தமனிகளில் (arteries) கழிவுப்பொருட்கள் அடைப்பு காரனமாக இதயம் சற்று அழுத்தமாக தள்ளுவதே இரத்த அழுத்தம்.
அதிக இரத்த அழுத்தம் (high blood pressure); தலைவலி, மண்டையில் இரைச்சல், மனதில் எரிச்சல், ஆழ்ந்து சிந்திக்க முடியாத பலவீனம், மூச்சு வாங்குதல், ஜீரணக்குறைவு, உடல் தளர்ச்சி. குறைந்த இரத்த அழுத்தம் (low pressure); தமனிகளில் அடைப்பின் காரணமாக இரத்தத்தை தள்ளும் ஆற்றல் குறைவு.
குறைவான இரத்த ஓட்டம் (poor circulation);
1.இரத்தத்திலும், இரத்தக் குழாய்களிலும் நச்சுப்பொருட்கள் அதிகம் சேர்வது; இவர்கள் உடல் பருத்தவர்களாக இருப்பார்கள்.
2.உடல் பலவீனம்; இவர்கள் ஒல்லியானவர்களாக இருப்பார்கள்
3.இதயம் நோயுற்றிருப்பது;
இதயம் சுருங்குதல் ; கல்லீரல் வேலை செய்யாது.கால் வீங்கும். வயிறு புடைக்கும். ஆயாசம் கானும்.நீர் இறங்காது.அதிக மது,மாது சேர்க்கையினால் உண்டாகும்.
இதயவீக்கம்; ஜீரணம் குறையும்,கல்லீரல் சரியாக வேலை செய்யாது. சிறுநீர் இறங்குவது குறையும். கால், வயிறு வீங்கும். மார்புதுடிப்பு அதிகம் கானும். அதிக மது, மாதுவினால் உண்டாகும்.
மனித உடலின் இருதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இந்த சுருங்கி விரியும் தன்மை 120/80 வரை சராசரி மனிதர்களுக்கு இருக்கும்.
இந்த சுருங்கி விரியும் தன்மை அதிகரித்தால் அதிக இரத்த அழுத்த நோயும் , குறைந்தால் குறைந்த இரத்த அழுத்த நோயும் ஏற்படுகிறது.
சில சமயங்களில் மனம் அதிக உணர்ச்சி வசப்படும்போது இரத்தம் வேகமாக உள்வாங்கி வெளியேறுகிறது. இதனால் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதனை பித்த வாத அழுத்தம் என்பர்.
மனித உடலில் அமைந்துள்ள பித்த நீர் அதிகம் சுரந்து வாத நீருடன் கலந்து பித்த வாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதுதான் அதிக ரத்த அழுத்தம் என்கிறோம். அதே நிலையில் உடற்கூறுகளுக்குத் தகுந்தவாறு வாத நீர் அதிகம் சுரந்து பித்த நீருடன் சேரும்போது வாத பித்த அழுத்தம் ஏற்படுகிறது. இதுவே குறைந்த இரத்த அழுத்தம் என்கிறோம்,

- ரோஜா இதழ்களுடன் 2எடை சீனாகற்கண்டை பொடித்து கலந்து 4நாள் வெயிலில் வைக்க குல்கந்தாகும். காலைமாலை சாப்பிட்டுவர கல்லீரல் பலமாகும்
- கீழாநெல்லியுடன் சமன் கரிசாலை சேர்த்தரைத்து பசும்பாலில் மண்டலம் கொள்ள பழுதுற்ற கல்லீரல் (gall bladder), மண்ணீரல் (enlargement of the spleen) வீக்கம் குறையும்
- தினசரி பப்பாளிப்பழம் சாப்பிட்டுவர கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்
- எருக்க இலையை அரைத்து மஞ்சள்தூள் கலந்து சாப்பிட்டுவர மண்ணீரல் நோய்கள் கட்டுப்படும
- சின்ன வெங்காயச்சாறுடன் மோர் கலந்து தினம் பருகிவர இதயக் கோளாறுகள் கட்டுப்படும்
- சின்னவெங்காயச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டுவர நுரையீரல் நோய்கள் தீரும்
- முருங்கைப்பூவை பாலில் காய்ச்சிப் பருக நெஞ்செரிச்சல் குணமாகும
- சங்குபற்பம் 400மி.கி, 50மிலி பாலில் தினம் 3வேளை பருகிவர நெஞ்செரிச்சல் குணமாகும்
- காவிக்கல் சூரணம் 1-2கிராம், 100மிலி நீரில் கொள்ள நெஞ்செரிச்சல் தீரும்
- குங்கிலியபற்பம் 500மி.கி, 50மிலி பாலில் தினம்3 வேளை பருகிவர நெஞ்செரிச்சல் குணமாகும்
- சிலாசத்துபறபம் 500மி.கி,தினம்2வேளை கொள்ள நெஞ்செரிச்சல் குணமாகும்
- திரிபலாதிசூரணம் 3-5கிராம் தினம்2வேளை வெந்நீரில் கலந்து சாப்பிட நெஞ்செரிச்சல் குணமாகும்.
- அதிமதுரச்சூரணம் 1கிராம் தினம்3வேளை 100மிலி நீருடன் கொள்ள நெஞ்செரிச்சல் தீரும்
- சீரகக்குடிநீர்,வெந்தயக்கூழ் சாப்பிட நெஞ்செரிச்சல் தீரும்
- உலர்ந்த கருப்புதிராட்சை, கடுக்காய், சர்க்கரை சமன் கலந்து உட்கொள்ள வயிறு, நெஞ்செரிச்சல் தீரும்.
- பிரம்மதண்டு இலைசூரணம் 2கிராம் தேனில் குழைத்துச் சாப்பிட்டுவர நுரையீரல் நோய்கள் நீங்கும்
- சாறுவேளை இலையை கீரைபோல் சமைத்து உண்டுவர இதயம், மண்ணீரல், சிறுநீரகம் நன்கு செயல்பட வைக்கும்
- நொச்சி இலையை அரைத்துப் பற்றிட மண்ணீரல் வீக்கம் கரையும்
- பாகற்காயை வற்றலாக்கி வறுத்து உண்டுவர மூலம்,காமாலை, கல்லீரல், மண்ணீரல் குறைபாடுகள் நீங்கும்
- மருதம்பட்டை தூளுடன் ஆடாதொடை இலைச்சாறு 1தேகரண்டி கலந்து வெள்ளாட்டுப் பாலில் கொள்ள நுரையீரல் புண் ஆறும்
- சதகுப்பைச் சூரணம் 1கிராம், சர்க்கரை கலந்து சாப்பிட்டுவர பசியின்மை தீரும். வாதநோயை கட்டுப்படுத்தும்.இரைப்பை,நுரையீரல் மாசுகளை அகற்றும்
- மருதம்பட்டைசூரணம்,மஞ்சள்கரிசாலைசூரணம் சமன் கலந்து திரிகடி, காலை மாலை தேனில் கொள்ள காமாலை,கல்லீரல்மண்ணீரல் வீக்கம் தீரும் .
- 20 கிராம் விராலியிலையை 250மிலி நீரில் 1நாள் ஊறவைத்து, வடித்து, 20மிலி பாலில் கலந்து உண்டுவர நுரையீரல் நோய்கள் தீரும்
- தினம் 8 அத்திபழங்களும்,6 வாதுமைபருப்பும் சாப்பிட்டுவர மண்ணீரல் வீக்கம் தீரும்..
- 500மிலி மாம்பழச்சாறுடன் தேன் சமன் கலந்து சாப்பிட்டுவர மண்ணீரல் வீக்கம் குணமாகும்.
- பெரிய இனிப்பு மாதுளம்பழத்தின் மேல்துளையிட்டு வாதுமை எண்ணை 15 மிலி ஊற்றி மூடி,பாத்திரத்தில் வைத்து சூடேற்றி,பழத்தை விதையுடன் மென்று சாப்பிட்டுவர கடுமையான இதயவலி(angina pectoris),நீடித்த இருமல் குணமாகும்.
- 100கிராம் திராட்சையை பன்னீரில் ஊறவைத்து பிழிந்து,வடித்துப் பருக,இதய படபடப்பு,இதயபலவீனம்,இதயத்தின் விரைவான துடிப்பு குணமாகும்.
- தேன் தொடர்ந்து மாதக்கணக்கில் சாப்பிட்டுவர எவ்வளவு பலவீனமான இதயமும் பலமடையும்.
- 5செம்பருத்திப்பூக்களை 500மிலி நீரிலிட்டு பாதியாக காய்ச்சி காலைமாலை பருகிவர எல்லா இதய நோய்களும் நீங்கும்.
- தக்காளிசாறு30மிலி, எலுமிச்சைச்சாறு15மிலி,தேன்8மிலி கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கல்லீரலைப் பற்றிய நோய்கள் அனைத்தும் குணமாகும்.
- 200மிலி பசும்பாலில்,அரைமுடிஎலுமிச்சைசாறு,வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்த்துக் குடித்துவர கல்லீரல் நோய்கள் குணமாகும்.
- எலுமிச்சைசாற்றை வெந்நீரில் பலமுறை தினம் பருகிவர கல்லீரல் வலுவடையும்.
- நாவல்பழங்களை அதிகம் சாப்பிட்டுவர கல்லீரல் வலுவடைந்து பசி எடுக்கும்.
- சீந்தில் சர்க்கரை 1கிராம் சாப்பிட்டு வர வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும். கல்லீரல்,மண்ணீரல் பலப்படும்
- பாதாம் பருப்பு - 2,முந்திரி பருப்பு - 2, பேரிச்சை - 2,உலர்ந்த திராட்சை - 4, காலை மாலை சாப்பிட்டு வர குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
- நெல்லி வற்றல், பச்சைப்பயிறு வகைக்கு 20 கிராம், ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு 200 மில்லியாக சுண்டக்காய்ச்சி காலை,மாலை 100மிலி வீதம் சாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு குறையும்.
- நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டு வர இரத்தத்தில் கொழுப்பு குறையும்.
- அருகம்புல்லை சுத்தம் செய்து கழுவி சாறு எடுத்து, ஐந்து பங்கு சுத்தமான தண்ணீர் சோ்த்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் குறையும்.
- அகத்தி கீரை, சுண்டைவற்றல் சமைத்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இரத்த அழுத்தம் குறையும்.
- கறிவேப்பிலைகளை நீர் விட்டு அரைத்து சாறு எடுத்து சிறிது எலுமிச்சைச்சாறு கலந்து காலையில் குடித்து வர உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.
- சடாமஞ்சில் வேர், கற்பூரம்,இலவங்கப்பட்டை நன்றாக இடித்து போட்டு நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர குறைந்த இரத்த அழுத்தம் மாறும்.
- காலை வெறும் வயிற்றில் 30 மில்லி அளவு கீழாநெல்லிச் சாறு குடித்து வர கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
- துளசிச்சாற்றை தினம் குடித்து வர கல்லீரல், மண்ணீரல்நோய்களை தடுக்கும்.
- பருப்பு கீரை, கீழா நெல்லி சம அளவில் எடுத்து மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட கல்லீரல் வீக்கம் வற்றும்.
- பொன்னாங்கண்ணிக் கீரையை பருப்புடன் கடைந்து சாப்பிட்டு வர கல்லீரல் நோய் குணமாகும்.
- தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
- பத்துகிராம் இஞ்சி, பூண்டு அரைத்து, ஒரு தம்ளர் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
- சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு தம்ளர் சாப்பிட்டுவர மாரடைப்பைத் தடுக்கும்.
- தூதுவளை சாறு 30 மிலி அளவில் தினம் காலையில் குடித்து வர உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பு கரையும்.
- பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வர தேவையற்ற கொழுப்பு குறையும்.
- வெண்தாமரை இலை – 4 பங்கு, ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு நிழலில் உலர்த்தி இடித்து பொடித்து காலை, இரவு 1 தேகரண்டி தேனில் குழைத்து சாப்பிட(இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்று வேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வாரம் மூன்று நாட்கள்) இதயநோயே வராது,
- உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்த மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
- செம்பருத்திப் பூ இதழ்களைத் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி, பால் சேர்த்துச் சாப்பிட ரத்தஅழுத்தம் குறையும்
- தினம் தயிர் சாப்பிட்டு வர இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
- கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வர இரத்தம் அழுத்தம் சீர்படும்
- ஒரு தம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட இரத்த அழுத்தம் சீர்படும்.
- அகத்திக் கீரையை வாரம் 2 முறைசாப்பிட்டு வர இரத்தக் கொதிப்பு குணமாகும்.
- உடலை நன்கு சுத்தப்படுத்த பூண்டு ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் பூண்டு கல்லீரலில் உள்ள நொதிப் பொருளை சரியாக இயக்குகிறது. அதாவது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. மேலும் பூண்டில் இருக்கும் அல்லீசின் மற்றும செலினியம் என்னும் பொருட்கள், கல்லீரலின் இயக்கத்திற்கு உதவுகிறது.
Comments
Post a Comment