மாற்றுப்பெயர்; கொல்லங்கொவை, சாகாமூலி, கருடன்கிழங்கு.
வளரியல்பு ; கோவையினத்தைச் சேர்ந்த பெருங் கிழங்குடைய ஏறுகொடி
மருத்துவ பாகம் ; கிழங்கு, பூ, காய்
குணம் ; வியதாபேதகாரி, பலகாரி.

தீர்க்கும் நோய்கள்;
"அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார் – வரையிற்
றிருடரெனச்செல்லும் விடஞ்சேர் பாம்புமஞ்சுங்
கருடன் கிழங்கதனைக் கண்டு."
- கருடன் கிழங்கிற்கு அரையாப்புகட்டி, வெள்ளை, கொறுக்குமாந்தை, அற்புதவிரணம் நீங்கும். விஷத்தையுடைய பாம்பும் இதனைக் கண்டால் நடுங்கும் என்க.
"துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி
குட்டமரிப்பக்கி கோண்குடணோய் – கெட்டகண்ட
மாலைபோங் கொல்லன்கோவைக் கிழங்கால் முத்தோஷ
வேலைப்போம் பாரில் விளம்பு."
- கொல்லன்கோவைக்கிழங்கால் மகாவிஷம், தேகவெளுப்பு, சுரம், வாத சூலை, சிரங்கு, பெருவியாதி, நமைச்சல், வக்கிரநேத்திரம், குடல்வலி, கண்டமாலை, திரிதோஷம் நீங்கும் என்க.
1. கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50மிலி நீரில் கலந்து 3 நாள் காலையில் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய்,நரி, பூனை,குரங்கு முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரும்.
2. புளியங்கொட்டை அளவு கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்ன தேள்,நட்டுவாக்காலி நஞ்சும்,அதனால் ஏற்பட்ட நெரிகட்டுதலும் தீரும்.
3. கிழங்கை தோல் நீக்கி உலர்த்திப் பொடித்து 1 தேகரண்டி சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பாம்பு நஞ்சு,கீல் பிடிப்பு,மேக நோய்கள் தீரும்.
4. 5கிராம் கிழங்குப் பொடியை 100மிலி நீரில் கலந்து காய்ச்சிக் காலைமாலை குடித்துவர சீதப்பேதி தீரும்.
5. 100கிராம் கிழங்குடன் 50கிராம் வெங்காயம்,20கிராம் சீரகம் சேர்த்தரைத்துப் பற்றிட கீல்வாதம் குணமாகும்.
6. கிழங்கு,குப்பைமேனி,அவுரி,ஆவாரை,கீழாநெல்லி இலைகளையும் சேர்த்து இடித்துச் சாறு பிழிந்து உள்ளுக்குக் கொடுத்து உடம்பிலும் துவாலையிட அஷ்டநாக விஷங்கள் போம்.
7. கிழங்கு அரைகிலோ,வாய்விளங்கம்,வாளுலுவை அரிசி,சுக்கு,மிளகு, திப்பிலி, கருஞ்சீரகம் வகைக்கு 40கிராம், இடித்து,4படி நீரிலிட்டு ½ படியாக சுண்டக் காய்ச்சி, வடித்து ,1படி சிற்றாமணக்கெண்ணையில் கலந்து அடுப்பிலேற்றி, 1/2கிலோ வெங்காயம் நறுக்கிப்போட்டு சிறுதீயில் எரித்து வெங்காயம் வெந்து மிதக்கவும்,வடிகட்டி,தினம் 15-25 மிலி- தேக திடத்திற் கேற்ப கொடுத்துவர வெள்லை,வென்குட்டம், அரையாப்பு, கொறுக்கு, குட்டம், மேகரணம்,முதலியன போம்.பத்தியம் ந.எண்ணை,புளி,கடுகு நீக்கவும்.

Comments
Post a Comment