நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.
1. மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves); பேசுதல், நடத்தல், செயல் புரிதல்.
2. தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves); இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல், குடல்கள் இயக்கம்.
காக்கை வலிப்பு (epilepsy); பித்தம் சரீரமெங்கும் பாய்ந்து சித்தங் கலங்கிப் பிரதிக்ஞையற்று மயங்கி நாக்கை, உதட்டை, நாசியை, விழியை, புருவத்தை சேர்த்திழுத்து வலிப்புக்கண்டு அவயங்களுதறிக் கூலமலக்கிக் கீழே தள்ளும்.வாயில் வெண்ணுரை தள்ளும்.மேற்சுவாசம் வாங்கும்.
குதிரைவலிப்பின் குணம்;கண்ணும் புருவமும் கருத்திருக்கும்,கையும்காலும் ஒருபக்கந் திருத்தி வலிப்புக் காணும்,வாயில் வெண்ணுறை தள்ளும், விழி கண்ணைப் பார்த்து நிற்கும். அவயங்கள் தீப்போல் காந்தும்.உடல் படபடத்து நடுக்கும்.நெஞ்சில் கபம் கட்டும்.

குமரகண்டவலிப்பின் குணம்; கண்ணும் வாயும் கோணும்; காலும் கையும் ஒருபக்கம் விட்டுவிட்டு வலிப்பெடுக்கும்; சுரங் காயும்; தலை வலிக்கும்; எமக் கோட்டாலைப்போல வருத்தப்படுத்தும்; மூர்ச்சை காணும்.
முயல்கண்டவலிப்பின் குணம்;வாயால் மண்ணைக்கவ்வும்;நுரை தள்ளும்;விழிவிட்டுஞ் சேர்ந்து நட்டமாய் நிற்கும்; துள்ளதுள்ள வலிக்கும்; தோள், மார் வலிகூட்டி சுருக்குவிக்கும்; சோக்கம் துயரம் மிகும்.
நரம்புதளர்ச்சி (nervous debility); தவறான உணவுப் பழக்கங்கள், வாழ்க்கைமுறை, இந்திரிய விரயம், நச்சுப்பொருட்களின் நரம்புமண்டல தாக்கல்.
- பேரண்டபற்பம் 100-200மிகி, 5-10மிலி இஞ்சிசாறு, தேன் அல்லது கழுதைப்பாலில் கலந்து தினம் 2 வேளை சாப்பிட வலிப்பு குணமாகும்.
- அண்டத்தைலம் 10 துளி தினம்2வேளை நாவில் தடவ வலிப்பு தீரும்.
- பிரமி நெய் 5-10மிலி ,5-10மிலி பாலில் தினம்2வேளை பருகிவர வலிப்பு குணமாகும்
- கொய்யா தளிர் இலைச் சாறு பருகிவர காய்ச்சல், காக்கா வலிப்பு குணமாகும்.
- கைப்பிடி அருகம்புல் மிளகு25, இடித்து 4ல் 1ன்றாய்க் காய்ச்சி வடித்து, காலைமாலை 250மிலி பருகிவர வலிப்பு குணமாகும்
- இனிப்பு மாம்பழச்சாறு, தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
- அவுரி, வசம்பு, உள்ளி சமனிடித்து நாசியில் நசியமிட வலிப்பு நோய்கள் மாறும்
- வசம்பு, பெருங்காயம், திரிகடுகு, கடுக்காய்தோல், அதிவிடயம், கருப்பு உப்பு சமன் பொடி செய்துகாலை மாலை 1தேக்கரண்டி கொடுத்துவர காக்கை வலிப்பு தீரும்
- அமுக்கிராக் கிழங்கு 500கிராம்,மிளகு 25 கிராம்,சுக்கு 25கிராம்,அதிமதுரம் 25கிராம்,ஏல அரிசி 25கிராம், சாதிக்காய் 25கிராம், தேன் 1கிலோ இடித்து சலித்து நன்கு கலந்து, தேனை சட்டியில் ஊற்றி [ சிறிய தணலில் ] பொடிகளை சிறிது சிறிதாகக் கொட்டி நன்கு கிளறி, காலை, இரவு உணவிற்குப் பின் ஒரு தேகரண்டி உட்கொண்டு பால் அருந்த நரம்புத் தளர்ச்சி நீங்கும்
பத்தியம் ; குளிர்ந்த பானங்கள், மீன், கருவாடு போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கவும்.
Comments
Post a Comment