குண்டலினி தொடரின் நெடுகே ஒவ்வொரு சக்தி ஆதார சக்கரங்களில் இருந்து தாமரை இதழைப் போல வெளிக் கிளம்பும் நாடிகளைப் பற்றி பார்த்தோம்.
குண்டலினி யோகத்தின் போது மூலாதாரத்தில் நான்கு இதழ்களும், சுவாதிஷ்டானத்தில் ஆறு இதழ்களும்; மணிபூரகத்தில் பத்து இதழ்களும், அநாகதத்தில் பன்னிரெண்டு இதழ்களும், விசுத்தியில் பதினாறு இதழ்களும், ஆக்ஞையில் இரண்டு இதழ்களும் வெளிக் கிளம்புவதைப் பார்த்தோம். இந்த நாடிகள் அதிரும் போது ஒலி உருவாவதையும் பார்த்தோம்.
சித்தரியலில் பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது மிக நுட்பமானது, சூட்சுமம் நிறைந்ததும் கூட. பஞ்சாக்கரம் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர் நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.
அகத்தியர் துவங்கி திருமூலர், பட்டினத்தார், சிவவாக்கியார், கோரக்கர் போன்ற பல சித்தர் பெருமக்கள் இந்த ஐம்பத்தி ஒன்று எழுத்த்துக்களின் மகத்துவத்தை பாடியுள்ளனர்.
திருமூலர் தனது திருமந்திர மாலை என்னும் நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
"பெறுதியில் அம்முதல் பேசும்க்ஷவ் வீறாய்
அறிவதெழுத்தைம்பத் தொன்றுமங் கானதே"
- திருமூலர்.
மேலும் திருமூலரே தனது திருமந்திரம் என்னும் நூலிலும் பஞ்சாக்கரம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்.
அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே.
- திருமூலர்.
அருணகிரி நாதரும் தனது திருப்புகழில் பஞ்சாக்கரத்தை இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"அகர முதலென உரைசெய் ஐம்பத்தோரட்சரமும்"
-அருணகிரிநாதர்.
இப்படி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை பஞ்சாக்கரத்திற்கு எடுத்துக் காட்டாய்ச் சொல்லலாம். இவற்றின் படி, இந்த ஐம்பத்தி ஒரு எழுத்துக்களையும் மிக முக்கியமானதாகவும், உயர் தனித்துவமானவை என்று போற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்போது மீண்டும் குண்டலினிக்கு வருவோம். குண்டலினி யோகத்தில் ஏழு முக்கிய ஆதாரங்களில் இருந்து வெளிக்கிளம்பும் நாடிகளின் அதிர்வுகளால் ஏற்படும் ஒலிகளை தமிழ் எழுத்துக்களாக குறித்திருப்பது உங்களுக்கு இப்போது நினைவுக்கு வரலாம்.

குண்டலினி யோகத்தில் ஒவ்வொரு ஆதார மையமும் சித்திக்கும் போது உருவாகும் அதிர்வுகள் எழுப்பும் ஓசையைத்தான் சித்தர்கள் பஞ்சாக்கர எழுத்துக்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர். ஆறு ஆதார சக்கரத்தில் இருந்து எழும்பும் ஐம்பது நாடிகளின் சப்பதங்கள் அய்ம்பது எழுத்துக்களாகவும், துரிய நிலை சித்திக்கும் போது உருவாகும் உருவாகும் பேசாமொழியான ஓரெழுத்தும் சேர ஐம்பத்தியோரு எழுத்துக்கள் ஆகின்றன. இந்த பேசா மொழியைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன். இதனை நாயோட்டு மந்திரம் என்றும் அழைப்பர்.

Comments
Post a Comment