Skip to main content

உடல் கட்டு மந்திரங்கள்


நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது. பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு...

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம். ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது...

"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய

மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்

வகையோடே மந்திரத்தை தான் மைந்தா

தனி தனியாய் உருத்தான் போடு போடே"

- அகத்தியர் -


சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு உத்தமனே அம் ஹீம் என்று லட்சம் திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர அருவாக ஹீம் உறீம் என்று லட்சம் அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"

- அகத்தியர் -

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம் நன்று உருச் செபித்திடவே கட்டுத் தீரும்"

- அகத்தியர் -

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு அன்று நீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்று லட்சம் அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர். 

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு இறீம் றீம் நசி மசி யென்று போடே"

- அகத்தியர் -

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சனிக்கான உடல் கட்டு மந்திரம்..

"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி தேடுவாய் லட்சமுருப் போடு போடே"

- அகத்தியர் -

சனி பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"திறமான இராகுவுட கட்டுதீர நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்று லட்சம் நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"

- அகத்தியர் -

திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"சாடுவாய் கேதுவுட கட்டு தீர சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே"

- அகத்தியர் -

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார்.

குளிகன் உடல் கட்டு மந்திரம்..

"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம் தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"

- அகத்தியர் -

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.

"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப் பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும் சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும் கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும் குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும் காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும் கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"

- அகத்தியர் -

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை

சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன. இந்த மந்திரங்களை செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது போன்றவைகள் குருவினால் மட்டுமே கூறிட இயலும். தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.

இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை இன்று பார்ப்போம். மந்திரத்தை எவ்வாறு பெறுவது, அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி பார்ப்போம்.

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள் சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு வருவில்லா சிவயனார் மந்திரந்தானும் வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம் திருவான வினாயகரின் சுழியை முந்திச் செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே"

- அகத்தியர் -

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு வடக்குமுகம் இருந்து லட்சம் உருத்தான் போடு"

- அகத்தியர் -

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க வேண்டும் என்கிறார்.


Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...