Skip to main content

இந்திய முறை கழிப்பறை


காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை.

 இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம்.

 ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது.

“இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதில் கழிப்பறைகளும் அடக்கம்.

“உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்து கிறார்கள்: இந்திய முறை கழிப்பறை (squat position), மேற்கத்திய முறை (sitting position).

 ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (squat position) உட்காரும் முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது.

 இதற்கு மலாசனம் என்று பெயர்.

நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது.

 இதை எத்தனை முறை செய்கிறோமோ, அந்த அளவுக்கு உடல் உறுதி கூடும்.

இதனால், மூலநோய் தொந்தரவு சீரடையும்; மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

 கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்யும்.

 உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது.

எப்போது வந்தது?

இந்த ஆசன கழிப்பறை முறை

19-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில்தான், நாற்காலியில் உட்காருவது போன்ற கழிப்பறைகள் மேற்கத்திய நாடுகளில் பரவ ஆரம்பித்தன.

 உடல்நலக் குறைபாடு உடையவர்களுக்காக இவை உருவாக்கப்பட்டன.

 ராஜவம்சத்தினரும் மேல்தட்டு மக்களும், இதை வசதியான முறையாகக் கருதினார்கள்.

 இங்கிலாந்து போன்ற நாடுகளில் இது பரவலானது.

 பிரிட்டன் மகாராணி விக்டோரியா தங்கத்தால் ஆன மேற்கத்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இன்றைக்கு நகர்ப்புறங்களில் மேற்கத்திய முறை கழிப்பறைகள் பரவலாகிவிட்டன.

இந்த முறையால் உடல் கழிவு வெளியேற்றம் கடினமாகிறது.

 உடலில் இருந்து கழிவு முழுமையாக வெளியேறுவதும் இல்லை.

இந்திய முறை கழிப்பறையில் அமரும்போது, இயற்கை அழுத்தத்தால் கழிவு முழுமையாக வெளியேற்றப்படுகிறது.

ஈரானைச் சேர்ந்த ரேடியாலஜி மருத்துவர் ராத் சயீத் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

நோய்களின் மூலகாரணி

முழுமையாக வெளியேற்றப்படாத கழிவு பெருங்குடல் பகுதியில் தேங்குவதால், அங்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அப்பெண்டிசிட்டிஸ், இன்ஃபிளமேட்டரி பவல் டிசீஸ் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைகிறது.

 மேற்கத்திய நாடுகளில் இந்த நோய்கள் அதிக அளவில் உள்ளன.

 பாரம்பரியக் கழிப்பறை முறையைப் பயன்படுத்தும் தென் ஆப்பிரிக்காவின் சுற்றுப் பகுதிகளில் இந்த நோய்கள் அரிதாக இருப்பதாகவும் இஸ்ரேல் மருத்துவ இதழின் ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியக் கழிப்பறை சிறப்பு

மேற்கத்திய நாடுகளில் சுத்தம் மேலோங்கி இருக்கும்.

 ஆனால் உடல் சார்ந்த தனிமனிதச் சுத்தம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே, அடிவயிறு தொடர்பான நோய்களுக்குக் காரணம்.

 ஆராய்ச்சியாளர்கள் பலரும், தங்கள் ஆய்வு முடிவாக இந்திய முறை கழிப்பறையே சிறந்தது என்ற கருத்தை முன்வைத்துவரும் நிலையில், மேற்கத்திய முறை கழிப்பறை நம்மிடையே பரவலாகி வருகிறது.

சுகப்பிரசவத்துக்கு

கருவுற்ற பெண்கள் இந்திய முறை கழிப்பறையைப் பயன்படுத்தினால் கருப்பையின் அழுத்தம் குறைந்து, சுகப் பிரசவத்துக்கு வழிவகுக்கும்.

 நோய்த்தொற்றுகளும் குறைவாக இருக்கும்.

பொது இடங்களில்கூட இந்திய முறை கழிப்பறைகளே சிறந்தவை.

 இன்றைக்கு, எல்லாப் பக்கமுமே மேற்கத்திய முறை கழிப்பறை பரவலாகிவருவது வருத்தம் தருகிறது.

இதனால் நோய் பரவி மருத்துவ வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது !!!

அதனால் தான் இந்த வகை கழிப்பறை பயன்பாடுகள்  ஊக்குவிப்பு நடக்கிறது

ஆரோக்கிய அடையாளம்

இந்திய முறை கழிப்பறைகள் அரிதாகிவருகின்றன, அநாகரிகமாகவும் கருதப்படுகின்றன.

உண்மையில் இந்திய முறை கழிப்பறைகள் ஆரோக்கியத்தின் அடையாளம்.

 உண்பது, செரிப்பது, கழிவை முழுமையாக வெளியேற்றுவதில்தான், மனித உடல் ஆரோக்கியம் அடங்கி இருக்கிறது.

அதனால் சொகுசு, நாகரிகம் என்று தவறாக நம்பி நம் குழந்தைகளையும் சோம்பேறிகளாக்க வேண்டாம்.

 இந்திய முறை கழிப்பறைக்கு மாறுவோம்

குதப்பகுதியின் அமைப்பு
சமிபாட்டுப் பாதையிலிருந்து மலத்தைக் குதத்தினூடாக வெளியேற்றல் மலம் கழித்தல் (defecation) ஆகும்.

 பொதுவாக இது அன்றாடம் மனிதர் செய்யும் செயற்பாடுகளில் ஒன்று.

உடல் நலத்தைப் பேணுவதில் அன்றாடம் மலத்தைக் கழித்தல் என்பது அவசியமானதாகும்.

உயிரினங்கள் திட, திரவ, அரைத் திண்மநிலையில் உணவுப்பாதையிலிருந்து குதம் வழியாகக் கழிவுகளை வெளியேற்றும்

 உணவு செரிமானத்தின் கடைசி நிகழ்வே மலம் கழிப்பதாகும்.

 மனிதர்கள் தினமும் சில முறைகளோ அல்லது வாரத்தில் சில முறைகளோ மலம் கழிக்கிறார்கள்.

 பின்னியக்க தசைக் சுருக்கம் (peristalsis) எனப்படும் பெருங்குடல் சுவர்களின் தொடர் தசைக் சுருக்க அசைவுகளின் மூலம் உணவுப்பாதையிலிருந்து மலம் பின் பெருங்குடலுக்குத் (மலக்குடல்) தள்ளப்படுகிறது.

 செரிமானமாகாத உணவும் இவ்வழியாக வெளித்தள்ளப்படலாம்.

இது, செரிமானப் பண்பற்ற உணவு வெளியேற்றம் (egestion) எனப்படுகிறது.

உடலியக்கவியல்:

மலக்குடல் விரிமுனை (rectum ampulla) செரிமானம் நடைபெற்றபின் இருக்கும் தேவையற்றப் பொருள்களின் தற்காலிகமான சேமிப்பிடமாகச் செயற்படுகிறது.

 வெளித்தள்ளப்படும் முன், மலம் நிரம்புவதால் மலக்குடல் சுவர் விரிவடைகிறது.

 இதனால், மலக்குடல் சுவர்களில் உள்ள நரம்புத் தொகுதியின் நீட்சி ஏற்பிகள் (stretch receptors) மூலம் சமிக்ஞைகள் பரிமாறப்பட்டு மலம் கழிக்க வேண்டிய உணர்வினைத் தூண்டுகின்றன.

 உட்புற மலத்துளை சுரிதசை (internal anal sphincter) தளர்வது, வெளிப்புற மலத்துளை சுரிதசை விரிவடைவது ஆகிய அனிச்சையாக நடைபெறும் மலக்குடல் தசைச் சுருக்கங்கள் மூலம், மலம் கழிக்க வேண்டிய உணர்வு ஏற்படுகிறது.

 இவ்வித உணர்வு ஏற்பட்ட உடன் மலம் கழிக்காவிட்டால், மலக்குடலிலுள்ளப் பொருட்கள் மீண்டும் பெருங்குடலுக்குச் சென்று அதிகளவு நீர் உறிஞ்சப்பட்டு மீண்டும் மலத்தை வெளித்தள்ளும்

 சுருக்கங்கள் (அசைவுகள்) ஏற்படும்வரை மலம் சேமிக்கப்படுகிறது.

மலம் கழிப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டால் மலம் கடினப்பட்டு மலச்சிக்கல் உண்டாகலாம்.

 அதேப்போல அதிகப்படியான நீர் உறிஞ்சப்படும் முன்பே மலம் கழிப்பது மிக வேகமாக நிகழ்ந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

#மலாசனா [#MALASANA]

இன்று மலாசனா என்ற ஆசனத்தை பார்ப்போம்

இன்று பலரும் அவதிப்படும் முக்கிய நோய்களுள் மலச்சிக்கலை ஒன்றாகும். இது வந்தாலே பலரும் அவதிப்படுவதுண்டு.

மலச்சிக்கலை எளிதில் போக்க நமது முன்னோர்கள் கையாண்டு வந்த சில எளிய உடற்பயிற்சிகளை செய்தாலே போதும்.


இந்தவகையில் மலாசனம் வைத்து மலச்சிக்கலை எளிதில் போக்க முடியும்.

அதாவது, "மாலா" என்றால் "மாலை" என சமஸ்கிருதத்தில் பொருள்படும். எனவே, மாலை போன்ற நிலையில் உட்கார்ந்து இதை செய்ய வேண்டும்.

தற்போது இந்த மலாசனத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

#பயிற்சி_முறை

முதலில் காலை தோள்பட்டை அளவிற்கு விரித்து வைத்து கொள்ளவும். அடுத்து பாதி உட்காரும் நிலைக்கு மூச்சை வெளியேற்றிக்கொண்டே அமர  வேண்டும்.

அதன் பின்னர் கைகளை குவித்து ..கைககளின் மூட்டுகள் ..கால்களின் மூட்டுகளை விலக்கும் வண்ணம் அமர்ந்து ...பார்வை மேல்நோக்கி இருக்க....கைககள் வணக்கம் வைக்க வேண்டும்....(படத்தில் உள்ளவாறு)சுருக்கமாக சொல்ல போனால் பாதி உட்கார்ந்து மலம் கழிக்கும் நிலையில் இருந்து கொண்டு இந்த ஆசனத்தை செய்ய வேண்டும்.

இந்த ஆசனத்தில் 30 முதல் 60 நொடிகள் வரை இருக்கவும்.இந்நிலையில் ஆழ்ந்த சுவாசங்கள் எடுக்க வேண்டும். 3 முறை இம்மாதிரி செய்யலாம் ...

ஒவ்வொரு முறை செய்த பின்னரும் மூச்சை நன்றாக இழுத்து வெளியே விடவும். இந்த பயிற்சியினால் எண்ணற்ற நன்மைகள் உடலுக்கு கிடைக்கும்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் கண்டிப்பாக ஏற்படாது.

 தொடைகள் மலக்குடலை நன்கு அழுத்துவதால்...மலக்குடல் நன்கு வேலை செய்யும்.

உங்களின் நடு முதுகு மிகவும் பலமாக இருக்கும். மேலும், கழுத்து வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு இது சிறந்த தீர்வாகும்.

மாற்று ஆசனம் பாலாசனம் ...

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம...

இஸ்ரோ போகர் 7000

  "தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும்" போகர் 7000த்தில் விண்ணுலகம் செல்வதற்கு காத்தாடி செய்யும் முறையை போகர் கூறியிருப்பார். காத்தாடியின் அளவு (size), காத்தாடி செலுத்துவதற்கான கயிறு நீளம் (fuel), சந்திரயானின் ராக்கெட் லாஞ்சர் மற்றும் ரோவரின் தன்மையை வெளிவட்டம் நடுவட்டம் உள் வட்டம் என மூன்று பிரிவுகளாக கூறியிருப்பார். இந்தப் பாடலை கவனமாக படித்து பார்த்தால் ஒரு எளிய அறிவியல் சூத்திரத்தை போகர் கூறியிருப்பது புரியவரும். பூமியின் காந்தாற்றலும் (gravitational force) சந்திரனின் இருpபாற்றலும் (airless exosphere) எப்படி காத்தாடி (விண்கலம்) வெற்றிகரமாக சந்திரனில் (moon) இறங்க இருக்கிறது சூட்சுமமாக கூறியிருப்பது விஞ்ஞானத்துக்கு சவால் விடும் தமிழர்களின் மெய் அறிவியலுக்கு சான்றாகும். போகரின் மரபணு தாக்கம்தானோ என்னவோ சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று என தமிழரின் மரபணு சார்ந்த மூளைதான் கைலாசவடிவு சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய சந்திரயான் இயக்குனர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. போகர் 7000 நூலின் இரண்டாம் பாகத்தில் ...

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்ம...

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் கொனார்க் சூரிய கோயில் அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப சூர்ய பகவானே உதித்தெழுவாய் மங்கலக் குடியினில் மங்களமாய்க் குடிகொண்டு மங்காத ஒளிவீசும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில் பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சூர்யனார் கோவிலில் சுந்தரமாய் வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு அதிபதியானவனே சந்திரன் செவ்வாய் பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே  சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ உன்திருமுகம் காட்டி அருள்புரியும் சூர்ய பகவானே உதித்தெழ...

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!! நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் கண்படும் இடங்களில், உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று. மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,...