சிசுக்களை திடுக்கிட வைத்தல், உதைத்தல், ஜீவ ஜந்துக்களை காலால் மிதித்தும் கையால் முரித்தல், வறுமையுற்ற முதியோர்களுக்குக் காலினால் ஏவலிடுதல், இவற்றால் வாத சம்பந்த வியாதிகள் அணுகும்.
உயிர்ப் பிரானிகளைகளைக் கட்டியும் தூக்கி ஊஞ்சலாடவிட்டும், அறுத்தல், பசுவை அடித்தல், ஜீவராசிகளின் வயிற்றைக்கீரி குடல் வெளிவரக் காணல் இவற்றால் வாத நோய் 84ல் ஆநந்த வாய்வு என்னும் ரோகம் சம்பவிக்கும்.
குடல்வாதம்/ ஹெர்னியா ( herniyaa); குடல்வாயு அதிகரித்தால் குடல்பை பளுவாகி, குடலுக்குக் கீழுள்ள ஜவ்வில் இலேசான துவாரம் காணும். அதிநடை, மலபந்தம் ஏற்படில் குடல் கீழே இறங்கும். பீஜத்திற்குமேல் வலியும், வீக்கமும் காணும்.
அண்டவாயுக்குணம்; வாயு குடலில் தங்கி நரம்பு வழியாய் விரை ஒன்றிலிறங்கி பொருமி வலிக்கும்,அது மேல்நோக்கி உள் வாங்கும்,அதன் நரம்பு புடைத்துக் காணும்.
மந்தாக்கினிவாயு குணம்; பசி மிக உண்டாகி மந்திக்கும்,சிந்தையில் நினைத்த தெல்லாம் தின்ன விரும்பும், கொள்ள ஒட்டாது(சாப்பிட தங்காது), வயிற்றில் தங்காமல் வாந்தியாகும்; மலங் கருக்கும், கிறுகிறுக்கும், வயிறு வலிக்கும், மலத்தில் சிறு இரத்தமும், மிகுந்த சலமும் விழும், பலங்குறையும், நயனம், முகம் வெளுக்கும்.
வாயுப்பொருமலின்குணம்; வயுப் பொருமி அக்கினி மந்தித்து உண்ட அசனத்தை வாந்திக்கும், புளித்தேப்பமிடும், காற்றுப் பிரியும்.
குண்டலவாயுக்குணம்; வாயு மிகுத்துக் கூப்பிட்டோடித் திரிந்து வயிற்றில்வந்து கல் போல் திரளும்,மறுபடியும் சிதறி உடம்பெங்கும் பரந்து பின்வந்து அடங்கும், தீபனத்தை ஒடுக்கும்.
குடகரிவாயுக்குணம்: வாயு அதிகரித்து குடல் முதுகு நெஞ்சு விலா முதலான இடங்களில் ஓடிபுடைத்து பரண்டு அழன்று வலிக்கும்.உடல் அயரும்.மலங்கருகும்.
அனாகதவாயுக்குணம்:மென்மேல் உணபதனாலும்,நொந்தஅன்னம் ஊசற்கறி புசித்தலாலும் மலங்கட்டினால் வாயு அதிகரித்து வயிறுபொருமி பிராந்தியாகும்.
அக்கினி மந்தித்து சீரணமாகாமல் உண்டவண்ணமாய் பிரவர்த்திக்கும்புளித்தேப்பம் வாந்தி தாகங் காணும் வாயுலரும் காற்று பரிந்து கொண்டே இருக்கும்.
அத்தறாவாயுக்குணம்:வாயு அடிக்கடி உடலில் பரந்து ஓடிச்சிலநேரம் அடங்கியிருக்கும். நாள்தோறும் அதிகரித்து இப்படியே கேட்டையறுக்கச் செய்யும்.
துடிவாயுக்குணம்:குடலில் வாயுபுரண்டு வலித்துக் குமுறி இரையும்.விலா தீபோல் கலக்கும்.மந்திக்கும்.

- சீரகத்தை பொன்வறுவலாய் வறுத்து,பொடித்து 1தேகரண்டி சாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட பசியின்மை,வயிற்றுபொருமல், சுவையின்மை தீரும்.
- திரிகடுகுசூரணம் அரைதேக்கரண்டி,தேனில் கலந்து தினம்3 வேளை கொள்ள வயிற்றுவலி, வயிற்றுப்பொருமல் தீரும்.
- புதினா துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவர வயிற்று பொருமல், வயிற்றுவலி, செரியாமை தீரும்.
- 1கிராம் பொரித்த பெருங்காயத்தை சிறிது பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வயிற்று பொருமல், வயிற்றுவலி குணமாகும்.
- உத்தாமணிஇலை குடிநீருடன்,வசம்பு சுட்ட சாம்பல் கலந்து 30மிலி தினம்2 வேளை குழந்தைகட்கு கொடுக்க வயிற்றுபொருமல், மாந்தம், செரியாமை தீரும்.
- கொத்தமல்லியைக் குடிநீர்செய்து சிறிது பெருங்காயம் சேர்த்துப் பருக வயிற்றுபொருமல், வயிற்றுவலி தீரும்.
- வெங்காயச்சாறு 5-10Oமிலி தினம் பருகிவர மயக்கம், வயிற்றுபொருமல், வயிற்றுவலி தீரும்.
- ஒரு தேங்காய்பூ மத்தியில் 40கிராம் பூண்டை தோலுரித்து வைத்து பிட்டவித்து பூவை பால் பிழிந்து பூண்டையும்,40கிராம் முருங்கைபட்டையும் மையாயரைத்து சாறுபிழிந்து 3நாள் சாப்பிட்டு காற்றுப்புகாத அறையில் படுக்க அண்டவாயு குணமாகும்.
- திருகுகள்ளியை வாட்டி சாறு பிழிந்து சமன் ந.எண்ணை கலந்து தேக திடத்திற் கேற்ப 3நாள் கொடுத்து 6நாள் பத்தியமிருக்க அண்டவாயு தீரும்.
- மணித்தக்காளி இலையும், தைவேளை இலையும் வதக்கி ஒத்தனமிட்டுக் கட்ட அண்டவாயு தீரும்.
- கருஞ்சீரகம்,சீரகம்,இந்துப்பு,திரிகடுகு,கருவேப்பீர்க்கு வறுத்து பொடித்து அரை தேக்கரண்டி சாதத்தில் முதலில் போட்டு நெய்விட்டு பிசைந்து சாப்பிட மந்தாக்கினி வாயு நீங்கும்.
- ஓமம், சுக்கு, கொடிவேலிவேர் சமன் பொடித்து, சமஅளவு கடுக்காய் பொடி கலந்து திரிகடி மோரில் கொள்ள அக்கினிமந்தம் பொருமல் தீரும்.
- மிளகை வறுத்துப் பொடித்து திரிகடி தேனில் கொள்ள அஜீரண வாயு நீங்கும்.
- சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், காயம் சமன் பொடித்து திரிகடி சாதத்தில் நெய்விட்டு பிசைந்து சப்பிட அஜீரணவாயு தீரும்.
- சுக்கு, திப்பிலி, மிளகு, ஓமம், இந்துப்பு, சீரகம், காயம், கருஞ்சீரகம் சமன் பொடித்து திரிகடி சாதத்தில் நெய் அல்லது தேனில் சாப்பிட சகல வாயுவும் தீரும்.
- மிளகு, வெந்தயம், தைவேளைவேர் வறுத்து பொடித்து தேனில் கொள்ள சகல வாயுவும் நீங்கும்.
- வேப்பிலையை புதுசட்டியில் போட்டெரித்து நீராக்கி திரிகடி தேனில் 8நாள் கொள்ள சகல குன்மம்,வாயு,வலி தீரும். புளிதள்ளவும்.
- மிளகாய், உப்பு, எள் சமன் வறுத்து பொடித்து திரிகடி பசுநெய்யில் கொள்ள சகல குன்மம் வாயுவலி தீரும்.
- சுக்கு, வெங்காரம், ஓமம், மிளகு வகைக்கு 2கிராம் வறுத்து பெருந்தும்பை கொழுந்து 1பிடி சேர்த்து எருமைமோரிலரைத்துச் சாப்பிட குன்மவலி நீங்கும்.
- சித்திரமூலம், திப்பிலி, ஓமம், மிளகு, சீரகம், பொன்முசுட்டைவேர், பெருங்காயம், சடாமஞ்சில், திப்பிலிவேர், இந்துப்பு சமன் பொடித்து திரிகடி கொள்ள குன்மம், அக்னிமந்தம் தீரும்.
- இஞ்சித்தேனூறல் 2துண்டுகள் உணவிற்குமுன் சாப்பிட்டுவர பசியின்மை, வயிற்றுப் பொருமல் தீரும்.
- சாதிக்காய், சுக்கு வகைக்கு 20கிராம், சீரகம்50கிராம் பொடித்து 5கிராம் தூளுடன் 25கிராம் சர்க்கரை சேர்த்து உணவுக்குமுன் சாப்பிட குடல்வாயு குணமாகும்.
Comments
Post a Comment