Skip to main content

ஆடுதின்னாப்பாளை Aristolochia bracteolate Aristolochiaceae


மாற்றுப்பெயர் ; ஆடு தீண்டாப் பாளை, கத்திருயம், புழுக்கொல்லி, பங்கம், பங்கம் பாளை, வாத்துப் பூ.
வளரியல்பு ;     தரையோடு படர்ந்து வளரும் சிறுசெடி
இலைஅமைப்பு ;   மற்றடுக்கில் வெள்ளைப் பூச்சுடைய முட்டைவடிவ சாம்பல் கலந்த நிறத்துடன் மடிப்புச் சுருளுடன், ஓரங்களில் கறுப்பு கலந்த பச்சையாக இருக்கும். கசப்பும், துவர்ப்பும் ஒருங்கே கொண்ட கிருமி நாசினித்தன்மையுடையது.இதன் மலர்களும் இதே நிறத்தை ஒத்து இருக்கும்.
பூ,காய் ;    முதிர்ந்த நிலையில் வெடித்துச் சிதறும் காய்
மருத்துவ பாகம் ;   சமூலம்.
குணம் ;   கிருமி நாசினி, பிரசவகாரி, முறைவியாதிரோதி, ருதுவர்தனகாரி. தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கரிசல் நிலத்தில் வளர்கின்றது.
மருத்துவக் குணங்கள்:
"ஆடுதொடாப்பாளைக் ககக்கிருமி வன்சிலந்தி
நீடுகருங் குஷ்டம் நிறைகரப்பான் –ஆடிடச்செய்
யெண்பது வாய்வு மிகில்குஷ்ட முந்தீருந்
திண்பெறுநற் றாதுவுமாய் செப்பு"
(பதார்தகுண சிந்தாமணி)
மலாஸயக்கிருமி,சிலந்திப்பூச்சி விஷம்,கருங்குஷ்டம்,கரப்பான்,சர்வ வாத ரோகம், கிடிப குஷ்டம் நீங்கும்,சுக்கில விருத்தி உண்டாகும்.வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும், மாத விலக்கைத் தூண்டும் மருந்தாகவும், பேறு கால வலியை அதிகரிக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.

இலைச் சூரணம் 2 சிட்டிகை வெந்நீரில் கலந்து குடிக்க, பாம்பு விஷம், சில்லறை விஷம், மலக் கிருமிகள், கருங் குட்டம், யானைத் தோல் சொறி குணமாகும்.
வேரை அரைத்து 2 வேளை 5 கிராம் வெந்நீரில் கொடுத்து கடும் பத்தியத்தில் இருக்கச் செய்ய 3 நாளில் எல்லா விதமான பாம்பு விஷமும் முறிந்து விடும். (புதுப்பானையில் உப்பில்லாத பச்சரிசிப் பொங்கல் சாப்பிடச் செய்து ஒரு நாள் முழுவதும் விஷம் தீண்டியவரை தூங்கவிடக் கூடாது.)
வேர் சூரணம் 10 கிராம் வெந்நீரில் கொடுக்க மகப்பேறு வலி நீங்கி சுகப் பிரசவம் ஆகும்.                                       
விதைச் சூரணம் 5 கிராம் எடுத்து விளக்கெண்ணெயில் கலந்து கொடுக்க நன்கு பேதியாகி வயிற்று வலி, சூதகத் தடை, மலக் கிருமிகள்,பிரசவ வேதனை,முறைக்காய்ச்சல் நீங்கும்.
இலைச்சாறு 10மிலி காலைமாலை,குடித்துவர ஒழுங்கற்ற மாதவிடாய் சீராகும். விட்டுவிட்டு வரும் காய்ச்சல் தீரும்.
இலையை அரைத்து கொட்டைப்பாக்களவு வெள்ளாட்டுப்பாலில் கலந்து குடிக்க சகல விஷம்,புண்,பிளவை,சிரங்கு,வங்கு,கரப்பான்,குஷ்டம் தீரும்.
இலையை நிழலில் உலர்த்திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டியளவு 2 வேளை சாப்பிட்டு வர தோல் வியாதிகள், குட்டம், மலக்குடல் சம்பந்தமான வியாதிகள், சிறுநீரகத் தொற்றுகள் குணமாகும்.
சமூலம்,பறங்கிப் பட்டை, வெள்ளை மிளகு, பெரியா நங்கை, கீழாநெல்லி வகைக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவாக தொடர்ந்து 2 வேளை சாப்பிட்டு வர கருங்குட்டம், வெண்குட்டம், சிறுநீர் வழியில் புண், தோல் வியாதிகள், சர்க்கரை வியாதி குணமாகும்.
இலைச் சாறு, துளசிச்சாறு சம அளவாக 100 மில்லியளவு எடுத்து சிறிது மிளகுத் தூள் சேர்த்துக் குடிக்க சில வகையான விஷங்கள் முறியும்.
இலை 100 கிராம், மிளகு 10 கிராம் அரைத்து பட்டாணியளவு மாத்திரைகளாகப் உருட்டிக் காய வைத்து 2 வேளை ஒரு மாத்திரை வீதம் உண்டு வர மேக வாயு நீங்கும்.
சமூலம், வசம்பு சம அளவாக எடுத்து இடித்து கட்டியின் மேல் வில்லையாக வைத்து அதன் அளவிற்கு பானையோட்டை வட்டமாக நறுக்கி அதன்மேல் வைத்து இப்படியாக 3 நாள் கட்ட அரையாப்புக் கட்டி கரையும்.
வேர், கவிழ்தும்பை வேர், வெள்ளருகு வேர், மருக்காரைவேர் சமஅளவாக எடுத்து அரைத்து உடம்பில் பூசி முறுக்கித் துவட்ட, கருவழலை, தண்ணீர் பாம்பு முதலிய சில்லறை விஷங்கள் முறியும்.
சமூலத்துடன் கருங்குருவை நெல் சேர்த்தவித்து அவலிடித்து,தினம் வேளைக்கு 40 கிராம்,1மண்டலம் கொடுத்துவர சொறி சிரங்கு,குஷ்டம்,வங்கு, வண்டுக்கடி, அரணைக்கடி,செய்யான்கடி,பூரான்கடி முதலியவை நீங்கும். அப்போது மிளகை பால் விட்டரைத்து ஸ்நானம் செய்வது நன்று.3 மாதம்வரை ந.எண்ணை,கடுகு போகம் நீக்கவும்.
உலர்ந்த இலை 40-60கிராம்,அரை லி நீரிலிட்டு 150மிலியாகக் காய்ச்சி வடிகட்டி குடிக்க கிருமிகள் அழியும்.2-3முறை கொடுத்து பேதிக்கு கொடுக்க அழிந்த கிருமிகள் வெளியேறும்.
வேர் சூரணம் 5-10 கிராம் 50மிலி கொதிக்கும் வெந்நீரில் போட்டு அரைமணி நேரம் மூடிவைத்து வடித்துக் கொடுக்க குளிர் சுரம் நீங்கும்.பிரசவ வேதனை அதிகரித்து சுகப்பிரசவம் ஆகும்.
இலைச்சாறுடன் சமன் நல்லெண்ணை கலந்து காய்ச்சிப் பூச கருங்குஷ்டம், கரப்பான், சிரங்கு,சிலந்தி தீரும்.
வேரை பாம்பு விஷம் தீண்டியவரை மெல்லச் சொல்லி கடிபட்டவரின் வாய் ருசியை வைத்து எந்த வகையான பாம்பு தீண்டியது என்பதை எளிதாய் காணலாம்.

இளைப்பு -கொம்பேறி மூக்கன் பாம்பு,
இனிப்பு -நல்ல பாம்பு,
தலை நடுக்கம் -கட்டு விரியன் பாம்பு,
உணர்வு இல்லாமை -இருதலை மணியன் பாம்பு,
மூக்கு எரிச்சல் -செய்யான் பாம்பு,
கண் பஞ்சடைவது -மூஞ்செறி பாம்பு,
காது அடைப்பு -மூஞ்சுறி பாம்பு,
புளிப்பு -வழலைப் பாம்பு,
புளித்த பிறகு காரம் -கட்டு விரியன் பாம்பு அல்லது பெருவிரியன் பாம்பு,
முள்ளுக் கீரை சுவை -சீத மண்டலம் பாம்பு,
நாக்கு கடுகடுப்பு -சுருட்டைப் பாம்பு,
நெஞ்சடைத்தல் -கண் நஞ்சான் பாம்பு,
கண்பார்வை மங்கல் -கண் நஞ்சான் பாம்பு,
பல்லில் சூடேறினால் -செய்யான் பாம்பு.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அத்தி

1. மூலிகையின் பெயர் :- அத்தி. 2. வேறு பெயர் :- அதவம் மரம் 3. தாவரப்பெயர் :- FICUS GLOMERATA, FICUS AURICULATE. 4. தாவரக்குடும்பம் :- MORACEAE. 5. பயன்தரும் பாகங்கள் :- இலை, பிஞ்சு, காய், பழம், பால், பட்டை ஆகியன. 6. வளரியல்பு :- அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுகைகளில் நன்கு வளரும். மாற்றடுக்கில் அமைந்த முழுமையான இலைகளை உடைய பெரு  (FICUS GLOMERATA , ROXB ; MORACEAE ) மர வகையைச் சேர்ந்தது.நாட்டு அத்தி (COUNTRY FIG), வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உத...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

குண்டலினி ஆற்றல் 3

குண்டலினியை எப்படி எல்லாம் எழுப்பலாம்! மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம். இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை. ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும...

குண்டலினி ஆற்றல் 9 விசுத்தி

குண்டலினி - விசுத்தி. மூலாதாரத்திலிருந்து ஐந்தாவது சக்கரமான விசுத்தி பற்றி இன்று பார்ப்போம். இதைப் பற்றி அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார். ஆச்சப்பா வனாகததி னொடுக்கஞ்சொன்னோம் அறையுகிறேன் விசுத்தியி னடவைக்கேளு மாச்சப்பா வதற்க்குமேல் பன்னிரெண்டங்குலம் பாச்சப்பா பதினாறு யிதழ்தா னாகும் பாலகனே அட்சரந்தான் வகாரமாகும் வதுநடுவில் சதாசிவனும் சாகினியுமாமே. - அகத்தியர். இந்த சக்தி ஆதார மையமானது நமது தொண்டையின் அடிப்பாகத்தில் சுழுமுனை நாடியில் அமைந்து இருப்பதாக குறிப்பிடுகின்றனர். நமது குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள், நுரையீரல், கைகள் போன்ற உறுப்புகளுடன் விசுத்தி சக்கரம் தொடர்புடையதாக குறிப்பிடப் படுகிறது. பஞ்சாட்சர எழுத்துக்களான "சிவயநம" என்னும் எழுத்துகளில் ஒன்றான "வ" என்னும் எழுத்தையும், அதன் தத்துவத்தையும் விசுத்தி சக்கரம் விளக்குவதாக அமைகின்றது. இச்சக்கரத்தின் அதிதேவன் சதாசிவன், அதி தேவதை சாகினி. பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாசம் இதன் மூலக்கூறு. இதன் மூல மந்திரம் “ஹம்” எனப்படுகிறது. இந்த சக்கரத்திலிருந்து தாமரை இதழ் போன்ற பதினாறு யோக நாடிகள் கிளம்புகின்றன....