Skip to main content

லட்சுமி கடாட்சம் செல்வம் நிலைத்திருக்க 75 வழிபாட்டு குறிப்புகள்


உங்கள் வீட்டில் என்னென்றும் லட்சுமி கடாட்சம், குறைவில்லா செல்வம் நிலைத்திருக்க இந்த 75 வழிபாட்டு குறிப்புகளை கடைபிடித்து வாருங்கள்.

1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

2. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

4. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்த தரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.

5. இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசி பெறுவது புண்ணிய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.

6. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்யம் செய்து நமது குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும்.

7. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்கு திருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெற பணம் நிலைத்திருக்கும்.

8. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ர ஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.

9. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

10. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்கு அளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடை நீங்கும்.

11. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்கு அபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

12. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

13. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.

14. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டி தலையணை அடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப்பிரச்சனை தீரும்.

15. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.

16. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம் விலகும்.

17. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம். பூர்வபுண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.

18. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

19. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.

20. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபட வசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

21. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபமும்,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

22. வீட்டில் தலை வாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

23. ஒவ்வொரு மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.

24. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

25. தொடர்ந்து 11 பவுர்ணமி அன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை அணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபட சொர்ண ஆகர்ஷணமாகும்.

26. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் வில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திட பணம் குவியும்.

27. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

28. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.

29. வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிக்க செல்வம் சேரும்.

30. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.

31. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.

32. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.

33. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர் பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

34. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.

35. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மி அருள் பரிபூரணமாக கிட்டும்.

36. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

37. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.

38. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி படத்தில் காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.

39. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம் நிலையாக தங்கும்.

40. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட, தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

41. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

42. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

43. திருமலை வெங்கடாஜலபதிக்கு வெண்பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

44. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்து வர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

45. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.

46. செவ்வாய் கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.

47. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

48. கோவிலில் லட்சுமி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

49. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனை அன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்து சேரும்.

50. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும் அணிந்து வர பணம் வரும்.

51. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டு அர்சிக்க தனலாபம் கிட்டும்.

52. ஐஸ்வர்ய லட்சுமி படத்தினில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.

53. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லட்சுமி கடாடசம் நிரந்தரமாகும்.

54. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.

55. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம் கிடைக்கும்.

56. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாக பிடித்து அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

57. மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.

58. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

59. பச்சை பட்டு உடுத்திய லட்சுமி படத்தினை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

60. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக் கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.

61. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.

62. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.

63. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

64. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்கிரன், மகாலட்சுமி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

65. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.

66. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

67. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

68. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

69. தனதாயட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

70. சவுபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்.

71. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளை வழிபட தங்க நகை கிடைக்கும்.

72. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம், அடிக்கடி பார்க்க பணம் வரும்.

73. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம் குறையாது.

74. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

75. வியாழக்கிழமை குபேர காலத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேரனை வழிபட பணம் வரும்.

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...