ஆசனவழிக் கனலேறித் தூவாரப்பட்டு 9விதமான மூலத்தையும், பலவிதமான வியாதியையும் பெறுதல்.
காயத்தில் மூலங் கண்டவிதங் கேளு
பாயொத்ததீபனம் பரிந்தே அடக்கிடினும்
மாயை அடக்க மலத்தை அடக்கிடினும்
ஓயற்ற குண்டலியினுள் புகும் வாயுவே
உள்மூலம், பிறமூலம், இரத்தமூலம், சீழ்மூலம், மூலபாண்டு, முளைமூலம், வாத, பித்த, சிலேத்ம மூலம் என 9வகை.
மூல நோயின் அறிகுறிகள் : மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும்.
உள்மூலக்குணம்;அபானத்துள் தசைபோல் வளர்ந்திருக்கும்;மலத்தை இறுக்கும்; மந்திக்கும்; இரத்தம் மலத்தில் விழும்;இடையில் வயிறு வலிக்கும்;பலங்கெடும்;தேகம் வரளும்.
பிறமூலக்குணம்;அஸ்தியில் அனலேறி அபானவழியில்கத்திபோல் சதை வளர்ந்து உள்ளும் புறமுமாயிருக்கும்; அபானங் கடுக்கும்; தினவெடுக்கும்; உதிரம் விழும். சீழ் மூலத்தின்குணம்: தேகத்தில்அக்னி அதிகரித்தால் அடிவயிறு நொந்து புண்ணாகி சீழ் தோன்றி மலத்துடன் சிறுத்திறங்கும், அபானங்கடுக்கும். மயக்கங்காணும். வாயு அதிகரிக்கும். மலங்கழியும் போது அபானம் எரிந்து சீதமும் இரத்தமும் விழும் நாபியைச் சுற்றிவலிக்கும். இரத்தமூலக்குணம்:தொப்புளைச்சுற்றி வயிறு வலித்து நொந்து இரத்தம் விழும். மூலம் வெளியில் தள்ளும். மலம் சிக்கும். அடிவயிறு இரையும.கைப்பையும் புளிப்பையும் மிக விரும்பும். அன்னஞ்செல்லாது. உடல் வெளுத்து வற்றும்.அபானங் கடுத்து எரியும், வெப்புதோன்றும்.
இரத்தமூலபாண்டுகுணம்; பித்தம் உடம்பெங்கும் பாய்தலால் தேகம் வெளுத்து ஊதும். மந்தம்,இரத்தம் உருண்டு திரண்டு வயிற்றில் தங்கி பிதிர்போல் மிக விழும்; தொப்புளைச் சுற்றி வலி காணும்;மேல்மூச்சு இளைப்பு காணும்;அடிவயிறு இரையும்; மலஞ்சிக்கும்;அன்னஞ் செல்லாது; கைப்பையும் புளிப்பையும மிக விரும்பும்.
மூலவாயுவின்குணம்; மந்தியும் மந்திக்கும்; உடல் வெளுக்கும்; வயிறு சதாகாலமும் இரைந்து கொண்டிருக்கும். மூலத்தில்வாயுகண்டு, மேகநீர் உண்டாகி புரையோடிகண்விட்டு சீழ்ப்பாச்சல் கண்டு முளைவிழுதல்
-பவுத்திரம்-
குணம்:போகத்தினால் கனல் மிகுந்து மேகம் உண்டாகி பீஜத்திற்கும் அபானத்திற்கும் இடையில் கொடியின் அடிநரம்பிலாவது, அதன்வலம் இடப்புறத்திலாவது அண்டத்திலாவது அபானவாயு விலாவது நமைச்சல் எடுத்து வீங்கி நொந்து கொப்புளித்து சீழும்சலமும் வடியும். புரையோடி நரம்பழுகி அற்றுக் கண்விழுந்து அதன் வழியே நீரும் மலமும் இறங்கும். அல்லது அபான வாயில் கழற்காய் போலும், குமிழ் முளை போலும், கல்போல் புடைத்துப் பழுத்துச் சீழ்வடியும். புரையோடும், வேதனை காணும், மலசலம் சிறுக்கும்,அபானம் கடுத்தெரியும்,கைகால் காந்தும், கடுத்துளையும், நித்திரைச் சற்றும் வராது, உடல் மெலியும், அன்னஞ் செல்லாது, ஆயாசங்களைப்புண்டாகும். குடல்வாதம்/ஹெர்னியா (herniyaa) ; குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை,மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும். பீஜத்திற்குமேல் வலியும்,வீக்கமும் காணும்.
- திரிபலாச்சூரணமாத்திரை3, தினம்3வேளை, வெந்நீருடன் கொள்ள மூலம் கட்டுப்படும்
- பறங்கிப்பட்டை சூரணமாத்திரை2,இம்பூரல்மாத்திரை2 தினம்3வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்
- மூலக்குடோரித்தைலம் 1015மிலி, 50மிலி வெதுவெதுப்பான பாலில் இரவு கொள்ள மூலம் கட்டுப்படும்.
- திருநீற்றுப்பச்சை விதையை ஊறவைத்து,நீரைப்பருகிவர இரத்தமூலம் குணமாகும்
- அருகம்புல் கைப்பிடியரைத்து, 200மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர மூலம், இரத்தமூலம் கட்டுப்படும்
- 1கிராம் குங்கிலியத்தை தூள்செய்து,200மிலி பாலில் கலந்து பருக இருமல், மார்புச்சளி, இரத்தமூலம் கட்டுப்படும்.
- கொட்டைக்கரந்தை வேர்பட்டையை அரைத்து எலுமிச்சைஅளவு வெண்ணையில் கலந்து சாப்பிட இரத்தமூலம் கட்டுப்படும்.
- சந்தனத்தூள் 2தேகரண்டி 500மிலி நீரிலிட்டு காய்ச்சி குடிநீர் செய்து பருகி வர இரத்தமூலம் குணமாகும்.
- வெண்தாமரை சர்பத் செய்து சாப்பிட இரத்தமூலம், சீதபேதி, ஈரல் நோய்கள் குணமாகும்.இருமல் கட்டுப்படும்.
- தான்றித்தோடு கருகாமல், லேசாக வறுத்து,பொடித்து 1கிராம்,சிறிது சர்க்கரை சேர்த்து,200மிலி மோரில் தினமிருவேளை பருகிவர இரத்தமூலம் குணமாகும்
- பிரண்டைதுவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர இரத்தமூலம் குணமாகும். வயிற்றுப்பூச்சி கட்டுப்படுத்தும்.
- மாதுளை பூச்சாறு 15மிலி, சிறிது கற்கண்டு சேர்த்து காலையில் பருகிவர இரத்தமூலம் கட்டுப்படும்
- சோற்றுக்கற்றாழை சதையை நன்குகழுவி, பிடி முருங்கைப்பூ, சேர்த்தரைத்து, சிறிது வெண்ணை சேர்த்து,எலுமிச்சைஅளவு,காலையில் சாப்பிட்டுவர மூலநோய் குணமாகும்.
- பச்சையான இளம் சுண்டைக்காயை,குழம்பு/சாம்பார் செய்து சாப்பிட மூலம் கட்டுப்படும்.
- துத்தி இலைகளை நெய்யில் வறுத்து உண்டுவர மூலம் குணமாகும்.
- துத்திஇலையை வி.எண்ணையில் வதக்கி கட்ட மூலம்,பவுத்திரம், ஆசனவாய் கடுப்பு குணமாகும்
- துத்திஇலையை பருப்பு சேர்த்து சமையல்செய்து சாப்பிட்டுவர மூலம் குணம் ஆகும்
- 10கிராம் நாயுருவி இலையையரைத்து, 10மிலி ந.எண்ணையில் கலந்து, தினம்2வேளை சாப்பிட இரத்தமூலம் குணமாகும்
- தேற்றான்கொட்டைசூரணம் 1கிராம்,பாலில் கலந்து,தினம்2வேளை பருகி வர நீர்க்கட்டு, நீரெரிச்சல்,வெள்ளை,மூலம் தீரும்.
- ஒற்றை அரளிப்பூவை கசக்கிக் கட்ட மூலம் குணமாகும்.
- சின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து பாலில் காய்ச்சி சீனிசர்க்கரை கலந்து சாப்பிட்டுவர இரத்தமூலம் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.நீரிழிவு குணமாகும்.
- புளியங்கொட்டையை 3நாள் ஊறவைத்து,4ம்நாள் மேல்தோல் நீக்கி, பொடித்து, 2மடங்கு சர்க்கரை சேர்த்து காலை சாப்பிட்டுவர மூலக்கடுப்பு தீரும்
- சேனைக்கிழங்கு,வெங்காயம் சேர்த்து வேகவைத்து,பசுநெய் கலந்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்
- இம்பூரல்மாத்திரை2, தினம்3வேளை சாப்பிட்டுவர மூலம் கட்டுப்படும்
- சின்னவெங்காயத்தை சன்னமாயரிந்து, வதக்கி,சீரகம்,கற்கண்டு தூள் கலந்து, கடுகு தாளித்து, நெய்யுடன்,சோற்றில் பிசைந்து சாப்பிட்டுவர மூலம் குணமாகும்
- துத்திஇலை, பச்சரிசிமாவு தேவைக்கேற்ப எடுத்து களிபோல் கிளறிக் கட்ட மூலமுளை, மூலக்கடுப்பு தீரும்
- குங்கிலிய வெண்ணையை மேலே பூச மூல எரிச்சல் தீரும்,
- கால்படி பசும்பாலில் 3 எலுமிச்சம்பழச்சாறுவிட்டு சிறுகுச்சியால் கிளற, தெளியும் நீரைப்பருக ஆசனகடுப்பு நீங்கும்
- வேப்பம்பட்டைசூரணம் 10கிராம், பாலில் சாப்பிட்டுவர மூலம்,மலக்கட்டு, குன்மவலி நீங்கும்
- அத்திப்பிஞ்சை வற்றலாகவோ,காயாகவோ சமைத்துச்சாப்பிட்டுவர மூலநோய்கள் குணமாகும்
- அந்தரத் தாமரைஇலையை நீரிலிட்டுக்கொதிக்கவைத்து,10நிமிடம் ஆசன வாயில் ஆவி பிடிக்க மூலமுளை அகலும்
- அந்தரத்தாமரை இலைச்சாறு 500மிலி,ந.எணணை1லி,சிறுதீயில் காய்ச்சி, கிச்சிலிகிழங்கு, சந்தனத்தூள்,வெட்டிவேர்,சாம்பிராணி, கஸ்தூரி மஞ்சள், வகைக்கு10கிராம்,பொடித்துப் போட்டு, வாரமொருமுறை தலைமுழுகி வர உட்சூடு,கண்ணெரிச்சல்,மூலநோய் தீரும்
- அந்தரதாமரை இலையையரைத்துக் கட்ட கரப்பான்,தொழுநோய்புண், வெளிமூலம், ஆசனக்குத்தல் தீரும்
- ஆவாரங்கொழுந்தை,வி.எணணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்க மூலமுளை கருகி,கடுப்பு ஊறல் தணியும்
- வேப்பம்பருப்பை எலுமிச்சையளவரைத்துப்பில்லை தட்டி, வெதுப்பி 3நாள் கட்ட புழுக்கள் செத்துவிழும். முளை கரையும்
- பாகல் இலையை வி.எண்ணையில் வதக்கி 40நாள் கட்டிவர வெளிமூலம் தீரும்
- சிறுகருணைகிழங்கை தோல்நீக்கியரிந்து, 3முறை தயிரிலூறவைத்துலர்த்தியது 200கிராம், சுக்கு 40கிராம், இந்துப்பு 40கிராம், தனித்தனியே பொடித்து எலுமிச்சை சாற்றிலரைத்து, பனங்கற்கண்டுப் பொடி சேர்த்துப் பிசைந்து, நெல்லிக்காயளவு, காலைமாலை, 6மாதம் சாப்பிட்டுவர நவமூலமும் தீரும்
- பொடுதலை இலையை, உ.பருப்புடன் நெய்யில் வதக்கித் துவையல் செய்து பகல் உணவுடன் கொள்ள இரத்தமூலம், உள்மூலம், பவுத்திரம் தீரும்.
- குப்பைமேனி செடியை வேகவைத்த தண்ணீரை குடித்துவர மூலம், பவுத்திரம் குணமாகும்.
- குப்பைமேனிசூரணம், திப்பிலி சூரணம் வகைக்கு 1தேகரண்டி, நெய்யில் குழைத்துச் சாப்பிட நவமூலம், பவுத்திரம் தீரும்.
- தொட்டால்சுருங்கிசமூலத்தை பச்சைபாலில் அரைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட இரத்தமூலம் தீரும்.
- தொட்டால்சுருங்கிசூரனம் 1தேகரண்டி வெந்நீரில்சாப்பிட்டுவர மூலம் குணமாகும்.
- வாழைபூச்சாறு காலைமாலை 100மிலி பருகிவரமூலம்,காசநோய் குனமாகும்.
- குப்பைமேனியை அரைத்து பசும்பாலில் சாப்பிட்டுவர மூலம் குணமாகும்.
- பிரண்டைக்கொழுந்தை நெய்யில் வதக்கி அரைத்து,காலைமாலை சாப்பிட்டுவர இரத்தமூலம் குணமாகும்.
- அருகம்புல் தளிரை அரைத்து காலை வெறும்வயிற்றில் பசும்பாலில் சாப்பிட்டு, ந.எண்ணை, புளி,மிளகாய்,புகையிலை நீக்க 5நாளில் கடுமையான மூலமும் குணமாகும்.
- முள்ளிவேர்,பிரண்டைவேர்,கற்றாழைவேர்,கடுக்காய்,சுக்கு,மிளகு,பூண்டு சமனரைத்து புளித்த மோரில் கொடுக்க உள்மூலம் குணமாகும்.
- காரெள்ளு,கடுகு,திப்பிலி,சுக்கு வகைக்கு 40கிராம்,வறுத்துப் பொடித்து திரிகடி காலைமாலை வெந்நீரில் 5நாள் கொள்ள சீழ்மூலந் தீரும்.
- திரிகடுகு,கோஷ்டம்பொடித்து,சமன் சர்க்கரை,முந்திர்ப்பழம் சேர்த்து ஆவினெய் ஊற்றி லேகியம் செய்து தினம் 2வேளை பாக்களவு 5நாள் சாப்பிட இரத்தமூல பாண்டு குணமாகும்.
- முள்ளங்கிக்கிழங்கும்,பிண்ணாக்குக்கீரையும் வேகவைத்துண்ண அபானவேர் அறுந்து விழும்.
- ஆவாரங்கொழுந்து,பூ,பட்டை,அருகம்வேர் சமனாய்பொடித்து திரிகடி ஆவின் நெய்யில் மண்டலங் கொள்ள உள் அபானவேர் அற்றுவிழும்.
- புளியங்கொட்டையின் மேல்தோலை எலுமிச்சையளவு அரைத்து பசும்பாலில் கொள்ள மூலமுளை நீங்கும்.
- பிரண்டைசூரணத்துடன் சமன் சர்க்கரை கலந்து,திரிகடி,ஆவின்நெய்யில் மண்டலம் கொள்ள நவமூலம் தீரும்.
- மாவிலங்கு இலையை அரைத்து பாக்களவு,எருமைதயிரில் கொள்ள நவமூலமும் தீரும்.
- வெள்ளுள்ளி80கிராம் அரைத்து,6உருண்டை செய்து,வேளைக்கு1 உருண்டை புளியந்தனலில் போட்டு புகைபிடிக்க முளை கரையும்.
- பால்சாம்பிராணி,ஏலம் சமனாய் பொடித்து அபானத்தில் புகை பிடிக்க முளை நீங்கும்.
- ஓமம்,சுக்கு,கொடிவேலிவேர் வகைக்கு40கிராம்,கடுக்காய் 120கிராம் பொடித்து திரிகடி மோரில் கொள்ள மூலபாண்டு,மந்தாக்கினி தீரும்.
- எருமைத்தயிரை துணியில் முடிந்து தொங்கவிட்டு நீர்வடிந்தபின் எடுத்து, வெள்ளைப்பூண்டு பாக்களவரைத்து அதில் கலந்து கொள்ள மூலவாயு நீங்கும்.
- குப்பைமேனி,திப்பிலி சமன் பொடித்து திரிகடி,ஆவினெய்யில் மண்டலம் கொள்ள பவுத்திரம் நீங்கும்.
- திப்பிலி10கிராம் அரைத்து,100கிராம் கோதுமைமாவில் கலந்து, திருகு கள்ளியை நறுக்கி புதுசட்டியில்2படி தண்ணீரில் போட்டு வேடுகட்டி, அதில் மாவை பிட்டவியல் செய்து நல்லெண்ணையும் வெல்லமும் கலந்து 7நாள் சாப்பிட உள்மூலம் குணமாகும்.
- ஈருள்ளி 200கிராம் அரிந்து பன்றி நெய்யில் பொரித்து 5நாள் கொடுக்க சீழ்மூலம் குணமாகும்
- ஊமத்தைவிதையை வறுத்துசமன் ஏலரிசிகூட்டி அரைத்து அடிவயிற்றில் பூச மூலத்தினால் ஏற்பட்ட நீரடைப்பு நீங்கும்
- வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வர இரத்த மூலம் குணமாகும்.
- துத்தி இலை, ரோஜாப்பூ, நிலாவரை வகைக்கு 10 கிராம் எடுத்து, 200 மி.லி. தண்ணீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட்டு வர, உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், ஆசன வெடிப்பு, முளை மூலம் போன்றவை குணமாகும்.
- இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்
- மாதுளம்பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன் ரத்தம் வருவது நிற்கும்.
- அருகம்புல் ஒரு கைப்பிடி அரைத்து 200 மிலி காய்ச்சாத ஆட்டுப்பாலில் கலந்து காலை மட்டும் குடித்து வர (இரண்டு மூன்று வாரங்கள்)ரத்த மூலம் கட்டுப்படும்.
- பிரண்டைக் கொடியின் கணுப்பகுதியை நீக்கிவிட்டு நெய் விட்டு வதக்கி புளி, பருப்பு சேர்த்து துவையல் செய்து வாரம் இரு முறை சாப்பிட்டு வர மூலம் கரைந்து விடும்
- துத்தி இலை,மஞ்சள் தூள், சிறிய வெங்காயம் அரிந்து விளக்கெண்ணை விட்டு வதக்கி மிளகுத்தூள், உப்பு சிறிது சேர்த்து பத்து நாள் தொடர்ந்து சாப்பிட மூல நோய் குணமாகும்.
- துத்தி இலை ஒரு கை பிடி அளவு எடுத்து சிறிது மஞ்சள்தூள் விளக்கெண்ணை விட்டு வதக்கி இளம் சூட்டுடன் ஆசன வாயில் வைத்து இரவில் கட்டிவர வெளி மூலம் சுருங்கி விடும்.(தினமும் கட்டவும்)
- தொட்டாற்சுருங்கி வேரையும், இலையையும் சம அளவில் பொடி செய்து 10 கிராம் பசும்பாலில் கலந்து குடிக்க சிறுநீர் பற்றிய நோய்கள், ஆசனக்கடுப்பு, மூலச்சூடு தீரும்
- இளம்பிரண்டையை நறுக்கி, நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து, காலை மாலை இருவேளையும் நெல்லிக்காய் அளவிற்கு உண்டு வர வேண்டும்.
- ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும்.
- கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
- கருணைக் கிழங்கை தொடர்ந்து வாரம் இரு முறை உணவுடன் சேர்த்து சாப்பிட மூலம் தீரும்.
- சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட ரத்த மூலம் தீரும், எடையும் குறையும்.
- மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர , இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும்.
- முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.
- பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வர, மூல நோய் தணியும்.
- வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக் குடிக்க மூலநோய் குணமாகும்.
- முருங்கை இலையும், சிற்றாமணக்கு இலையும் சம அளவில் பொடியாக அரிந்து விளக்கெண்ணெய் விட்டு லேசாக வதக்கி மூலத்தின் மேல் வைத்துக் கட்ட வெளி மூலம், மூளை மூலம், சதை மூலம் போன்ற அனைத்து மூலங்களும் சுருங்கி குணமாகும்.
- அக்ரூட் விதையை ஆசனவாயில் சிறிது செருகி வைத்துக் கொண்டால் மூல வேதனை, வலி குறையும்.
- அகத்திக் கீரை சாற்றில் ஐந்து கடுக்காய்களை உடைத்துப் போட்டு கஷாயம் வைத்து ஆசனவாயில் தடவ எரிச்சல் குணமாகும்.
- ஆடையொட்டி இலை, வில்வ இலை சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்து வர குடல் புண் மற்றும் மூலப்புண் குணமாகும்.
- மருதம்பட்டை 10கிராம் பசும்பாலில் அரைத்து கரைத்துக் காலையில் சாப்பிட்டுவர மூலமுளை கருகும்
- நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் (திரிபலா) சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.
Comments
Post a Comment