கடவுளுக்கானதல்ல.. இதுவே கடவுள்.
பூவுக்குள்ளே இறங்கி வந்து குடியிருக்கிறான் இறைவன்.
அத்தகைய ஒரு பெருமைக்குரிய மலராக நாகலிங்கப் பூவை கூறுவர்.
பூவில் நாகமுமிருக்கிறது.
உள்ளே லிங்கமும் இருக்கிறது. சுற்றிலும் தேவர்களும் இருக்கிறார்கள். தேவ கணங்களும் இருக்கின்றன.
உள்ளங்கையில் வைத்துக் கொண்டு உற்று கவனித்தால் ஒரு மினியேச்சர் கைலாயமே கைக்குள் இருப்பதுபோல் இருக்கும்.
விசேஷத்திலும் விசேஷமாக மரத்தில் பூக்கும் பூவாக வேர்ப் பகுதிக்கு சற்று மேலே கொத்துக் கொத்தாக இலைகளைக் கொண்ட கிளைகளில் பூக்காமல் தனக்கென்று தான் பூப்பதற்கு என்று பிரத்யேகமாக ஒரு கிளையை உருவாக்கிக் கொண்டு பூக்கும் மலராக நாகலிங்கப்பூ உள்ளது.
ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் ஆயிரம் மலர்கள் வரை பூக்குமாம்.
அமேசான் காட்டுப் பகுதிகளில் இந்த மரம் துர்தேவதைகளில் இருந்து காக்கும் மரமாகவும் ஆசிய கண்டத்தில் செல்வத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
மேலும் இந்த மரம் மாசுக் கட்டுப்பாட்டின் தன்மையைக் காட்டும் குறியீட்டுக் கருவியாகவும் கருதப்படுகிறது. காற்றில் அதிகமான சல்பர் இருந்தால் இதன் இலைகளை உதிர்த்து வெளிப்படுத்துமாம்.
இந்த மரத்தின் இலைகளை அரைத்து தோல் நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.
இதன் இலைகளை மென்று திண்பதால் பல்வலிக்கு மருந்தாகவும்,
பட்டைகளையும் காய்களையும் பக்குவப்படுத்தி விஷ காய்ச்சலுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
இந்த பூவை கையில் வைத்துக்கொண்டு லிங்க பகுதியை உற்று நோக்க நோக்க நம்மை தியானத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் மிக மிக விசேஷமான மலர் இதையே கடவுளாக வணங்கலாம்
இந்த பூவை தொடுவதற்கு முன்னரே 1008 முறை பஞ்சாட்சரம் ஜெபித்து தொட வேண்டும் .
இருபத்தோரு மாத்ருகா ரிஷிகள் தன்னுடைய தவ ஆற்றலைக் இந்த நாகலிங்க பூவிற்கு கொடுத்ததாக ஐதீகம் எனவே பூவை வைத்து பூஜை செய்து முடித்த பின்னர்
21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும் அதை சூட்சும வடிவில்
21 மாத்ருகா ரிஷிகள் பெற்று செல்வதாக சிவ புராணம் கூறுகிறது
வாடிய பூக்களை ஓடும் ஆற்றில் விட்டு விட வேண்டும்.

Comments
Post a Comment