வளரியல்பு ; நீரில் மிதக்கும் நீர்ச்செடி
இலை ; அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய காம்புகளையும் உடையது
வகைகள் ; நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும் வெள்ளைநிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும் நீல மலர்களையுடையது கருநெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும்.
மருத்துவபாகம் ; இலை, பூ, விதை, கிழங்கு
செய்கை ; சீதளகாரி, ரக்தஸ்தம்பனகாரி, தாதுக்ஷீணரோதி
மருத்துவ குணம் ; கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும் குருதிக்கசிவைத் தடுக்கும். இரத்தபிரமேகம்,ஆண் குறித்துவார விரணம், வெகுமூத்திரம், தாகம், உட்சூடு நீக்கும். கிழங்கு அக்கிப்புண், பித்த எரிச்சல், திரிதோஷம், பிரமேகம், இரத்தக்கிராணி, பித்த நோய் போக்கும், கண் குளிர்ச்சி,தாது விருத்தி உண்டாக்கும்.
கண்ணுங்குளிரு மக்கி காணாது காந்துபித்த
மெண்னுந்தோ ஷம்மேக மேகுங் காண் – பெண்ணே
வயிற்றுக் கடுப்பிரத்த மாறுநெய்தலுக்குப்
பயித்தியம்போம் விந்தூறும்பார்.
மேகமறும் புண்ணாறும் விட்டேகு நீரிழிவு
தாகந்தணியும் தழலகலும் –வாகான
மெல்லியலே யாயுன்மறை வேதியரே லாமுறைக்கு
மல்லி மலரா லறி
செம்பைக்க ளிம்பகற்றிச் சிந்தூரமாக்கிவிடும்
வெம்புபித்த மேகம் விலக்குங்கா – நம்புவியி
லல்லிற் கறுத்தகுழ லாரணங்கே நற்சிவப்பா
மல்லிக் கிழங்கெண் பது.
சிவந்த அல்லிக் கிழங்கு செம்பின் களிம்பை நீக்குவதுந்தவிர அதைச் செந்தூரமாக்கும்.பித்தப் பிரமேகத்தை விலக்கும் என்க.
செவ்வல்லிப்பூவுக்குச் சேர்ந்திறங்கு நீர்ப்பிணியோ
டொவ்வுமே கப்பிணியு மோய்வதன்றி – யிவ்வுலகிற்
கண்ணினோய் தீருங் கனத்தபித்த ரத்தமொடு
புண்ணினோய் பன்னோயும் போம்.
செய்கை ; சீதளகாரி, வியதாபேதகாரி
செவ்வல்லிப்பூவிற்கு மூத்திரரோத்சங்கவாதம், மேகமூத்திரம், வெய்யிலாதியாற் பிறந்த நேத்திர ரோகங்கள், ரத்தபித்தம், விரணம், தாதுநஷ்டம் முதலிய சிலநோய்கள் நீங்கும்.
மிக்கசெவ் வல்லி விதையே யுலகுக்குத்
தக்கவாண் டன்மை தருகுமால் – பக்கபலம்
பேசவிதி லீரற் பீலிகங் களுக்குறுதி
பாசமுடன் றான்கொடுக்கும் பார்
செய்கை ; காமவிர்தினி
மிக்கசெவ் வல்லி விதையே யுலகுக்குத்
தக்கவாண் டன்மை தருகுமால் – பக்கபலம்
பேசவிதி லீரற் பீலிகங் களுக்குறுதி
பாசமுடன் றான்கொடுக்கும் பார்
செய்கை ; காமவிர்தினி
செவ்வல்லியின் வித்து சுக்கிலத்தைப் பலப்படுத்தும்.ஈரலுக்கும், பீலீக
கண்டங்களுக்கும் வலுவை உண்டாக்கும் என்க.
-பதார்த குண விளக்கம்- தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கின்றன.
கண்டங்களுக்கும் வலுவை உண்டாக்கும் என்க.
-பதார்த குண விளக்கம்- தமிழகமெங்கும் குளம் குட்டைகளில் வளர்கின்றன.
- இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர எளிதில் ஆறும்.
- 200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வாலையில் வடித்த நீரை 30 மி.லி. யாகக் காலை மாலை குடித்து வர சிறுநீரில் இரத்தம் சீழ்வருதல் சிறுநீர்ப்பாதைப்புண், சிறுநீர் மிகுதியாகக் கழிதல், தாகம், உட்காய்ச்சல் ஆகியவை தீரும்.
- அல்லிக் கிழங்கை உலர்த்திப் பொடித்து, 5 கிராம் பாலில் கலந்து காலை மாலையாகச் சாப்பிட்டு வர குடல்புண், வயிற்றுப்போக்கு, மூலம் ஆகியவை குணமாகும். மாதர் கருவுற்றிருக்கும் போது மாதவிலக்கு கண்டால் இம்மாவைப் பயன்படுத்தக் குணமாகும்.
- கருநெய்தல் பூ 50 கிராம் 250 மி.லி. நீரிலிட்டு 125 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டியதில் 30 கிராம் சர்க்கரை சேர்த்துத் தேன் பதமாகக் காய்ச்சி காலை மாலை 15 மி.லி யாகச் சாப்பிட்டு வர மூளைக்கொதிப்பு தணியும். கண் குளிர்ச்சியடையும். இதயப்படபடப்பைத் தணிக்கும்.
- கருநெய்தல் மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.
- கிழங்கை வேகவைத்து மேல்தோல் நீக்கி பால்,சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சியடையும்,பித்த எரிச்சல்,பிரமேகம்,ரத்தபேதி தீரும்.
- விதையை பாலில் அரைத்து 2-5கிராம் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட தாது விருத்தியாகும்.இதில் செவ்வல்லி பெண்களுக்கும்,வெள்ளை ஆண்களுக்கும் விஷேஷம் என்பர்.
- சமனெடை கந்தகத்தை பழச்சாறால் ஆட்டி தகட்டில் பூசி அகலில் மூடி சீலைசெய்து 7-8 வறட்டியில் புடமிட்டு, பின் செவ்வல்லிக் கிழங்குச்சாறால் அரைத்து வில்லைதட்டி,காயவைத்து ஓட்டிலடக்கி சீலைசெய்து 10-12 வறட்டியால் புடமிட தாம்பிரம் செந்தூரமாகும்.
- நன்னாரி, அதிமதுரம், நெய்தல் கிழங்கு,கோஷ்டம், வசம்பு சேர்த்து புளித்த கஞ்சி விட்டரைத்து சமன் ந.எண்ணை கூட்டித் தேய்த்துவர ஒற்றை தலைவலி குணமாகும்.
Comments
Post a Comment