Skip to main content

புடமிடுதல்

புடம் போடுவது என்பது சித்த மருந்தியலின் தனித்துவமான அறிவியல் என்பதை நேற்று பார்த்தோம். புடம் போடுவது என்பது உலை எனப்படும் அடுப்பு, அதில் உருவாக்கப் படும் வெப்பம் என இரண்டு கூறுகளை உள்ளடக்கிய செயல்பாடு.
வெப்பம் என்பது விறகு மற்றும் எரு அல்லது வறண்டு காய்ந்த பசுவின் சாணமான வறட்டிகள் மற்றும் தானியங்களை எரிப்பதன் மூலம் உருவாக்கப் படுகிறது. இவ்வாறு எரிக்கப் படும் தீயின் அளவுகளைக் கூட வரையறுத்திருக்கின்றனர். இந்த அளவுகள் எல்லாம் காலம் காலமாய் வாய்மொழியாவே அடுத்தடுத்த தலைமுறையினருக்கு கற்றுத் தரப் பட்டிருக்கிறது.
விறகினைக் கொண்டு எரிக்கும் போது உருவாகும் தீயின் அளவை நான்கு வகைகளாக குறிப்பிடுகின்றனர்.
மலர்ந்த தாமரை மலரைப் போல எரியும் தீயினை ”கமலாக்கினி” என்கின்றனர்.
துணிப் பந்தம் எரிவது போல உருவாகும் தீயினை “காடாக்கினி” என்கின்றனர்.
குவிந்த வாழைப் பூவினைப் போல எரியும் தீயினை “கதலியாக்கினி” என்கின்றனர்.
அகல் விளக்கின் சுடர் போல எரியும் தீயினை “தீபாக்கினி” என்கின்றனர்.
ஒவ்வொரு வகையான புடத்திற்கும் என்ன மாதிரியான நெருப்பு தேவை என்பது மிக முக்கியமானதாக கூறப் பட்டிருக்கிறது. இந்த பக்குவத்தில் விறகை எரித்தால் மட்டுமே புடம் போடும் செயல் வெற்றியாகும்.
எரியும் தீயின் வெப்பம் ஒரே மாதிரி சீராக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எரியும் விறகின் ஈரத்தன்மை, எரியும் சுடரின் தீவிரம், சுற்றுப் புறத்தில் வீசும் காற்று போன்ற காரணிகள் ஒரே சீரான வெப்பத்தை தராது. இதன் பொருட்டே சீரான வெப்பம் வேண்டி மற்றொரு முறையில் ஆட்டின் எரு மற்றும் மாட்டுச் சாணத்தை காய வைத்து வறட்டியாக பயன் ப்டுத்தினர்.
இந்த முறையில் வறட்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து தேவையான வெப்பத்தின் அளவு தீர்மானிக்கப் பட்டது.இதனை அகத்தியர் தனது “அகத்தியர் வாத சௌமியம்” என்ற நூலில் விளக்கமாய் கூறியிருக்கிறார்.

புடம் - வகைகள்

சித்த மருந்தியலில் மருந்துகளை ஒன்றோடு ஒன்று பிணைக்கவும், தேவையான மருந்தினை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும் புடம் போடுதல் செய்யப் படுகிறது. சில வகையான மருந்துகளுக்கு நீடித்த கூடுதல் வெப்பமும், தீயானது நேரடியாக மூலகங்களின் மீது படாமல் இருக்க வேண்டும்.அம்மாதிரியான செயல் முறைகளுக்கு பசுவின் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப் பட்ட வறட்டிகளைக் கொண்டு புடம் போட்டனர்.
இந்த வறட்டிகளின் எண்ணிக்கையை வைத்து இந்த புடங்களுக்கு பெயரிடப் பட்டுள்ளது. அகத்தியர் தனது "அகத்தியர் வாத சௌமியம்" என்னும் நூலில் இது பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.
ஆமப்பா புடந்தனக்கு நிதானங்கேளு
அப்பனே காடையது எருவென்றாகும்
நாமப்பா கவதாரி எருமூன்றாப்பா
நன்மையுள்ள குக்குடந்தான் எருபத்தாகும்
நாமப்பா வராகபுடம் எருஐம்பதாகும்
தயவான கனபுடந்தான் எருநூறாகும்
ஓமப்பா கெஜபுடந்தான் ஆயிரமுமாகும்
உத்தமனே கைமுறையாய்ப் புடமாய்ப்பாரே
அகத்தியர்.
ஒரு வறட்டி கொண்டு போடப்படும் புடத்தினை “காடைப் புடம்” என்றும், மூன்று வறட்டிகளை பயன்படுத்தினால் அதை ”கௌதாரிப்புடம்” என்றும், பத்து வறட்டிகளை கொண்டு போடப் படும் புடத்தினை “குக்கூபுடம்” (சேவற்புடம்) என்றும், ஐம்பது வறட்டிகளைக் கொண்டு போடப் படும் புடத்தை “வராக புடம்” (பன்றிப்புடம்) என்றும், நூறு வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கனபுடம்” என்றும், ஆயிரம் வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கஜபுடம்” (யானைப்புடம்) என்றும் அகத்தியர் வரையறுத்திருக்கிறார்.
இவை தவிர தொன்னூறு வறட்டிகளைக் கொண்டு போடப்படும் புடத்திற்கு “மணல் மறைவுப்புடம்” என்று பெயர்.
வறட்டியை பயன்படுத்தாமல் ஆட்டின் எருவைக் கொண்டு போடும் ஒரு புட முறையும் உண்டு. அதை “பூமிப்புடம்” என அழைப்பர். நான்கு விரற்கடை அளவுக்கு ஆட்டின் எருவை இடுவதன் மூலம் இந்த முறையில் புடம் போடுவதுண்டு.
நெருப்பினை நேரடியாக பயன்படுத்தாமல், மறைமுகமாய் வெப்பம் உருவாக்கும் சில புட வகைகளும் உண்டு.
உமிப்புடம் - இது இரண்டு வகைப்படும். ஒன்று புடமிடவேண்டிய பொருட்களை உமியில் புதைது வைத்து எடுத்தல், மற்றையது உமியால் எரித்து புடமிடுதல்.
தானியப்புடம் - தேவையை பொறுத்து நெல்லுக்குள் அல்லது வேறு குறிப்பிட்ட தானியத்திற்குள் புதைத்து வைத்து எடுத்தல்.
சூரியப்புடம் - சூரிய ஒளியில் காயவைத்து எடுத்தல்.
சந்திரப்புடம் - நிலவின் ஒளியில் வைத்து எடுத்தல்.
பருவபுடம் - பௌர்ணமி அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.
அமாவாசைப் புடம் - அமாவாசை அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.
பனிப்புடம் - பனி பொழியும் வேளையில் புடமிட வேண்டிய பொருட்களை பனியில் வைத்து எடுத்தல்.
பட்டைப்புடம் - குறிப்பிட்ட மரத்தை துளைத்து அதனுள் புடமிடவேண்டிய பொருளை வைத்து அதே மரத்தின் தூள்களால் மூடி குறிப்பிட்ட நேரம் அல்லது சில நாட்கள் கழித்து எடுத்தல்.
இவை தவிர சூட்சுமமான புட வகைகளும் உண்டு. அவை “மனிதப்புடம்”, “குருப்புடம்” எனப்படும். அவற்றை குருமுகமாய் அறிவதே சிறப்பு.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...