Skip to main content

ஆன்மீகம் என்பது

ஆன்மீகம், இந்த ஒரு வார்த்தைக்குத்தான் எத்தனை எத்தனை அர்த்தங்கள், ஆளுக்கொரு அர்த்தங்களை பிடித்துக் கொண்டு தங்களுடைய மதம்தான் உயர்வானது என்று நிரூபிக்க வேண்டி என்னவெல்லாம் சொல்கிறார்கள், செய்கிறார்கள். கொஞ்சம் அழுத்தமாய் யோசித்தால் இத்தகைய மதங்களினால் சமூக நல்லிணக்கம் என்பது எங்காவது சாத்தியமாகி இருக்கிறதா? இதற்கு என்னதான் தீர்வு? வாருங்கள் இன்று இதைப் பற்றி கொஞ்சம் பேசித் தீர்ப்போம்.

அண்ட பெருவெடிப்பில் துவங்கிய இந்த பூமியில் ஒரு செல் உயிரியாக ஜனித்து இன்று மனிதனாய் வளர்ந்திருப்பதாக அறிவியல் சொல்கிறது. இதற்கு ஆதாரங்கள் இல்லை என்றாலும் அறிவியலார் சொல்லும் சாத்தியங்களை ஏற்றுக் கொள்கிற மன நிலைக்கு அநேகமாய் நம்மில் அனைவரும் வந்து விட்டோம். ஆக ஆதியில் இருந்து இன்றைய நிலை வரை நம்மை வார்த்தெடுத்தது எது? 

அதுதான் காலம். ஆம், கால பரிமாணத்தில் உருவானதுதான் இந்த பூமியும் அதில் வசிக்கும் அத்தனை உயிரினங்களும். இந்த காலத்திற்கு கடவுள் வேஷம் போட்டால் எப்படி இருக்கும். ஆனால் யாரும் அப்படி காலத்துக்கு கடவுள் வேஷம் போட்டதாக தெரியவில்லை. நம்மை போலவே கையும் காலும் உள்ள பிம்பங்களை உருவகித்து அதற்கு மகா சக்தியை கொடுத்து அதற்காக நம்முடைய காலத்தை கரைத்துக் கொண்டிருக்கிறோம்.

நண்பர்களே, நாம் பார்க்கப் போகிற ஆன்மீகம் என்பது மிக நிச்சயமாக மதத்தின் அடையாளம் இல்லை. அது நம் மனதின் அடையாளம். இதை தெளிவாக உணராமல் போனதால்தான் ஆளுக்கொரு மதச்சாயத்தை அப்பிக் கொண்டு நிற்கிறோம். சர்வ நிச்சயமாக மதச் சின்னங்களை உடம்பெல்லாம் அணிந்து கொண்டும், மத நூல்களை படித்துக் கொண்டும், அதன் விதிகளுக்குள் நம்மை சுருக்கிக் கொண்டு வாழ்வதல்ல ஆன்மீகம்.

எது நம்மை இயக்குகிறதோ அது எதுவென தேடி அறிவதே ஆன்மீகம். இது ஒரு வகையான அறிவு சார்ந்த தேடல். ஆன்மீகம் என்பது நமது அறிவின் ஓர் இயல்... ஆம்!, அறிவியலேதான். நன்றாக நினைவில் கொள்ளுங்கள். நிரூபிக்கப் படாத எதையும் அறிவியல் ஏற்றுக் கொள்வதே இல்லை.

ஆக, எது நம்மை இயக்குகிறது? கொஞ்சம் இப்படி சிந்தித்துப் பார்ப்போமே!, இரண்டு பேரின் அன்புதான் நம்மை உயிர்விக்கிறது, அவர்களின் அன்பும், அக்கறையும் நம்மை வளர்த்தெடுக்கிறது. அனுபவம் நம்மை செதுக்குகிறது, அறிவைத் தருகிறது. கருணை நம்மை உயர்த்துகிறது. ஆசையோ நம்மை உந்துகிறது. பெருகிய ஆசைதான் பொறாமையை தருகிறது. பொறாமை நம்முடைய நிதானத்தை இழக்கச் செய்கிறது. பெருகிய ஆசையும், பொறாமையும் நம்மை அழிவுக்கு இட்டுச் செல்கிறது.

ஒரு வாழ்நாளை இயக்குவது இவைதான். இந்த சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுதான் மனிதம். இதில் நம்மை எது உயர்த்தும் எது அழிவுக்கு கொண்டு செல்லும் என்பது தெளிவாக இருக்கிறது. இதுதான் நாம் தேடும் ஆன்மீகம். இதைத்தான் எல்லா மதங்களும் சொல்கிறது. நாம்தான் இந்த கருத்துக்களை மறந்து விட்டு மதம் சொல்லும் கதைகளை மட்டும் எடுத்துக் கொண்டு பொய்யான ஒன்றின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம்.

"ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்"
"அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்"

இதுதான் ஆன்மீகம், இதுதான் கடவுள்.

வள்ளல் பெருமானின் ஆன்மிகம் 

அருட்பா, மருட்பா என ஒரு பக்கம் கடுமையான வாத விவாதங்கள் நடந்து கொண்டிருந்தாலும் மறுபக்கத்தில் வள்ளல் பெருமானார் தனது ஆன்மிக தேடலின்  தெளிவு நிலைக்கு வந்திருந்தார். தன் தெளிவுகளுக்கு இறுதி வடிவம் கொடுத்து அதனை உலகத்தாருக்கு உணர்த்தும் வகையில் பாடல்களாய் எழுதிடவும் துவங்கினார்.

தூய்மையான அறிவுதான் தெய்வம். அது பேரன்பும், பெருங் கருனையும் கொண்டது. அது ஓர் உருவமில்லை. தூய சுடரைப் போல தெளிந்த பரிசுத்த நிலை. அந்த நிலையின் முன்னர் அனைவரும் சமம். இத்தகைய அன்பும், கருணையுமான இறை நிலையை நமக்குள் வளர்த்துக் கொள்வதன் மூலம் இறைவனை அடையலாம் என்பதாக அவரின் தெளிவுகள் இருந்தன.

தான் தெளிந்த ஆன்மிக நிலையை அடையத் தடையாக இருக்கும், சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், அவற்றைத் தாங்கிப் பிடித்த மூடநம்பிக்கைகளை முற்றாக நிராகரிக்கக் கூறினார். சாதியின் பெயரால் ஏற்றத் தாழ்வு சொல்லி மக்களை பிரித்து அவர்களை பாகுபடுத்துவதையும் கடுமையாக எதிர்த்தார். மேலும் இவற்றிற்கெல்லாம் ஆதாரமாகவும், அதிகாரமாகவும் செயல்படும் மதத்தையும் நிராகரித்தார்.

வள்ளல் பெருமானின் இத்தகைய நிராகரிப்புகளே  பழமை வாதிகளுக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் கிளப்பின. அவரது இத்தகைய நிலைப்பாட்டினை பின் வரும் சில பாக்களின் மூலம் அறியலாம்.

"சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி."

(அருட்காட்சி - ஆறாம் திருமுறை)

"சாதியும் மதமும் சமயமும் பொய்என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”

(அருட்பெருஞ்சோதி அகவல் - ஆறாம் திருமுறை)

"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமை உளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும்"

(சுத்த சன்மார்க்க வேண்டுகோள் - ஆறாம் திருமுறை)

இது போன்ற கருத்துக்கள் யாவும் அவர் பின்னாளில் அருளிய ஆறாம் திருமுறை தொகுப்பில் காணக் கிடைக்கின்றன.

தன்னுடைய இந்த கருத்துக்களை அவர் ஊர் ஊராய்ப் போய் சொற்பொழிவுகளின் மூலம் பரப்பிக் கொண்டிருந்தார். தனியொரு மனிதனால் இதை சாதித்து விட முடியாது என்பதை புரிந்து கொண்ட போது, தன்னுடைய இந்த நிலைப்பாட்டினை அமைப்பு ரீதியாக செயல்படுகிறவர்கள் மக்களுக்குக் கொண்டு சேர்த்திட விண்ணப்பம் செய்தார். ஆனால் பெருமானாரின் குரலை இத்தகைய அமைப்புகள் அலட்சியம் செய்ததோடு மட்டுமல்லாது அவரை பலவாறாக அவதூறும் செய்தன. வள்ளல் பெருமானோடு இணக்கமாய் இருந்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களும் ஒரு கட்டத்தில் அவரை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தனர்.

இத்தகைய சூழலில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வள்ளல் பெருமானார் மற்றவர்களை நம்பாது தானே களத்தில் இறங்கிச் செயல்பட தீர்மானித்து  1865 ல் ”சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பினை துவங்கினார். பின்னாளில் இது சமரச சன்மார்க்க சங்கம் என்பதாக பெயர் மாற்றம் கண்டது. அமைப்பு ரீதியாக வள்ளல் பெருமானார் செயல் பட ஆரம்பித்த பின்னரே 1867ல் அவரது நூல்கள் அருட்பா எனும் பெயரில் ஐந்து தொகுதிகளாக அச்சிடப் பட்டன.

இதன் பிறகே வள்ளல் பெருமானின் சமூக பங்களிப்புகள் வேகம் பெறத் துவங்கின 1865ல் துவங்கி அவரது மறைவு வரையிலான கால கட்டமே அவர் வாழ்வின் முக்கியமான பகுதியாக பார்க்கப் படுகிறது.

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...