Skip to main content

அஷ்டாங்க யோகம்

அஷ்டாங்க யோகம் என்ற அட்டாங்க யோகம் தெரிவது அவசியம். குரு சொன்னதை அப்படியே எனக்கு புரிந்த விதத்தில் விளக்குகிறேன்.


எட்டுவிதமான யோகத்தில் அப்படி என்ன சிறப்பு?

யாம நியம ஆசன பிராணாயமமே முதல் நான்கு படி.

பிரதியாகார தாரணை தியானமுஞ் சமாதியே பின்நான்கு படி.

1. யாமம் அல்லது இயமம்

2. நியமம்

3. ஆசனம்

4. பிராணனின் யாமம்

5. ப்ரதியாகாரம்

6. தாரணை

7. தியானம்

8. சமாதி.


இந்த எட்டு


1. யாமம் – நெறி – அதாவது வாழ்வியல் நெறி பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும். ஒரு எளியவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது. தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது. சிலர் சொல்லுவாங்க உன் பணம் எனக்கு வேண்டாம் என் பணம் உனக்கு வேண்டாம். அதுவே இயமம். இது ‪#‎கர்மயோகம்‬. கருமமே கண்ணாயிருப்பது!


2. நியமம் – மேலே சொன்ன அதே வாழ்வியல் அடிப்படை கோட்பாடு மட்டுமின்றி, மற்றவர்களைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும் மனதில் கொண்டு, சில அனுஷ்டானங்களை, ஆகமங்களை கடைப்பிடித்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்விக்கும் நிலை. தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு வாழ்வது. சுத்தம் (உள் மற்றும் புறம்).இறைவனிடம் சரணாகதி ஆவது . நெற்றியில் பட்டை, நாமம் போடுவது, இன்று பிரதோஷம், சனி கிழமை மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று சிலர் சொல்ல கேட்போம். அண்ணதானம் போடுவது, தீ மிதிப்பது எல்லாம் இதில் அடங்கும். இது ‪#‎பக்தியோகம்‬. மதம், கொள்கை, கடவுள் என்பதெல்லாம் இதிலே அடங்கும்.


இவ்விரண்டு படிகளை கடந்தாலே நீ ஆவாய் யோகி.


3. ஆசனம் – ஆசான் இல்லாத ஆசனம் ஆதாரம் இல்லாத ஆசனம்.

உன்னை வளைக்க உடலை வளை – எலி எனும்

இறைவன் இருக்க உன் உடலே வளை. மிருகத்தை பார் ஆசனம். மலையை பார் ஆசனம்.

எங்கும் ஆசனம் எதிலும் ஆசனம்.உன்னை ஆக்கு ஆசனம். அதுவே இறையின் அரியாசனம். ஆசனம் ஒருவனுக்கு இறை நிலையை உண்டாக்கும்.இதுவே ‪#‎கடயோகம்‬.


4. பிராணனின் யாமம் -பிராண+ யமம் என்று பிரித்தால், பிராண சக்தியை நெறிப்படுத்துதல் என்று கொள்ளலாம். இதற்கு மூச்சுப்பயிற்சி உதாரணம்.மூச்சில் பிராணன் உள்ளது ! மூச்சே பிராணன் ஆகிவிடாது. உனது உயிர் சக்தியை வசமாக்கு- அதுவே பிராணனின் யாமம்.

உனது நவ துவாரத்தில் பயணிக்கும் சக்தியை திறந்து மூடு.

உன் உடல் எனும் புல்லாங்குழலின் துவாரங்கள் வழியே

ஓடும் இசையாக மாறும் உனது உயிர்சக்தி.

இயற்கையின் இசைக்கருவியான உனது உடலில் இல்லதா இசையே இல்லை.

நாதனை உணர நாதத்தை உணரு. இது ‪#‎வாசியோகம்‬.

நான்காம்படியை நன்றாக படித்தால் பிற நான்கும் நன்றாகும்.


5. ப்ரதியாகாரம் – பிரத்தியோகமான ஆகாரம். அஞ்சும் சிங்கங்களாக இருக்கும் ஞானேந்திரியத்தை ஐந்தும் சிங்கங்களாக்கு

பிற உலகில் நில்லாமல் அக உலகில் இருப்பதே ப்ரதியாகாரம். ஐந்து புலன்களாலும் நாம் உட்கொள்வது ஆகாரம். இதை யோக நெறியில் அளவுடன் கடைபிடிப்பது ‪#‎சிவயோகத்தின்‬ ஆரம்பம்.


6. தாரணை – இறைவன் யார்?, இந்த ஆத்மா என்பது என்ன ? “நான்” யார் ? போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் உள்ளார்ந்த பயணம். சிலர் சொல்லுவார்கள் தியானத்தில் அமர்ந்து சிவன் காட்சி கொடுத்தார் என்று சொல்வார்கள். தியானத்தில் பெருமாளை பார்த்தேன் என்று சிலர் சொல்ல கேட்போம். இவங்க எல்லாம் தியானம் செய்ய வில்லை தாரணை யில் தான் இருந்து இருக்கார்கள்.

தியானம் என்பது எதுவுமற்ற நிலை அப்படி இருக்கும் போது அதில் கடவுளை பார்த்தேன் என்றால் அப்போ அவர் தியானம் செய்ய வில்லையென்று பொருள். தாரணை யில் இருக்கிறார். தான் முன்பு பார்த்த உருவத்தையோ அல்லது காதால் கேட்ட உருவத்தையோ அவர் தாரணையில் உணர்ந்து இருக்கிறார். மனதை ஓரிடத்தில் குவித்தல் அல்லது குவிக்க முயற்சி செய்தல் தாரணை.


கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.


பார்த்தவர் சொல்ல மாட்டார்.


சொன்னவர் பார்த்தது இல்லை. இந்த நிலையில் தான் ஒலி, ஒளி, நாதம், சங்கொலி போன்றவை உணரப்படும். இதுவே ‪#‎ஞானயோகம்‬.


7. தியானம் – செயல் கடந்து செயல் மறந்து அகம் அகழ்ந்து நின்று,

தானே செய்யாமல் தானே செயல்படுவது தியானம். சிலர் சொல்ல கேட்போம் தினமுன் நான் முப்பது நிமிடம் தியானம் செய்வேன் என்று, முதலில் ஒன்றை தெளிவு படுத்த வேண்டும் தியானத்தை யாரும் செய்ய முடியாது. தியான நிலைக்கு போகலாம். எதுவுமற்ற, எண்ணமற்ற நிலையில் எப்படி சரியாக முப்பது நிமிடம் கணக்கு எப்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வது . அவர் அப்போ தாரணையில் இருந்து இருக்கார் என்று அர்த்தம். எதுவுமற்ற, எண்ணமற்ற, ஏகாந்த இறை நிலையே தியானம். சூனியம் என்றும் சொல்வதுண்டு. ஒன்றுமற்ற நிலை. தூங்காமல் தூங்கும் இறைதுயில் தியானம்.


8. சமாதி – சம + ஆதி = இறைவனுடன் இரண்டறக் கலப்பது அல்லது இறை நிலையை அடைவது.சரி இந்த எட்டுப்படிகளையும் ஒவ்வொன்றாகத்தான் செல்லவேண்டுமா ? இது சாதாரண மனிதனால் சத்தியமான ஒன்றா ? இயமம் முதல் தாரணை வரை தான், எந்த கொம்பனாலும் செய்யமுடியும். தியானமோ சமாதியோ ஒருவராலும் செய்யமுடியாது ! இதுவே உண்மை ! ஆதியானவனுடன் சமமாவதே சமாதி.

நீயே பிரம்மனாம் அது அகம் பிரம்மாஸ்மி-யாம்.

நீயே சத்தியம் அது தத்வமஸி.

நீயே அனைத்துமாம் அதுவே சமாதி.


இந்த ஒவ்வொரு படியைப் பற்றியும் இங்கு கூறியிருப்பது துல்லியமான விளக்கமாகாது. இங்கு பதஞ்சலியின் யோக சூத்திரங்களை விரிவாக அறிந்து தேர்ச்சி அடைவது நம் குறிக்கோள் அல்ல என்பதால் பொதுவான விளக்கம் எளிய

சொற்களில் தரப்பட்டிருக்கிறது.


முதல் இரண்டு படிகளான யமா, நியமா இரண்டும் தீய பண்புகளை விலக்கி நற்பண்புகளை அடைவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆரம்பப் படிகளாகவே இவற்றை சொல்வது ஏனென்றால் நற்பண்புகள் இல்லாதவன் எதைக் கற்றாலும் அதனால் அவனுக்கும், அவனைச் சார்ந்த சமூகத்திற்கும் தீமையே விளையும் என்ற ஞானம் அன்றைய யோகிகளுக்கு இருந்தது.


மூன்றாம் படியான ஆசனங்கள் மூலம் நம் உடல்நலனைப் பாதுகாக்க பதஞ்சலி வலியுறுத்துகிறார். உடல்நலம் சரியாக இருக்கும் வரை மட்டுமே மற்ற உயர்ந்த விஷயங்களில் முழுமையான கவனம் செலுத்துதல் சாத்தியம் அல்லவா?


நான்காவதாக மூச்சுப் பயிற்சி. இதன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தும் ஆரம்பப் பணி எளிதாகிறது என்பதை முன்பே பார்த்தோம்.


ஐந்தாவதாக மனம் புலன் வழிப் பிரயாணம் செய்து அலைந்து தன் சக்திகளை வீணடிக்காத வண்ணம் அது அலைய ஆரம்பிக்கும் போதெல்லாம் திருப்பிக் கொண்டு வரும் கலையே ப்ரத்தியாஹரா. திரும்பத் திரும்ப சலிக்காமல் அலையும் மனதை

திரும்பக் கொண்டு வருதல் மிக முக்கியமான படி.


அப்படிக் கொண்டு வந்த மனதை ஓரிடத்தில் குவிப்பது தாரணா என்கிற ஆறாம் படி. மனம் ஓரிடத்தில் குவிய ஆரம்பிக்கும் போது தான் சக்தி பெற ஆரம்பிக்கிறது.


குவிய ஆரம்பிக்கும் மனம் அங்கு லயித்து விடுவது தியானம் என்கிற ஏழாம் படி. இந்த நிலையில் மனம் அமைதியடைந்து சக்திகள் பல பெறுகிறது.


சிறிது நேரம் லயிப்பது தியானம் என்றால் மனம் அதிலேயே ஐக்கியமாகி விடுவது கடைசி படியான சமாதியில். இந்த நிலையில் பிரபஞ்ச சக்தியுடன் ஐக்கியமாகி விடுவதால் இங்கு நாம் விரும்பும் எதையும் அடைய முடியும், தெய்வீக சக்தி கை கூடுகிறது என்கிறது யோகா.


எட்டா சித்தியாம் அட்டமா சித்தியை அடைய முயலுவது ஏன்?

அட்டாங்க யோகத்தில் இருந்து அண்டத்தை படைத்தவனாகிவிடு.

உன் பிண்டத்தை அண்டமாக்கிவிடு.


சரி அண்டத்தில் உள்ளது பிண்டத்தில்.

பிண்டத்தில் உள்ளது அண்டத்தில்.

இரண்டும் ஒன்றா ?

ஆம்,

சரி பிண்டம் உண்ணுகிறது. அண்டம் உண்ணுகிறதா ?

பிண்டம் உறங்குகிறது. அண்டம் உறங்குகிறதா ?

Comments

Popular Posts

அருள்வெளி சித்தர் 108 போற்றி

பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் பரம்பொருள் அருட்பெரும் ஜோதி ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் ஓம் ஸ்ரீ அருள்வெளி சித்தர் 108 போற்றி 1. அன்பே உருவான அருள்வேளிக் சித்தனே போற்றி ! 2. அகர முதலாய் அமர்ந்தாய் போற்றி ! 3. அறிவிற் கறிவான ஆதுவிதனே போற்றி ! 4. அறத்தின் வடிவே ஐயனே போற்றி ! 5. அடிமை எமைக் காக்கும் அத்தா போற்றி ! 6. அனாதிப் பரம்பொருள் ஆயினே போற்றி ! 7. அமரர் வணங்கும் அரியே போற்றி ! 8. அண்டினோர்க் காதரவு அளிப்பாய் போற்றி ! 9. அன்பே சிவமேன் றறிந்தாய் போற்றி ! 10. அன்பே சிவமாய் அமர்ந்தாய் போற்றி ! 11. அடக்கம் ஆன  சிவமே போற்றி ! 12. ஆனந்த வடிவச் சித்தனே போற்றி ! 13. ஆகாயம் எல்லாம் அளந்தாய் போற்றி ! 14. ஆதியே போற்றி சோதியே போற்றி ! 15. ஆலத்தை அமுதாய் ஆக்குவை போற்றி ! 16. ஆருரிச் சிவமே அழகா போற்றி ! 17. ஆசை வித்த அரனே போற்றி ! 18. ஆணவ மாயை அழித்தாய் போற்றி ! 19. ஆவியில் உறையும் ஐயா போற்றி ! 20. ஆத்தும தத்துவம் அறிவிப்பாய் போற்றி ! 21. ஆலமர் செல்வ அரசே போற்றி ! 22. இகர மாகி எழுந்தாய் போற்றி ! 23. இறைவி இறைவன் வடிவே போற்றி ! 24. இகபர சுகங்கள் தருவாய் ...

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்

அகத்தியர் கூறும் பீஜ மந்திரங்களும் அவற்றின் பலன்களும்! அகத்தியர் திருமந்திர விளக்கம் 22 என்னும் பாடலில் திருமந்திரமாகிய பஞ்சாக்ஷர மந்திரத்தைப் பற்றி, தத்புருஷம், அகோரம் ஆகிய முகங்கள் ஒவ்வொன்றிற்கும் இருபத்தைந்து வகைகளையும் வாமதேவ முகத்திற்கு ஒன்பது வகைகளையும், ஆக மொத்தம் 59 வகைகள் பற்றி மட்டுமே பாடலில் அகத்தியர் கூறுகிறார். தவிர ஒவ்வொரு வகை மந்திரத்தை உச்சரிப்பதனால் என்ன பலன் என்றும் கூறப்பட்டுள்ளது. தத்புருஷ முகத்தைச் சார்ந்த 25 வகை மந்திரங்களும் அவற்றை ஓதுவதால் உண்டாகும் பயன்கள் பற்றியும் செய்யுள் 5லிருந்து 11வரை அகத்தியர் பார்த்திடவே தற்புருஷம் இருபத் தஞ்சு பாடுகிறேன் நமசிவய அகோர மாகும். (செய்யுள்.5) என்று கூறுகிறார். அவையாவன: மந்திரம் பலன் 1. நங்-சிவயநம - விரும்பிய புத்திர பாக்கியம் கிடைக்கும். 2. அங்-சிவயநம - இயல்பாகத் தேக நோய் தீரும் 3. வங்-சிவயநம - யோகசித்தி காணலாகும். 4. உங்-சிவயநம - ஆயுள் விருத்தி 5. ஓம்-அங்-சிவயநம - ஐம்பூதங்களின் மேல் கட்டுப்பாடு உண்டாகும். 6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும். 7. ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும். 8. ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும். ...

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு...

இயற்பியல் பிரபஞ்சமும் தூய ஆற்றல் குண்டலினி

இயற்பியல், பிரபஞ்சமும்  தூய ஆற்றல், உலகளாவிய வெப்பநிலை மாறுபாடுகள், நீராவியின் மாறுபாடுகள், அதிர்வுகளின் அவதானிப்புகள், நமது சித்தாந்த தியான நிலை குண்டலினி ஆற்றல் தொடர்பும்.  ஒரு மின்காந்த புலம் என்பது காந்த மற்றும் மின்சார ஆற்றலால் நிரப்பப்பட்ட இடத்தின் ஒரு பகுதி. மின்காந்த புலங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. எக்ஸ்-கதிர்கள் மற்றும் காமா கதிர்கள் போன்ற உயர் அதிர்வெண் மின்காந்த கதிர்வீச்சு “ அயனியாக்கம் ” மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும், அதே நேரத்தில் குறைந்த அதிர்வெண் கொண்ட மின்காந்த கதிர்வீச்சு அல்லது “ அல்லாத அயனியாக்கம்,” மனிதர்களுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது, அல்லது சில மனித நோய்களுக்கு கூட ஒரு தீர்வாக கருதப்படுகிறது. பூமியைச் சுற்றியுள்ள மின்காந்த புலம் நம் உடலை அடைந்து அதன் உள்ளே இருக்கும் கட்டணங்களை பாதிக்கிறது. நம் உடல்கள் அதன் சொந்த மின்னியல் புலத்தைக் கொண்டுள்ளன. டி.என்.ஏவின் துகள்கள் கூட மின்காந்த புலங்களை உருவாக்க முடியும். அந்த அலைகள் நம் உடலின் உள் கடிகாரத்தை பிரதானமாக்குகின்றன மற்றும் தூக்க முறைகள் மற்றும் ஹார்மோன் சுரப்பை பாதிக்கின்றன. ஆல்பா மூளை அ...

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்

தமிழில் உள்ள மயங்கொலிச்சொற்கள்  அணல் - தாடி, கழுத்து அனல் - நெருப்பு அணி - அழகு அனி - நெற்பொறி அணு - நுண்மை அனு - தாடை, அற்பம் அணுக்கம் - அண்டை, அண்மை. அனுக்கம் - வருத்தம், அச்சம் அணை - படுக்கை, அணைத்துக் கொள்ளுதல் அனை - அன்னை, மீன் அணைய - சேர, அடைய அனைய - அத்தகைய அண்மை - அருகில் அன்மை - தீமை, அல்ல அங்கண் - அவ்விடம் அங்கன் - மகன் அண்ணம் - மேல்வாய் அன்னம் - சோறு, அன்னப்பறவை அண்ணன் - தமையன் அன்னன் - அத்தகையவன் அவண் - அவ்வாறு அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன் ஆணகம் - சுரை ஆனகம் - துந்துபி ஆணம் - பற்றுக்கோடு ஆனம் - தெப்பம், கள் ஆணி - எழுத்தாணி, இரும்பாணி ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று ஆணேறு -ஆண்மகன் ஆனேறு - காளை, எருது ஆண் - ஆடவன் ஆன் - பசு ஆணை - கட்டளை, ஆட்சி ஆனை - யானை இணை - துணை, இரட்டை இனை - இன்ன, வருத்தம் இணைத்து - சேர்த்து இனைத்து - இத்தன்மையது இவண் - இவ்வாறு இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு) ஈணவள் - ஈன்றவள் ஈனவள் - இழிந்தவள் உண் - உண்பாயாக உன் - உன்னுடைய உண்ணல் - உண்ணுதல் உன்னல் - நினைத்தல் உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி உன்னி - நினைத்து, குதிரை ஊண் - உணவு ஊன் - மாமிசம் எண்ண - நினைக்...