மாற்றுப்பெயர் ; நாயுருவி கடலாடி,அமராரவம், கருதீதனகோரத்தி, கங்கேசரி, காரத்தி, காரம், சிலைகாரம், சிவந்த ஞாயிறு, பரமாரி, பிறத்திய புற்பம், பிப்பீலிகிதநிதுச்சி, உளமணி, கடுடூதி, கரம்பை, மாமுனி, நாயுருஞ்சி.அபமார்கி.
வளரியல்பு: சிறுசெடி
இலைஅமைப்பு ; எதிரடுக்கில் காம்புள்ள முழுமையான இலைகள்
பூ,காய் ; நீண்ட கதிர்களுடன் கூடிய சிறிய பூக்கள்
மருத்துவ பாகம் ; சமூலம்.(முழு செடி)
குணம் ; சங்கோசனகாரி,மூத்திரவர்த்தனகாரி,வியதாபேதகாரி.
தீர்க்கும் நோய்கள்:
மலிகாரங் கைப்புள்ள அபமார்கியின் வேரால் வசியமுண்டா
மிலைமூல வுதிரமந்தம் பேதிகபம் வியர்வு தந்தியிறங்குமேகம்
மலையேனும் படிபுரியு முள்ளரிசி பசிமாற்றும் வன்சமூலம்
பலமாதர்க் குள்ளழுக்கை நீக்கும்வங்க செந்தூரம்பண்ணுமாதோ.
"வேலுக்கு பல் இருகும்வேம்புக்கு பல் துலங்கும்
பூலுக்கு போகம் பொழியுமே – ஆலுக்குத்
தண் தாமரையாளும் சார்வளே நாயுருவி
கண்டால் வசீகரமாம் காண்".
"ஓதமுறு சோபை யுயர்பாண்டு வைப்போக்குந்
தீதுறுகா மாலைநோய் தீர்க்குமினார் – சூதகநீர்
பொய்ப்புறுகா லத்ததனைப் பொங்குவிக்குங் காரமொடு
கைப்புறுசெந் நாயுருவி காண்."
கசப்பும் கார்ப்புமுள்ள அபமார்கியின் வேரால் முகவசீகரமாம்.இலை இரத்தமூலம்,அதிசாரம்,கபநோய்,வியர்வை,தந்திப்பிரமேகம் விலக்கும். விதை பசி நீக்கும்.சமூலச் சாம்பல் பிரசவித்த மாதர் உதிரச்சிக்கல் போக்கும்.வங்கத்தைச் செந்தூரமாக்கும்.
1. அரைத்துக் கட்ட கொப்புளங்கலில் உள்ள துர்நீரை வெளீயேற்றி ஆற்றும்.
2. இலைச்சுரசம் 15மிலியுடன் சர்க்கரை கூட்டி 3-5 நாள் காலைமாலை கொடுக்க மூலம்,பழைய இருமல்,அதிசாரம்,வியர்வை,தந்திமேகம் போம்.
3. சாறுடன் வெள்ளாட்டுக் கொழுப்பு,மருதோன்றிக் குழித்தைலம் கலந்து தேய்க்க கைகால் நரம்பு இசிவு குணமாகும்.
4. இலையைக் கசக்கி ஊறலெடுத்துப் படருகின்ற தேமலுக்குத் தேய்க்கக் குணமாகும்.
5. இலை கியாழத்தால் வாய் கொப்புளிக்க பல்வலி,உண்ணாக்குவலி தீரும்.
6. இலையை ரோஜாப்பூ எண்ணை அல்லது ந.எண்ணையில் காய்ச்சி காதிலிட காதுவலி குணமாகும்.
7. வேரால் பல் துலக்க முக வசீகரமுண்டாகும்.
8. இலையைக் கசக்கித் தேய்க்க தேள்கடி விஷமிறங்கும்.
9. இலையை அரைத்துப் பற்றுப்போட வண்டு,குழவி,தேனீ போன்றவற்றின் கடியால் ஏற்பட்ட கடுப்பு தீரும்.
10. 10 கிராம் இலையை அரைத்து ந,எண்ணையில் கலந்து 10நாள் காலைமாலை சாப்பிட இரத்தமூலம் தீரும்.
11. வேர்ப்பட்டையுடன் சமன் மிளகு பொடித்துக் கால் கிராம் தேனில் குழைத்து காலைமாலை சாப்பிட்டுவர இருமல் தீரும்.
12. 10கிராம் விதயை அரைத்துக் காலைமாலை 2நாள் சாப்பிட பேதி தீரும்.
13. துத்திக்கீரை வதக்கலில் விதைச்சூரணம் 20கிராம் கலந்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
14. விதையை சோறுபோல் சமைத்துண்ண பசி இராது.1வாரம் ஆயாசமிண்றி இருக்கலாம்.மிளகு வறுத்துக் குடிநீர் காய்ச்சிப் பருகபசி உண்டாகும்.
15. நாயுருவிச் சாம்பல்,ஆனங்காய்(ஆண் பனை பூ பாளை)சாம்பல்சமன் கரைத்து தெளிவை காய்ச்சி எடுத்த உப்பு(நாயுருவி உப்பு) 2அரிசி எடை தேன்.நெய்,மோர்,வெண்ணை ஏதேனும் ஒன்றில் கொடுக்க என்புருக்கி,நீரேற்றம்,குன்மம்,பித்தப்பாண்டு,ஆஸ்துமா தீரும்.
16. செந்நாயுருவி இலைசாறு 15-25 மிலி தினம் 2வேளை கொடுக்க வயிற்ரு நோயைக் குணப்படுத்தும்.அதிக அளவில் கொடுக்க ஸ்திரீகளுக்குக் கட்டுப்பட்டுள்ள உதிரத்தையும் பிண்டத்தையும் வெளிப்படுத்தும்.
17. செந்நாயுருவி இலையுடன் மிளகு,பூண்டு சிறிது வெல்லம் சேர்த்து அரத்துத் தூதுவேளைகாய் அளவு மாத்திரை செய்து 3வேளை தினம் கொடுக்க முறைசுரம் குணமாகும்.
18. செந்நாயுருவி வேர்ப்பட்டைச் சூரணம்,மிளகு சூரணம் வகைக்கு 2 குன்றி எடைதேனில் குழைத்து காலைமாலை 3 நாள் கொடுக்க இருமல் குணமாகும்.

Comments
Post a Comment