கடன் வாங்கிக் கொடாமையாலும், பெரியோரை மனம் நோகப்பேசி ஏசுவதாலும், தாகபானம் உதவாமையினாலும், பித்தட்சயம், பித்தகாசம், மந்ததாரகாசம், இரத்தகாசம், சுவாசகாசம் உண்டாகும்.மேலும் எலி கடியாலும், மூலத்தில் அனல் அதிகரித்து மூளையில் நீர் கசிந்து நெஞ்சில்சுவரி, கபத்தை உறையச் செய்யும். பெரியோரை நிந்தை செய்தல், தேவ ஸ்தலங்களை அழித்தல், தூஷணை செய்தல், பெண்கள் கர்பநோயில் விந்துவிடல், சிசுவைஅழித்தல், கன்றுக்குப் பால் விடாமல் கரத்தல், இளம்பயிரை அழித்தல், பிஞ்சுகளை பரித்தல் இவைகளால் பித்தம், மயக்க வியாதி, பித்தபயித்தியம், பித்தவாய்வு சேஷ்டைகள் உண்டாகும் என்றறிக. எந்நேரமும் மயக்கமுண்டாகி கபாலத்தைப் பற்றி மூளைகெட்டு நீர் அதிகரித்து 40 வகையான ரோகம் விளைவிப்பது பித்தம்.
பித்தத்தின் அறிகுறிகள்:
கூறிடவே பித்தமது சீறிற்றானால், கொடுங்காந்தல், உடல்வறட்சி நடுக்கமுண்டாம், ஏறிடவே அரோசிகந்தான் நாவறட்சி,மேலான சோபமது விக்கல் மூர்ச்சை, தூறிடவே கிறுகிறுப்பு காதடைப்புத்,தொந்தமாங் கசப்புடனே மண்டைக்குத்து, மாறிடவே நெஞ்செறிவு அக்னிமந்தம் மகத்தான குளிர்சுரமும்.
பித்தத்தின் அறிகுறிகள்:
கூறிடவே பித்தமது சீறிற்றானால், கொடுங்காந்தல், உடல்வறட்சி நடுக்கமுண்டாம், ஏறிடவே அரோசிகந்தான் நாவறட்சி,மேலான சோபமது விக்கல் மூர்ச்சை, தூறிடவே கிறுகிறுப்பு காதடைப்புத்,தொந்தமாங் கசப்புடனே மண்டைக்குத்து, மாறிடவே நெஞ்செறிவு அக்னிமந்தம் மகத்தான குளிர்சுரமும்.
பித்தவரட்சிக்குணம்; தலைகனக்கும், உடம்பு உலரும், தாது கெடும், தீப்போல் அபான மெரிந்து மலமிறங்கும், புத்தி மடிந்து மறதி உண்டாகும்,மனதில் தோன்றாத தெல்லாம் தோன்றும். இரத்தபித்தக்குணம்;மூக்காலும்,வாயாலும் இரத்தம் விழும்,உடல் தனல் போல் காந்தும்,வெளுக்கும்,கால்கை உதரும்.
- மூர்ச்சை அடைந்தவர்க்கு குளிர்ந்த நீரை முகத்திலடிக்க,தலையில் ஊற்ற மூர்ச்சை தெளியும்.
- நெடியுள்ள பொருளை நாசியினருகில் பிடிக்க மூர்ச்சை தெளியும்.
- கடுகையரைத்து உள்ளங்காலில் தடவ மூர்ச்சை தெளியும்.
- அரசமர குச்சிகளை சிறு துண்டுகளாக வெட்டி,மண்சட்டியில் வறுத்து, நீர் விட்டரைத்து,அந்த நீருடன் தேன் கலந்து பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.
- காபிதூளுக்குப் பதிலாக புளியங்கொட்டை தூளை போட்டு,டிகாஷன் எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிட பித்தச்சூடு,சூட்டு நோய்கள் குணமாகும்.வீரியச் செழிப்புண்டாகும்.
- சீரகம்10கிராம் லேசாக வறுத்து பொடித்து காலையில் எலுமிச்சை சாறுடன் பருகிவர பித்தம் தணியும்.
- செங்கழுநீர்க்கிழங்கை தோல்நீக்கி அரிந்து.பொடித்து,சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டுவர உடற்சூடு தணிந்து,பித்தம் தணியும்.
- இஞ்சித்துண்டுகளை தேனில் கலந்து,வதக்கி நீர்விட்டுக் காய்ச்சி,எலுமிச்சைசாறு கலந்து பருக பித்தமயக்கம் குணமாகும்.
- வேப்பம்பூ ரசம், துவையல் செய்து சாப்பிட்டுவர குமட்டல்,மயக்கம், பெருஏப்பம், குணமாகும்.
- வேப்பம்பூவை நீரில் ஊறவைத்து,4மணிக்கு1முறை,4வேளை சாப்பிட்டுவர பித்தகுன்மம் தீரும்.
- பப்பாளிபழத்தை அடிக்கடி சாப்பிட்டுவர பித்த நோய்கள் தீரும்.
- சிறியவெங்காயத்தை அரிந்து வெல்லம் சேர்த்து,நெய்யில் வதக்கி சாப்பிட்டுவர பித்தம் தணியும்.
- கறிவேப்பிலையை உணவில் அதிகம் சேர்த்து வர பித்தம் கட்டுப்படும்.
- சீந்தில் கிழங்கை தட்டி சிறிது நீர்விட்டு காய்ச்சி வடித்து தினம்2வேளை பருகிவர இரத்தத்திலுள்ள பித்தம் தணியும்.
- கற்பூரவல்லி இலைசாறு,ந.எண்ணை,சர்க்கரை கலந்து நெற்றியில் பற்றிட உடல்சூடு தணியும்.
- சூட்டின் காரணமாக நீர் மஞ்சளாக போனால் 2கிராம் வெடியுப்பை அரிசி கஞ்சியில் கலந்து கொடுக்க மாறும்.
- முருங்கைஇலையை நெய்யில் வேகவைத்து,சிறுவர்களுக்கும்,குழந்தைகளுக்கும் கொடுக்க பித்தசோகை நீங்கும்.
- மஞ்சள்கிழங்கை அனலில்போட்டு புகை பிடிக்க மயக்கம்,தொடர்விக்கல் நிற்கும்.
- சப்போட்டா பழத்தை உருக்கிய வெண்ணெயில் ஓரிரவு ஊறவைத்து,காலை சாப்பிட பித்தமயக்கம்,காய்ச்சல் தீரும்.
- வேப்பிலையை எலுமிச்சை சாறிலரைத்து,தலையில் தேய்க்க பித்தமயக்கம், குடிவெறி தீரும்.
- மாதுளம்பழச்சாறுடன் தேன்கலந்து பருகிவர பித்தம்,பித்தவாந்தி நீங்கும்.
- நெய்யில் வறுத்து இடித்த காக்கரட்டான் விதைச்சூரணம் 5-10 அரிசி எடை வெந்நீரில் கொடுக்க மூர்ச்சை தெளியும்.
- வேப்பம்பூவை ஊறவைத்துக் குடிக்க பித்தகுன்மம் தீரும்.
- மாதுளம் பூச்சாறு 30மிலி,தேன்15மிலி கலந்து பருக பித்தமயக்கம் தீரும்.
- சீதாமர இலைச்சாறு 2துளி நசியமிட மூர்ச்சை தெளியும்.
- சிறுகீரைவேரை பச்சரிசிக்கழுநீர் மண்டியால் அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இரத்தபித்தம் தீரும்.
- முருங்கையிலை,விலாமிச்சுவேர்,வெட்டிவேர்,முத்தக்காசு,மாதுளைபருப்பு, முசுமுசுக்கை இலை சமனாய் கசாயம் செய்து கொடுக்க இரத்தபித்தம் தீரும்.
- இலுப்பைஅரைப்பு,சீயக்காய்,வெற்றிலை தட்டி நாசியிலும்,கண்னிலும் பிழிய பித்தவெறி நீங்கும்.
- இளநீரும் ஆவின்பாலும் சமனாய் கலந்ததில் பாசிப்பயறு,சீரகம், நெல்பொறி சமனாய்க் கலந்து பொடிசெய்து போட்டு பாகுபோல் காய்ச்சி சீனி கலந்து 10நாள் சாப்பிட பித்தகாங்கை,சத்தி,கிறுகிறுப்பு,தாகம் நீங்கும்.
- ஏலம், இலவங்கம், திப்பிலி, நெல்லிவற்றல், அதிமதுரம், விலாமிச்சம்வேர், வெட்டிவேர், இலுப்பைப்பூ சமனாய் பொடித்து திரிகடி கொள்ள பித்தகாங்கை, எரிவு, வறட்சி தீரும்.
- சிவதைவேர்,திரிகடுகு சமனாய் பொடித்து சமன் சர்க்கரை கலந்து சாப்பிட பித்த வாய்வு நீங்கும்.
- அழிஞ்சில் வேர்பட்டை 6கிராம் அரைத்து வெந்நீரில் கொடுத்து,குளிர்ந்த நீரில் குளித்து மிளகு,நீர்மோர் உனவு கொள்ள பித்தம் சாந்தியாகும்.
- எலுமிச்சைசாறில் சீனி கலந்து சாப்பிட்டுவர பித்தம் நீங்கும்.
- எலுமிச்சைசாறு,துளசிச்சாறு சமனாய் கலந்து சீனி சேர்த்து சாப்பிட பித்தம் நீங்கும்.
- சீரகம்,நெல்லிவற்றல்,ஏலம்,இஞ்சி,சுக்கு, விலாமிச்சம்வேர் சமன் பொடித்து சமன் நெற்பொரி, சீரகம் தூள்கலந்து திரிகடி நெய்யில் கொள்ள பித்தம் நீங்கும்.
- சீரகம்,நெல்லிவற்றல்,ஏலம் சமன் பொடித்து சமன் சீனி கலந்து தேனில் கொள்ள பித்தம் நீங்கும்.
Comments
Post a Comment