1 யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர். மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார்
2 எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச கோளாரினால் பாதிக்கப்படுவார்.
3 விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார்
4 கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு சுயரோகத்தால் துன்பப்படுவார்
5 விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார்
6 தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர் கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார்
7 பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர் நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்
8 மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர் உடலில் கொப்பலங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார்
9 பொருள்களில் கலப்படம் செய்தவர்கள் வாய்வு தொல்லையால் அவதிப்படுவார்
10 மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர் சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார்
11 ஆபாச நடனங்களை பார்;க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை
நோய்க்கு ஆட்படுபவர்
12 பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர் பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால்
துன்புறுவர்.
13 வுழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள்
14 இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள் பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.
15 வரும் நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர் பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும்.
16 சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர் மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்
17 சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர் அனைத்து பற்களை இழந்தவராகவும், கொண்டைப்புண்
உடையவராகவும் பிறப்பார்
18 சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர் வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார்
19 தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர் ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய்
உள்ளவராகிறார்
20 ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம்
21 புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர் வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார்.
22 உடன் பிறந்த சகோதர – சகோதரிகளை மிரட்டுபவர் மலட்டுத் தன்தையுடன் பிறக்கிறார்
23 வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடு;ப்பவர் ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம்
24 காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டு;ப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள் பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார்.
25 கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர் உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்
26 பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர் வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர்
27 தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்
28 பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள் தொற்று நோய்க்குள்ளாவார்கள்
29 காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள்
30 ஆண்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர் சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவர்
Comments
Post a Comment