"மனம் என்றும் மாடு அடங்கின்
தாண்டவக் கோனே! முத்தி
வாய்த்தனென்று எண்ணேடா
தாண்டவக் கோனே!".
"அல்லும் பகலும்நிதம் - பசுவே!
ஆதி பதந்தேடில்
புல்லும் மோட்சநிலை - பசுவே!
பூரணங் காண்பாயே".
"தோயாது இருந்திடும் பால்கற
தொல்லை வினையறப் பால்கற
வாயால் உமிழ்ந்திடும் பால்கற - வெறும்
வயிறார உண்டிடப் பால்கற"
- இடைக்காட்டுச் சித்தர் -
மதுரைக்கு அருகே உள்ள இடைக்காடு என்னும் ஊரில் பிறந்ததனால் இடைக்காடர் என்று அழைக்கப் பட்டார் என்றும் இவர் ஆயர் குலத்தவர் என்றும் சொல்லப்படுகிறது.
இவரது பாடல்களில், தாண்டவக்கோனே, பால்கற, கோனாரே, பசுவே, குயிலே என விளித்துப் பாடிய பாடல்கள் தான் அதிகம்.
இடைக்காடருக்கு ஞானத்தை உபதேசித்தவர் போகர் என்றும், போகர் சமாதி கொள்ளப் போகும் முன்னர், புலிப்பாணியை பழனியிலும், இடைக்காடரை திருவண்ணாமலையிலும் இருந்து இறைச்சேவை செய்ய பணித்ததாக சொல்லப் படுகிறது.
இடைக்காடர் ஞான சூத்திரம் 70
இடைக்காடர் வைத்தியம் 64
இடைக்காடர் பூஜா விதி 27
ஆகிய நூல்கள் இவர் இயற்றியதாக சொல்லப்படுகிறது.
இவர் திருவண்ணாமலையில் சமாதியடைந்ததாய் சொல்லப் படுகிறது.
நூல்:
வருடாதி நூல்கள்
மருத்துவ நூல்கள்
தத்துவப் பாடல்கள்
தியானச் செய்யுள்:
ஆயனராய் அவதரித்து
ஆண்டியார் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற கிரஹங்களை கோடு
போட்டு படுக்க வைத்த பரந்தாமனின் அவதாரமே!
மண்சிறக்க விண்சிறக்க கடைக்கண்
திறந்து காப்பீர் இடைக்காடர் ஸ்வாமியே!
பதினாறு போற்றிகள்
1. கிருஷ்ணனை தரிசிப்பவரே போற்றி!
2. கருணாமூர்த்தியே போற்றி!
3. பஞ்சத்தைப் போக்குபவரே போற்றி!
4. இளநீர் பிரியரே போற்றி!
5. உலகரட்சகரே போற்றி!
6. அபயவரதம் உடையவரே போற்றி!
7. மருந்தின் உருவமானவரே போற்றி!
8. பூலோகச் சூரியனே போற்றி!
9. ஒளிமயமானவரே போற்றி!
10. கருவை காப்பவரே போற்றி!
11. ஸ்ரீம் பீஜாட்சரத்தில் வசிப்பவரே போற்றி
12. கால்நடைகளைக் காப்பவரே போற்றி
13. ஸ்ரீ லட்சுமியின் கருணையை அளிப்பவரே போற்றி!
14. அங்குசத்தை உடையவரே போற்றி!
15. தேவலீலை பிரியரே போற்றி!
16. எல்லாம் வல்ல வனத்தில் வசிக்கும் ஸ்ரீ இடைக்காட்டுச் சித்தர் சுவாமியே போற்றி போற்றி!
இவ்வாறு அர்ச்சித்த பின்பு மூலமந்திரமான ஓம் ஸ்ரீம் இடைக்காடர் சித்தர் சுவாமியே போற்றி! என்று 108 முறை ஜெபிக்க வேண்டும். அதன்பின் நிவேதனமாக இளநீர், பால், பழம், தண்ணீர் வைக்க வேண்டும். இவருக்கு பச்சை வண்ண வஸ்திரம் அணிவிக்க வேண்டும். பூஜை செய்ய உகந்த நாள் புதன்கிழமை.
இடைக்காடர் சித்தரின் பூஜை முறைகள்: தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின்மேல் இடைக்காடர் சித்தரின் படத்தினை வைத்து மஞ்சள் குங்குமமிட்டு, அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். முதலில் இந்த சித்தரின் தியானச் செய்யுளை கண் மூடி மனமுருகக் கூறி இங்குள்ள பதினாறு போற்றிகளைக் கூற தென்னம்பூ, மல்லிகைப் பூக்களைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும்.
இடைக்காடர் சித்தரின் காரியசித்தி பூஜா பலன்கள்
இவர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர் இவரை முறைப்படி வழிபட்டால்....
1. ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்கள் நீங்கி நல்ல பலன்கள் ஏற்படும்
2. கல்வியில் தடை, சரியாக படிக்க முடியாத நிலை அகலும்.
3. வியாபாரிகளுக்கு உள்ள பிரச்சனைகள் நீங்கி வளம் பெருகும்
4. கற்பனைத் திறன், கவித்திறன் கூடும்
5. அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் தீரும்
6. புத்திசாலித்தனம் அதிகரிக்கும்
7. பிள்ளை இல்லாதவர்களுக்குப் பிள்ளை வரம் கிட்டும்
8. கல்விக்கூடங்களுக்கு உண்டான பிரச்சனைகள், ஆசிரியர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அகலும்
9. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கும்
நவகிரகங்களின் வரிசை மாற்றிய இடைக்காடர்!
தமிழின் புகழ்பெற்ற பதினெண் சித்தர்களில் ஒருவர் இடைக்காடர், திருமாலின் அவதாரமாகவே பலராலும் கருதப்படுவர். அக்கினித் தலமான திருவண்ணாமலையில் இடைக்காடர் வழிபாடுசெய்து கொண்டாடப்படுகிறார். இடைக்காடர் நிகழ்த்திய சாதனைகளில் இரண்டை பிரதானமாகச் சொல்வதுண்டு. ஒன்று, காயகல்ப உத்திகளை அவர்தான் கண்டுபிடித்தார். அவற்றை அனுசரிப்பதன் மூலம் என்றும் இளமையுடன் வாழலாம். இன்னொன்று, கோயில்களிலுள்ள நவகிரகங்களின் வரிசைமுறை ஒன்றுடன் ஒன்று பாராமல் நவகிரகங்களை அவ்விதத்தில் வரிசைப்படுத்தியவர் இடைக்காடர்தான். முன்னர் அவ்விதம் நவகிரகங்கள் இருக்கவில்லை. ஒன்றை ஒன்று பார்த்தவாறுதான் இருந்தன, அதனால் பலவகையான பஞ்சங்கள் நாட்டில் நேர்ந்தன. இடைக்காடர் எவ்விதம் அவற்றை வேறுவகையாக ஒன்றுடன் ஒன்று பாராதபடி வரிசைப்படுத்தினார் என்பதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப்படுகிறது. இடைக்காடர் வாழ்வுடன் கலந்திருக்கும் கதை அது. இடைக்காடர் எப்போது வாழ்ந்தார் என்பது சரியாகத் தெரியாவிட்டாலும் அவர் கி.மு. இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டில் இருந்திருக்கவேண்டும். என்று கூறப்படுகிறது. அவர் அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்ததாகவும் சொல்கிறார்கள்.
கண்ணன் தோன்றிய யாதவ குலத்தில்தான் இடைக்காடரும் தோன்றினார். இடைக்காடர் என்ற பெயரும் அவர் இடையர் குலத்தைச் சார்ந்தவர் என்பதனால் அமைந்த பெயர்தான். அவர் பாடல்கள் தாண்டவக் கோனே என்ற வார்த்தைகளுடன் முடியும். கோன் என்பது இடையர்களைக் குறிக்கும் சொல். கண்ணன் கீதையில் போதித்த கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! என்ற கர்ம யோகத்தைக் கடைப்பிடித்தவர் இடைக்காடர். இடைக்காடர் நல்ல குணங்களாலேயே உருவானவர். சூதுவாது ஒரு சிறிதும் அறியாதவர். குழந்தைபோல் வெகுளியானவர். அமைதி நிறைந்தவர். மிகுந்த பணிவானவரும்கூட. இப்படிப்பட்ட இடையரை எல்லாருக்கும் பிடித்திருப்பது இயல்புதான். மக்கள் அவரை நேசித்தார்கள். ஆடுகளைப் புல்வெளியில் மேய்ப்பதற்காக காலையில் அழைத்துச் செல்வார் அவர். திறந்த வெளியில் அவற்றை மேய விடுவார். இரவு அவற்றைக் கொட்டிலில் கொண்டுவந்து அடைப்பார். இதுதான் அவரது தினப் பணி. நாள்தோறும் தவறாமல் இந்தப் பணி நடந்துகொண்டிருந்தது.
இப்படியான காலத்தில், ஒருநாள் காலை அவரது குடிலைத் தேடிவந்தார் தவத்தில் சிறந்த ஒரு முனிவர். பார்த்தாலே அவர் மாபெரும் சித்தர் என்று தெரிந்தது. அவரது முகத்தைச் சுற்றி இன்னதென்றறிய இயலாத ஒரு புனித ஒளிபடர்ந்திருந்தது. அவரைப் பார்த்த இடைக்காடர் அளவற்ற வியப்படைந்தார். இவர் நம் வீடு தேடிவந்தாரே என மகிழ்ந்தார். உடன் எழுந்துநின்று அவருக்கு மரியாதை செலுத்தினார். அன்போடு ஓர் ஆசனத்தை அளித்து அதில் அமருமாறு அவரை மிகுந்த பிரியத்துடன் வேண்டினார். ஒரு கோப்பை ஆட்டுப் பாலைக் கொடுத்து அவரை அருந்திப் பசியாறச் சொல்லி உபசரித்தார். இடைக்காடரின் உபசரணைகளால் மகிழ்ந்த அந்தத் துறவி மேலும் சில நாட்கள் இடைக்காடர் குடிலிலேயே தங்கினார். இடைக்காடரது நல்லியல்புகளால் பெரிதும் கவரப்பட்ட அவர் தம் உபதேசங்களைச் செய்வதற்கு ஏற்ற சீடர் அவர்தான் என முடிவு செய்தார். பல அரிய உபதேசங்களைச் செய்த அவர். பலமுக்கியமான சித்துக்களையும் அவருக்குக் கற்றுத்தந்தார். யோகத்தில் பல உயர்ந்த நெறிகளை அவருக்குப் பயிற்றுவித்தார். இறுதியில் ஒரு முக்கியமான அறிவுரையையும் இடைக்காடருக்குச் சொல்லலானார் அவர்: மகனே! பலரும் இதுபோன்றவற்றைக் கற்கிறார்கள். ஆனால் உலகியல் ஆசைகளால் உந்தப்படுகிறார்கள். தங்களின் சுயநலனுக்காக தாங்கள் கற்ற வித்தைகளைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். தாங்கள் எவ்வளவு சக்தி படைத்தவர்கள் என்பதை அடுத்தவர்களுக்குக் காண்பிப்பதில் தங்கள் வித்தையைப் பாழ்படுத்துகிறார்கள். அப்படிப்பட்டோர் மந்தை மந்தையாக இருக்கிறார்கள். நீ அப்டிப்பட்ட மந்தையில் அவர்களைப்போன்ற ஓர் ஆடாக இருக்கப் போகிறாயா? யோசித்துப் பார். உண்மையில் நான் கற்றுத் தந்தவற்றை நீ உலக நலனுக்காகப் பயன்படுத்தவேண்டும். உலகை வழிநடத்தும் வகையில் நீ மனவளர்ச்சி அடையவேண்டும் மகனே!
இப்படிச் சொன்ன அந்த முனிவர் சற்றுநேரம் இடைக்காடரின் விழிகளையே உற்றுப்பார்த்தார். அது நயன தீட்சை என்பதை இடைக்காடர் அறியவில்லை. அப்படி உற்றுப்பார்த்ததன் மூலம் தான் பெற்ற அத்தனை ஞானத்தையும் இடைக்காடருக்கு வழங்கிவிட்டார். அந்த முனிவர். தம் ஆற்றல்களை இடைக்காடர் மிகச்சரியாக உலக நன்மைக்கே பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையோடு, இடைக்காடரின் தலையைத் தடவி ஆசிவழங்கி நடந்து மறைந்து போனார் அவர். இடைக்காடர் மனம் அந்த முனிவர் சொன்ன செய்திகளாலும் அவர் கற்பித்த அரிய யோக நெறிகளாலும் தளும்பிக்கொண்டிருந்தது. அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்த அவர் நாள்தோறும் அவற்றைப் பயிற்சி செய்யலானார். பயிற்சி அதிகமாக அதிகமாக இடைக்காடரின் அகக்கண் திறந்தது. அவர் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என முக்காலத்தையும் மேய்த்துக் கொண்டே ஆன்மிகத்திலும் ஈடுபட்டது அவர் மனம். ஒருநாள் அவரது ஞானக்கண் விரைவில் வரவிருக்கும் கடுமையான பஞ்ச காலத்தை அவருக்கு உணர்த்தியது. என்ன செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. நவகிரகங்கள் ஒன்றை யொன்று பார்த்துக் கொள்வதால் அத்தகைய கொடூரமான பஞ்சம் உலகைத் தாக்கப்போகிறது என்பதை அவரது நுண்ணறிவு அவருக்கு உணர்த்தியது. ஆடுகளை மேய்க்கும்போதெல்லாம் ஆநிரைகளை மேய்த்த கண்ணனையே அவர் மனத்தில் தியானித்து வந்தார். கண்ணா, கடும் பஞ்ச காலத்திலிருந்து தப்பிக்கவும் பின்னர் உலகம் பஞ்சம் நீங்கி வளம்பெறவும் நீதான் வழிகாட்ட வேண்டும் என்று ஓயாமல் பிரார்த்தித்தார்.
அவருக்கு கண்ணன் அருளால் திடீரென்று ஓர் யோசனை உதித்தது. தன் மந்தையிலுள்ள ஆடுகளை எருக்கிலை சாப்பிடப் பழக்கினார் அவர். பொதுவாக பால்வடியும் எருக்கிலையை ஆடுகள் சாப்பிடாது. எருக்கஞ்செடிகள் தண்ணீரே இல்லாத பிரதேசத்திலும் வளரக் கூடியவை. அவர் வற்புறுத்தி எருக்கிலையைக் கொடுத்துப் பழக்கியதால், அவரது மந்தையில் உள்ள ஆடுகள் மட்டும் எருக்கிலை சாப்பிடும் பழக்கத்திற்குத் தங்களை மாற்றிக்கொண்டுவிட்டன. இடைக்காடர் ஏன் இவ்விதம் தம் மந்தையில் உள்ள ஆடுகளை எருக்கிலை சாப்பிட வைக்கிறார் என்பதைப்பற்றி மக்கள் ஏதும் அறியவில்லை. அதோடு முன்யோசனையாக இன்னொரு செயலையும் செய்தார் இடைக்காடர். சாமை, வரகு ஆகிய இரு தானியங்களையும் நீர்ப்பிடிப்புள்ள களிமண்ணில் நன்கு கலந்தார். அவற்றைத் தன் குடிலின் சுவர்களில் சுண்ணாம்பு பூசுவதுபோல் பூசிவிட்டார். பார்க்க களிமண் பூசியதுபோலத் தோற்றமளித்த சுவர்களின் உள்ளே சாமையும் வரகும் கலந்திருக்கின்றன. காலச் சக்கரம் மிக வேகமாக உருண்டது. அந்த கடும் பஞ்சகாலம் வந்தது. உண்ண உணவின்றி மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்து போனார்கள். ஆநிரைகள் பலவும் சாப்பிடபுல்லோ பசுந்தழையோ இன்றி இறந்துபோயின.
ஆனால் இடைக்காடரின் மந்தையைச் சேர்ந்த ஆடுகள், வறட்சியிலும் வளரும் எருக்கிலைகளை சாப்பிட்டுக் கொழுத்துவந்தன. எருக்கிலை சாப்பிட்டுக் கொழுத்த ஆடுகளின் உடல் தின வெடுத்தது. அவை தங்கள் உடலை குடிலின் சுவரில் உராய்ந்தன. அப்போது மண் உதிர்ந்து அதன் உள்ளிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வரகும் சாமையையும் ஆட்டுப்பாலோடு கலந்து உணவாக உண்ணலானார் இடைக்காடர். அவ்விதம் ஆடுகள் வாழ்ந்ததைப் போலவே அவரும் உயிர்வாழலானார். பஞ்சம் பல்லாண்டுகள் தொடர்ந்ததால் மக்கள் பலரும் மாண்டுபோனார்கள். ஆனால் இடைக்காடரின் மந்தையில் உள்ள ஆடுகளும் இடைக்காடரும் மட்டும் அமைதியாக பஞ்சத்தை சகித்துக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள். பஞ்சத்தால் உலகம் முழுவதையும் அழிக்க வேண்டும் என்று நினைத்த நவகிரகங்களுக்கு இடைக்காடரின் வாழ்வு ஒரு புரியாத புதிராக இருந்தது. எப்படி இந்தப் பஞ்ச காலத்தை சமாளிக்கிறார் இடைக்காடர்? எப்படி இவரது ஆடுகள் மட்டும் கொழுத்து உயிரோடு தென்படுகின்றன? அதை அறிந்துகொள்ள வேண்டி ஒன்பது கிரகங்களும் ஒன்றாக ஒருநாள் இடைக்காடரின் குடிலுக்கு வருகை தந்தார்கள். அதற்காகத்தானே காத்திருந்தார் இடைக்காடர்?
தன் இல்லம் தேடிவந்த நவகிரகங்களை முறையாக உபசரித்தார் இடைக்காடர். பணிவிலும் விருந்தோம்பலிலும் அவர் வல்லவராயிற்றே? நவகிரகங்கள் ஒன்பது பேருக்கும் தர்ப்பாசனம் அளித்து அமரச் சொன்னார். வரகையும் சாமையும் கொஞ்சம் ஆட்டுப் பாலையும் கொடுத்து அவர்களை அன்போடு உண்ணச் சொன்னார். நவகிரகங்கள் அவற்றை உண்டு மகிழ்ந்தார்கள். சற்றே படுத்துறங்கலாமே என்று பணிவோடு விண்ணப்பித்தார் இடைக்காடர். அதுவும் சரிதான்; உணவுண்ட பின் சற்று உறக்கம் கொள்ள வேண்டியதுதான் என்றெண்ணிய நவகிரகங்கள் படுத்துறங்கி ஓய்வெடுக்கலானார்கள். நவகிரகங்கள் அனைவரும் உறங்கியதை உறுதிப்படுத்திக்கொண்டவுடன் பரபரவென்று செயல்படலானார் இடைக்காடர். நவகிரகங்கள் ஒன்றையொன்று பார்ப்பதால்தான் உலகில் இத்தனை பஞ்சம் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே உறங்கும் நவகிரகங்களை ஓசையில்லாமல் இடம் மாற்றிப் படுக்கவைத்தார். அவர்கள் ஒருவரையொருவர் பார்க்க இயலாதவாறு அவர்களின் வரிசை முறையே மாற்றிவைத்தார். பின் தன் தவ ஆற்றலாலும் யோக சக்தியாலும் அந்த வகையிலேயே அவர்கள் விழித்தபிறகும் இருக்குமாறு அவர்களை மந்திரங்களால் கட்டினார்.
நவகிரகங்கள் உறங்கி எழுந்தபோது தாங்கள் மந்திரங்களால் கட்டப்பட்டிருப்பதையும் ஒருவரையொருவர் பார்க்க இயலாதவாறு தங்களின் வரிசையமைப்பு மாறியிருப்பதையும் கண்டார்கள். இந்த அரிய சாதனையைச் செய்தவர் இடைக்காடரே என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். தன் நலனுக்காக அல்ல; உலக நலனுக்காக அவர் இந்தச் செயலைச் செய்திருக்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டார்கள். எனவே அந்த நற்செயலுக்கு மரியாதை தந்து நவகிரகங்களும் அவருக்குக் கட்டுப்பட்டார்கள். மறுகணம் வானில் இடி இடித்தது. மின்னல் மின்னியது. சோவென மழை பெய்யத் தொடங்கியது. மீண்டும் புவியில் பயிர் பச்சை தழைத்து பஞ்சம் நீங்கியது. நவகிரகங்கள் இடைக்காடருக்கு ஆசி வழங்கி மறைந்தார்கள். இடைக்காடரின் பெருமையுணர்ந்த அந்தப் பகுதி மக்கள் ஓடோடி வந்து அவரைப் பணிந்தார்கள். அவரை கண்கண்ட தெய்வம் என்றே போற்றினார்கள். இடைக்காடர் முறுவல் பூத்தார். குழந்தைகளே! என் பெருமை ஏதுமில்லை. ஓம் நமசிவாய மந்திரத்தை ஓயாமல் ஜபியுங்கள். பரமசிவனையும் கண்ணனையும் நாள்தோறும் வழிபடுங்கள். உலகம் சுபிட்சமாக இருக்கும்! இனி பஞ்சம் வராது. நீங்கள் எல்லாரும் ஆனந்தமாக வாழ்வீர்கள்! என்று இடைக்காடர் அறிவுறுத்தினார். அறுநூறு ஆண்டுகள் வாழ்ந்த இடைக்காடர் திருவண்ணாமலையில் முக்தி அடைந்தார். இடைக்காடர் ஞான சூத்திரம், இடைக்காடர் கணித நூல் இரண்டும் அவர் எழுதிய புகழ்பெற்ற நூல்கள். இடைக்காடரை தியானிப்பதன் மூலம் அறிவு தூண்டிவிடப்படும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் பதினெண் சித்தர்களில் முற்றிலும் வித்தியாசமானவர்தான்.
காலம்: இடைக்காடர் முனிவர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 600 ஆண்டுகள் 18 நாள் ஆகும

Comments
Post a Comment