Skip to main content

சாபநிவர்த்தி


சித்தரியலில் சாப நிவர்த்தி என்பதை குறைகளை களைதல் அல்லது தேவைகளுக்கேற்ப முன் தயாரிப்பு என்று அர்த்தப் படுத்தலாம். சித்தர்கள் பார்வையில் குருநாதரைத் தவிர குறையற்றவை என்று எதுவும் இல்லை.எல்லாம் ஏதோ ஒரு வகையில் குறையுடன் இருப்பதாகவே கருதினர். அவற்றை மேம்படுத்தி பயன் படுத்துவதையே சாப நிவர்த்தி என்கிற தனிப் பிரிவாக வகுத்திருந்தனர்.

அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் ஆகிய நூல்களில் சாப நிவர்த்தி பற்றி விரிவாக கூறியிருக்கிறார். சாப நிவர்த்தி செய்யப் படாத உடலோ, மூலிகையோ, தின்மமோ பயன்பாட்டிற்கு உகந்தவை அல்ல என்கிறார்.

செய்யவே விட்டகுறை இருக்கும்போது தீர்க்கமுடன் உடல்சாபம் நிவர்த்தி செய்தால் ஐயமுள்ள மூலிகைகள் கண்ணிற்காணும் அப்போது ரசவாதம் பலிதமாகும் பொய்யல்ல உடற்சாபந் தீராமற்றான் போய்த்தேடித் திரிந்தாலுங் கண்ணிற்காணா மெய்யாகக் கண்டிட்டோ மென்று சொல்வார் வீணிலவர் பேச்சைநம்பி அலைந்திடாதே.

அகத்தியர் –

    மனிதர்கள் தங்கள் உடல் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்வதால் வெற்றிகளைத் தரக்கூடிய அரிய மூலிகைகள் எல்லாம் கண்ணில் தெரியும் என்கிறார்.இதனால் இரசவாதம் பலில்லும், உடல்சாபத்தை நிவர்த்திக்காது எது செய்தாலும் அது கைகூடாது என்கிறார். மேலும்…

    பாரப்பா சாபமது தீர்க்க வேணும் பரிவான மூலிகையின் சாபம் தீரும் காரப்பா சுண்ணசெந் தூரபற்பம் கற்பமுறை செய்யவென்றால் சாபந்தீரும் நேரப்பா வாதவித்தை வைத்தியங்கள் நேர்மையுடன் செய்யவென்றால் சாபந்தீரும் சீரப்பா கற்பகங்கள் தைலம் ஜாலம் தீட்சைகளுஞ் செய்யவென்றால் சாபந்தீரே.

    அகத்தியர் –

      பரிவான மூலிகைகளின் சாபத்தை தீர்க்கவேண்டும், சுண்ணம், செந்தூரம், பற்பம் செய்ய வேண்டும் என்றால் அவற்றின் சாபத்தை நீக்கவேண்டும், இரசவாத வித்தைகள், வைத்தியங்கள் சரியாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கும் சாபத்தை தீர்க்கவேண்டும், மேலும் தைலங்கள், கற்பங்கள் செய்யவேண்டும் என்றாலும் சாபம் தீர்க்க வேண்டும் என்கிறார்.

      “தீரேநீ ஜாலமுடன் மாந்திரீகம் செய்வதற்கு சித்தமுனிசாபந் தீரவேணும் நேரேநீ யோகஞா னங்கள்செய்ய நேர்மையுடன் சாபமது தீர்க்க வேணும் கண்மணியே சாபமதை நிவர்த்திசெய்யே”

      அகத்தியர் –

        ஜாலங்களும் மாந்திரீகமும் செய்யவேண்டுமாயின் சித்தர்கள், முனிவர்கள் சாபந்தீர்க்க வேண்டும், யோக ஞானங்கள் செய்யவேண்டுமாயினும் சாபங்கள் தீர்க்க வேண்டும். எனவே முதலில் சாபங்களை நிவர்த்தி செய்து கொள் என்கிறார். இதன் மூலம் சாப நிவர்த்தியின் முக்கியத்துவத்தை உணரலாம்.

        எனது புரிதலின் படி சித்தரியலில் சாபநிவர்த்தி என்பது மூன்று பெரும் பிரிவுகளில் அடங்குகிறது.

        சாதகன் தன்னையே சாபநிவர்த்தி செய்து கொள்வது,

        மருந்து,மாந்திரீகம் செய்வதற்கு தேவையான மூலிகைகளை சாப நிவர்த்தி செய்வது,

        இரசவாதம் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் படும் தின்மங்களை சாப நிவர்த்தி செய்வது என வகைப் படுத்தலாம்.

        உடல் சாப நிவர்த்தி

        சித்தரியலில் தேடல் உள்ள ஒவ்வொருவரும் முதலில் செய்து கொள்ள வேண்டிய ஒன்றாக இது கருதப் படுகிறது. அதாவது சாதகர்கள் தங்கள் உடலை தூய்மைப்படுத்திக் கொள்வதாக இதனை கூறுகின்றனர்.

        குருவின் அனுமதியோடு, குருவானவர் உபதேசிக்கும் குறிப்பிட்ட ஒரு மந்திரத்தை ஒரு லட்சம் முறை செபித்து மந்திர சித்தி அடைவதே உடல் சாபநிவர்த்தி எனப்படுகிறது.இந்த மந்திரத்தை பொதுவில் வைத்திட எனக்கு அனுமதி இல்லை என்பதால் அதனை இங்கே தவிர்க்கிறேன்.

        மூலிகைகளை சாப நிவர்த்தி 

        இதனை இரண்டு வகையாக கூறுகின்றனர்.

        மருத்துவ தேவைகளுக்கு சாப நிவர்த்தி செய்வது, இதில் எல்லா மூலிகைகளுக்கும் பொதுவான சாப நிவர்த்தி முறை கடைபிடிக்கப் படுகிறது. இதற்கென பிரத்யேக மந்திரங்கள் இருக்கிறது.

        மற்றொரு வகையில், குறிப்பிட்ட மூலிகையை ஒரு குறித்த செயலை செய்யவதற்கு தயார் செய்யும் சாப நிவர்த்தி முறை ஆகும். இதில் ஒவ்வொரு மூலிகைகளுக்கும், ஒவ்வொரு காரியத்திற்கென தனித் தனி சாப நிவர்த்தி முறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. மாந்திரீகத்தில் இத்தகைய சாபநிவர்த்திகள் புழக்கத்தில் இருக்கிறது.

        திண்ம மற்றும் கனிம பொருள்களின் சாப நிவர்த்தி

        இது இரசவாதம், மருந்து தயாரிப்பு மற்றும் இயந்திர தயாரிப்புகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் திண்ம, திரவ, உலோக பொருட்களை தூய்மைப் படுத்தும் வகையில் அமைகிறது.

        மூலிகை சாபநிவர்த்தி என்பதை மூலிகையினை நிலத்தில் இருந்து பறிக்கும் பொழுதில் செய்திட வேண்டிய முன் தயாரிப்பாக கருதலாம்.காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம்.பிற் செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என்கின்றன்ர்.உடல் சாபநிவர்த்தி பெற்றவர்களுக்கு இத்தகைய பகுத்தறியும் திறமை வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.

        மூலிகை பறிப்பதற்கு முதல் நாளே குறிப்பிட்ட மூலிகையினை சுற்றியுள்ள மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டுமாம்.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென உள்ள பூசை முறைகளோடு தனித்துவமான ம்ந்திரத்தை செபித்து விரல் நகம் படாமல் அந்த செடியினை வேரோடு பறித்திடல் வேண்டும் என்கின்றனர்.சாபநிவர்த்தியின் அடிப்படையே குறிப்பிட்ட மூலிகையின் உயிர்த் தன்மையினை தக்க வைப்பதாகும்.

        சாப நிவர்த்தி மந்திரங்களுக்கு பொருள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. பெரும்பாலான மந்திரங்களை லட்சம் தடவை செபித்து உருவேற்றிட வேண்டும் என குறிப்புகள் கூறுகிறது.இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் இன்னமும் அறியப் படவில்லை.

        நண்பரொருவர் செடிகளில் இருக்கும்,பூச்சிகள், கிருமிகள் போன்றவற்றை அகற்றிட இம்மந்திரங்கள் உபயோகமாகலாம் என கூறியிருந்தார், இது குறித்து அறிந்தவர்கள் மேலதிக விவரம் கூறினால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.

        இனி சில மூலிகை சாப நிவர்த்தி மந்திரங்களைப் பார்ப்போம்.

        “ஆமென்ற வசியமென்று சொல்லக் கேளு ஆ அதி முதலான கொடியறுகு வாங்க டங் றீங் வங் யென்று லட்சம் செபித்தால்”

        – அகத்தியர் –

        கொடியறுகு வேரை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது “டங் றீங் வங்” என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

        “நாடவே பெருவாகை மூலிசாபம் கெவனமுடன் ஓம் நமசிவய வென்று தாளப்பா லட்சமுரு ஓதும் போது மீளப்பா வசிய யோகம் தரணியில்”

        – அகத்தியர் –

        பெருவாகை மூலிகையை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது “ஓம் நமசிவய” என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.

        இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் சாபநிவர்த்தி மந்திரங்கள்

        “பத்தியுடன் பாசாண சுண்ண செந்தூரம்
        பாங்காகப் புடமிடும்முன் சாபங்கேளே கேளப்பா பாசாண சாபந்தீரக் கிருபையுடன் ஓம் ஹீம் நசிமசி யென்று வாளப்பா ஆயிரத்தெட் டுருச்செபிக்க வலியான பாசாண சாபந்தீரும்”

        – அகத்தியர் –

        பாசாண சுண்ண செந்தூரங்களை புடமிடும் முன் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொலும் அகதியர்.. மேலும் கிருபையுடன் “ஓம் ஹீம் நசிமசி” என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் வலிமை உள்ள பாசாணங்களின் சாபங்கள் தீரும் என்கிறார்.

        “போமேதான் உபரசத்தின் சத்தைச்சேர்த்து புகழான ரசவாதஞ் செய்யும் போது ஆமேதான் ஓம் றீம் நசிமசி யென்று அன்பாக ஆயிரத்தெட் டுருச்செபித்தால் வாமேதான் உபரசத்தின் சாபம் போச்சு”

        – அகத்தியர் –

        உபரசத்தின் சத்துக்களைச் சேர்த்து புகழ்நிறைந்த் இரசவாதம் செய்யும் போது அன்பாக “ஓம் றீம் நசிமசி” என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் உபரசத்தின் சாபங்கள் நீங்கும் என்கிறார் அகதியர்.

        இது வரை இந்த சித்த ரகசியம் தொடரில் சொன்ன மந்திரங்கள் வரிசையாக, உடல் சாப மந்திரங்கள், உடல் கட்டு மந்திரங்கள், தீட்சை மந்திரங்கள் என்ற படிமுறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அகத்தியர் வலியுறுத்துகிறார். 

        Comments

        Popular Posts

        அருள்வெளி சித்தர் 108 போற்றி

        பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

        மருந்துகளின்றி ஆரோக்யமாக வாழ

        நமது வாழ்க்கை முறையை சரிசெய்வது மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும். நம்மிடம் உள்ள ஆரோக்கியத்தை மருத்துவமனையில் தேடினால் கிடைக்காதல்லவா? இதை மக்களுக்கு புரியவைத்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.  நம் உடலானது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்ச பூதங்களால் தான் இயங்குகின்றது. அவற்றிலுள்ள பிரச்சினைகளை களைந்தாலே நாம் வாழ்நாள் முழுவதும் நோயின்றி ஆரோக்யமாக வாழலாம். உணவு நிலம்  இரைப்பை, மண்ணீரல், கணையம் ஆகிய உறுப்புக்கள் ஒழுங்காக இயங்க கீழே கொடுக்கபட்டுள்ளவற்றை பின்பற்றவும் 1. பசி: பசிக்கும்போது நமக்கு பிடித்த உணவை நிதானமாக உண்ணும்போது நம் உடல் அவற்றை சத்துக்களாக மாற்றிவிடும். உதட்டை பிரிக்காமல் உணவை நன்கு மென்று கூழ் போல் அரைத்துப் பின் விழுங்க வேண்டும். ஏனென்றால் காற்றும் நம் ஜீரணத்திற்கு எதிரி. அப்படி உண்டால் நம் உடலின் அனைத்து உறுப்புக்களும் நன்றாக இயங்கும் அதனால் ஆரோக்கியம் பேணப்படும். பசி இல்லாதபோதோ நமக்கு பிடிக்காத உணவை உண்ணும்போதோ மற்றும் உணவு உண்டவுடன் அதிக நீரை குடிக்கும்போதோ அவை கழிவுகளாக மாறி நமக்கு தொப்பை, வாயு தொந்தரவு, அல்சர், அ...

        வர்மம் varmam

        வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

        இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

        இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

        பாவங்களுக்கான வியாதிகள்

        பாவங்களுக்கான வியாதிகள் - கருட புராணம் !!! 1    யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர்.    மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார் 2   எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு    நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார். 3    விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால்    தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார் 4    கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு    சுயரோகத்தால் துன்பப்படுவார் 5    விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார் 6    தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர்    கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார் 7    பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர்    நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார் 8  ...