கிறது. இந்த வல்லமை எலுமிச்சைப் பழத்தில் மட்டுமின்றி, எலுமிச்சையின் தோலிலும் நிறைய உள்ளது. எலுமிச்சையின் தோலைக் கொதிக்க வைத்து, அந்த நீரை பருகுவதால் நிறைய பலன்கள் இருக்கிறது. குறிப்பாக, ரத்தக்குழாய்களில் இருக்கக்கூடிய கொழுப்புகளை நீக்க உதவுகிறது. அதேபோல், உடல் முழுவதும் இருக்கும் கொழுப்புக் கட்டிகளை கரைக்கவும் உதவுகிறது. எலுமிச்சைத் தோலை கொதித்து அந்த நீரை பருகுவதால் புற்றுநோய் தடுக்கப்படும் என்றும் பல ஆய்வுகளில் கூறுகின்றனர். அதேபோல் இதன் புளிப்பு சுவை பொதுவாக உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவுகிறது. உடல் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

காட்டு எலுமிச்சை

காட்டு எலுமிச்சைக்கும் சாதாரண எலுமிச்சைக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால், சாதாரண எலுமிச்சைகளில் இருக்கும் வாசனையை விட காட்டு எலுமிச்சையில் வாசனை மிகவும் அதிகமாகவும் அலாதியாகவும் இருக்கும். காட்டு எலுமிச்சையின் சாறு அளவும் அதிகம் உள்ளது. குடல் நோய்கள், சுவாச பிரச்னை உள்ளவர்களுக்கு காட்டு எலுமிச்சை நல்லது. நண்டு, மீன், கருவாடு, இறால் போன்ற கடல் உணவு வகைகளை எடுத்துக் கொள்ளும்போது, சிலருக்கு சருமத்தில் அலர்ஜியை (Sea sickness) ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்கள் காட்டு எலுமிச்சையைப் பயன்படுத்தும்போது குணமடைகின்றனர். இதிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெயை மருத்துவப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள். காட்டு எலுமிச்சை ஜூஸை குடித்து வந்தால் அவை உடலில் உள்ள ஆன்டிபாடிக்களை அதிகரித்து தொற்று நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழித்துவிடும்.

எலுமிச்சை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதுமட்டுமின்றி அவை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலின் அளவையும் அதிகரிக்கும். எலுமிச்சைச் சாற்றை வழக்கமாகக் குடித்து வந்தால், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென் என்கிற வேதிப்பொருளில் இருந்து பாதுகாத்து பெருங்குடல், புரோஸ்ட்ரேட், மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். மேலும் எலுமிச்சை ஜூஸ் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சாதாரண சருமத்தையும் பொலிவாக்கும். எனவே எலுமிச்சைச் சாற்றை தினமும் பருகினால், அழகாக சருமத்தைப் பெறலாம். எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம்தான்.

காட்டு எலுமிச்சையின் நன்மைகள்

* எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும்.

* செரிமானப் பிரச்னை, வாயுப் பிரச்னை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சைச் சாற்றை சூடான நீரில் கலந்து குடித்து வந்தால் சரிசெய்துவிடலாம். வேண்டுமெனில் ஒமத்தை எலுமிச்சை சாற்றில் சேர்த்து குடித்தாலும் செரிமானப் பிரச்னையை சரி செய்யலாம்.

* எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால் விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்னைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்னைகளை தடுக்கலாம்.

* காட்டு எலுமிச்சையானது மலைப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் கிடைக்கும். நாம் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எலுமிச்சையைக் காட்டிலும் மிகவும் சிறிதாக நெல்லிக்காய் அளவில் இருக்கும். காட்டு எலுமிச்சை மரத்தை குருந்தை மரம் என்றும் கூறுவதுண்டு.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...