ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம்
கொனார்க் சூரிய கோயில் |
அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு
ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு
நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மங்கலக் குடியினில் மங்களமாய்க்
குடிகொண்டு மங்காத ஒளிவீசும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில்
பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்யனார் கோவிலில் சுந்தரமாய்
வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை
அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு
அதிபதியானவனே சந்திரன் செவ்வாய்
பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே
சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ
உன்திருமுகம் காட்டி அருள்புரியும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சனீஸ்வரரையும் தர்மராஜனையும் மகனாய்ப் பெற்றவனே
அஸ்வினிக்கும் யமுனைக்கும் தந்தையாய் நிற்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
தேரும் மயிலும் வாகனமாய்க் கொண்டவனே பாருலகம் போற்றும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
செந்நிற மேனியனே செந்தாமரைப் ப்ரியனே
இச்செகம் போற்றும் கதிரவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
கண்ணால் காணும் கடவுள் நீ
கதிரொளி வீசும் கிரகமும் நீ
உன்னால் வாழும் உயிர்களைக் காக்க
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
நாளையும் கோளையும் நம்பி வாழும்
இப்புவியில் நன்மைகள் பல புரியவே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
மனித ஜாதகத்தில் பிதுர்காரகனாக விளங்கி
தைரியம் வெற்றி அனுகூலம் யாவும் தந்தருள்பவனே
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
விழியில் ஒளிதந்து புவியில்
புகழ்தந்து நல்வாழ்வு நல்கிடும்
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
வான் மழை பொழிந்திட பயிர்கள்
விளைந்திட வையகம் தழைத்திட
சூர்ய பகவானே உதித்தெழுவாய்
சூர்ய நமஸ்காரம் சர்வரோக நாசனம்
சூர்ய பகவானுக்கு ப்ரதி ஞாயிறன்று
விரதமிருந்து செந்தாமரை மலர்களால்
அர்ச்சித்தால் நலம் உண்டாகும்
சூர்யனின் வாகனமான மயிலுக்கு உணவளித்து
சூர்யனுக்கு உவந்த தானியமான கோதுமையை
செப்புப் பாத்திரத்திலிட்டு தானம் செய்து
சிவசூர்யநாராயணன் தாழ்பணிந்தால் கார்யசித்தியாகும்
சூர்யபகவானின் ஷேத்ரமான சூர்யனார் கோவில் சென்று
சிவசூர்யநாராயணனுக்கு செந்நிற ஆடை
அணிவித்து அபிஷேக ஆராதனை செய்து
வழிபட்டால் சர்வ ஜெயம் உண்டாகும்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சரணம் சரணம் சூர்யபகவானே சரணம்
சரணம் சரணம் ஆதித்யனே சரணம்
சரணம் சரணம் சூர்யநாராயணனே சரணம்
சரணம் சரணம் பகலவனே நின்பதமலரடி சரணம்
சூரிய காயத்ரி மந்திரம் :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே பாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்யப் ப்ரசோதயாத்
ஸ்ரீ சூர்யாஷ்டகம்:
ஆதிதேவ நமஸ்துப்யம் ப்ரஸீத மம பாஸ்கர.
திவாகர நமஸ்துப்யம் ப்ரபாகர நமோஸ்துதே.
ஸப்தாச்வ ரதமாரூடம் ப்ரசண்டம் கஸ்யபாத்மஜம்.
ஸ்வேத பத்மதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
லோஹிதம் ரதமாரூடம் ஸர்வலோக பிதாமஹம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
த்ரைகுண்யம் சமஹாசூரம் ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வரம்.
மஹாபாப ஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
ப்ருஹ்மிதம் தேஜ: புஞ்ஜம் சவாயும் ஆகாசம் ஏவச.
ப்ரபும் சஸர்வ லோகானாம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
பந்தூக புஷ்ப ஸங்காசம் ஹாரகுண்டல பூஷிதம்
ஏக சக்ரதரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
தம் ஸூர்யம் ஜகத்கர்த்தாரம் மஹாதேஜ ப்ரதீபனம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
தம் ஸூர்யம் ஜகதாம்நாதம் ஞான விஞ்ஞான மோக்ஷதம்
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
மஹா பாபஹரம் தேவம் தம் ஸூர்யம் ப்ரணமாம்யஹம்.
இதி ஸ்ரீ ஸூர்யாஷ்டகம் ஸம்பூர்ணம்
Comments
Post a Comment