வனதுர்கா..
ஓம் உத்திஷ்ட புருஷ்யைச வித்மஹே
மகாசக்த்யைச தீமஹி
தந்நோ வனதுர்கா: ப்ரசோதயாத்|
ஆஸுரி துர்கா..
ஓம் மகா காம்பீர்யைச வித்மஹே
சத்ரு பக்ஷிண்யைச தீமஹி
தந்நோ ஆஸுரிதுர்கா: ப்ரசோதயாத்|
திருஷ்டி துர்கா..
ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஷின்யைச தீமஹி
தந்நோ திருஷ்டிதுர்கா: ப்ரசோதயாத்|
ஜாதவேதோ துர்கா..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
வந்நி ரூபாயைச தீமஹி
தந்நோ ஜாதவேதோ: ப்ரசோதயாத்|
ஜய துர்கா..
ஓம் ஹ்ரீம் லவநாராயைச வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் பயநாசின்யைச தீமஹி
தந்நோ ஜயதுர்கா: ப்ரசோதயாத்|
சந்தான துர்கா..
ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கர்பரக்ஷிண்யைச தீமஹி
தந்நோ சந்தானதுர்கா: ப்ரசோதயாத்|
சபரி துர்கா..
ஓம் காத்யாயண்யைச வித்மஹே
கால ராத்ர்யைச தீமஹி
தந்நோ சபரி துர்கா ப்ரசோதயாத்|
சாந்தி துர்கா..
ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
ஜயவரதாயைச தீமஹி
தந்நோ சாந்திதுர்கா: ப்ரசோதயாத்|
சூலினி துர்கா..
ஓம் ஹ்ரீம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே
தும் ஹ்ரீம் ஓம் மஹாசூலினிச தீமஹி
ஓம் ஹ்ரீம் தும் தந்நோ துர்கா: ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..
ப்ராம்ஹி..
ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||
மாஹேஸ்வரி..
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||
கௌமாரி..
ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||
வைஷ்ணவி..
ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||
வாராஹி..
ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||
இந்த்ராணி..
ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||
சாமுண்டி..
ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||
ஸப்த ரிஷி பத்தினிகளுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..
ஸ்ரீ அதிதி தேவி..
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ஆத்ம காஸ்யப பத்னியைச தீமஹி
தந்நோ அதிதி: ப்ரசோதயாத்||
ஸ்ரீ அனுசூயா தேவி..
ஓம் வேதாத்மன்னியை வித்மஹே
அத்ரி பத்னியைச தீமஹி
தந்நோ அனுசூயா: ப்ரசோதயாத்||
ஸ்ரீ சுகிலா தேவி..
ஓம் மஹா சக்தியைச வித்மஹே
பரத்வாஜ பத்னியைச தீமஹி
தந்நோ சுசிலா: ப்ரசோதயாத்||
ஸ்ரீ குமுத்வதி தேவி..
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
விஸ்வாமித்ர பத்னியைச தீமஹி
தந்நோ குமுத்வதி: ப்ரசோதயாத்||
ஸ்ரீ அஹல்யா தேவி..
ஓம் மஹா சக்தியைச வித்மஹே
கெளதம பத்னியைச தீமஹி
தந்நோ அஹல்யா: ப்ரசோதயாத்||
ஸ்ரீ ரேணுகா தேவி..
ஓம் ஆதி சக்தியைச வித்மஹே
ஜமதக்னி பத்னியைச தீமஹி
தந்நோ ரேணுகா: ப்ரசோதயாத்||
ஸ்ரீ அருந்ததி தேவி..
ஓம் ஞானாத்மிகாயை வித்மஹே
வசிஷ்ட பத்னியைச தீமஹி
தந்நோ அருந்ததி: ப்ரசோதயாத்||
ஸப்த ரிஷிகளுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்..
காஸ்யபர்..
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்தாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப: ப்ரசோதயாத்||
அத்ரி..
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி: ப்ரசோதயாத்||
பரத்வாஜர்..
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ: ப்ரசோதயாத்||
விஸ்வாமித்ரர்..
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர: ப்ரசோதயாத்||
கெளதமர்..
ஓம் மஹா யோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கெளதம: ப்ரசோதயாத்||
ஜமதக்னி..
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ ஜமதக்னி: ப்ரசோதயாத்||
வசிஷ்டர்..
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரஹ்ம சுதாய தீமஹி
தந்நோ வசிஷ்ட: ப்ரசோதயாத்||
27 நட்சத்திரங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள்...
அசுவனி
"ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே சுதாகராயை தீமஹி|
தந்நோ அச்வநௌ: ப்ரசோதயாத்||"
பரணி
"ஓம் க்ருஷ்ணவர்ணாயை வித்மஹே தண்டதராயை தீமஹி|
தந்நோ பரணி: ப்ரசோதயாத்||"
கிருத்திகா
"ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி|
தந்நோ க்ருத்திகா: ப்ரசோதயாத்||"
ரோகிணி
"ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி|
தந்நோ ரோஹினி: ப்ரசோதயாத்||"
மிருகசீர்ஷம்
"ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி|
ம்ருகசீர்ஷா: ப்ரசோதயாத்||"
திருவாதிரை
"ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி|
தந்நோ ஆர்த்ரா: ப்ரசோதயாத்||"
புனர்பூசம்
"ஓம் ப்ராஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய தீமஹி|
தந்நோ புனர்வஸு: ப்ரசோதயாத்
பூசம்
"ஓம் ப்ரம்மவர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி|
தந்நோ புஷ்ய: ப்ரசோதயாத்||"
ஆயில்யம்
"ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி|
தந்நோ ஆச்லேஷ: ப்ரசோதயாத்||"
மகம்
"ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி|
தந்நோ மக: ப்ரசோதயாத்||"
பூரம்
"ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி|
தந்நோ பூர்வபால்குநீ: ப்ரசோதயாத்||"
உத்தரம்
"ஓம் மஹாபாகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி|
தந்நோ உத்ரபால்குநீ: ப்ரசோதயாத்||"
அஸ்தம்
"ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி|
தந்நோ ஹஜ்தா: ப்ரசோதயாத்||"
சித்திரை
"ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி|
தந்நோ சைத்ரா: ப்ரசோதயாத்||"
சுவாதி
"ஓம் காமசாராயை வித்மஹே மஹாநிஷ்டாயை தீமஹி|
தந்நோ சுவாதி: ப்ரசோதயாத்||"
விசாகம்
"ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி|
தந்நோ விசாகா: ப்ரசோதயாத்||"
அனுஷம்
"ஓம் மிந்த்ரதேயாயை வித்மஹே மஹாமித்ராய தீமஹி|
தந்நோ அனுராதா: ப்ரசோதயாத்||"
கேட்டை
"ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி|
தந்நோ ஜ்யேஷ்டா: ப்ரசோதயாத்||"
மூலம்
ஓம் ப்ரஜாபதிபாயை வித்மஹே மஹா ப்ராஜாயை தீமஹி|
தந்நோ மூலாப்: ப்ரசோதயாத்||"
பூராடம்
"ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி|
தந்நோ பூர்வாஷாடா: ப்ரசோதயாத்||"
உத்திராடம்
"ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி|
தந்நோ உத்ராஷாடா: ப்ரசோதயாத்||"
திருவோணம்
"ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி|
தந்நோ ச்ரோணா: ப்ரசோதயாத்||"
அவிட்டம்
"ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி|
தந்நோ ச்ரவிஷ்டா: ப்ரசோதயாத்||"
சதயம்
"ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி|
தந்நோ சதபிஷக்: ப்ரசோதயாத்||"
பூரட்டாதி
"ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி|
தந்நோ பூர்வப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"
உத்திரட்டாதி
"ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி|
தந்நோ உத்ரப்ப்ரோஷ்டபத: ப்ரசோதயாத்||"
ரேவதி
"ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி|
தந்நோ ரைய்வதி: ப்ரசோதயாத்||"
இந்த நட்சத்திரங்களுக்குரிய காயத்திரி மந்திரங்களைக் கொண்டு தினமும் என்ன நட்சத்திரம் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்திற்குரிய வேளையில் அந்த நட்சத்திரத்திற்குரிய காயத்திரி மந்திரத்தை செபித்துவருவது சிறந்த பலனை அன்றைய தினத்தில் கொடுக்கும் என்பது ஐதீகம்.
தக்ஷிணாமூர்த்தி வழிபாடு..
தென்முகக் கடவுளாம் தஷிணாமூர்த்தி, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோருக்கு உபதேசம் செய்ய எழுந்தருளிய குருமூர்த்தமாகும்.
அவர் தம் சுட்டு விரலைப் பெருவிரலோடு சேர்த்து மற்ற மூன்று விரல்களையும் அகலவிட்டுக் காட்டும் சின்முத்திரையால் உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றினையும் அகற்றிக் கடவுளை அடைதல் வேண்டும் என உபதேசிக்கிறார்.
இந்தச் சின்முத்ரை சாதக சின்முத்ரை, சாத்ய சின்முத்ரை, போதக சின்முத்ரை என்று முத்திறப்படும்.
ஸாதக சின்முத்ரா என்பது பெருவிரல் அடியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
ஸாத்ய சின்முத்ரை என்பது பெருவிரல் மத்தியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருந்துவது.
போதக சின்முத்ரை என்பது பெருவிரல் நுனியில் ஆள்காட்டி விரல் நுனியில் பொருத்திக் கையை உயர்த்திக் காட்டுவதே இந்தப் போதக சின்முத்ரை எனப்படும்.
ஆதலால் கோவில்களில் தஷிணாமூர்த்தி சந்நிதியில் நாம் இறைவனைக் குருவாய்ப் பாவித்து வணங்க வேண்டும். அவ்வாறு வணங்கும் போது கீழ்வரும் சுலோகங்களைச் சொல்லி வழிபடலாம்..
"அக்ஞான திமிராந்தஸ்ய ஞானாஞ்ஜன சலாகயா
சஷுருன்மீலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குரவே நம:"
"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகினாம்
நிதயே சர்வவித்யானாம் தஷிணாமூர்த்தயே நம:"
தஷிணாமூர்த்தி காயத்ரி..
"ஓம் தஷிணாஸ்யாய வித்மஹே த்யானரூபாய தீமஹி
தந்நோ போத ப்ரசோதயாத்
ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம்...
ஓம் அஸ்ய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்யா
யாக்ஞாவல்க்ய ருஷி:
அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சதாசிவோ தேவதா
ஸ்ரீஸதாசிவ ப்ரீத்யர்த்தே
ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்ர ஜபே விநியோக:
சரிதம் தேவ தேவஸ்ய மஹா தேவஸ்ய பாவனம்
அபாரம் பர்மோதரம் சதுர்வர்கஸ்ய ஜாதனம்
கௌரி விநாயகோ பேதம் பஞ்சவதக்த்ரம் த்ரிநேத்ரகம்
சிவம் த்யாத்வா தசபுஜம் சிவரக்ஷாம் படேந்நர:
கங்கா தரச்சிர; பாது பாலமர்த்தேந்து சேகர
நயனே மதனத்வம்ஸீ கர்ணௌ ஸர்ப்ப விபூஷண:
க்ராணம் பாது புராராதிர்முகம் பாது ஜகத்பதி:
ஜிஹ்வதாம் வாகீச்வர: பாது கந்தாரம் சசிகந்தர:
ஸ்ரீகண்ட: பாதுமே கண்டம் ஸ்கந்தௌ விச்வதுரந்தர
புஜௌ பூபார ஸம்ஹர்த்தா க்ரௌபாது பினாகத்ருத்
ஹ்ருதயம் சங்கர: பாது ஜடாம் கிரிஜாபதி:
நாபிம் ம்ருத்யுஞ்ஜய: பாது கடிம் வ்யாக்ராஜிநாம்பர:
ஸ்க்திநீ பாது தீநார்த்த: சரணாகத வத்ஸல
ஊரூ மஹேஸ்வர: பாது ஜானு நீ ஜகதீஸ்வர
ஜங்கே பாது ஜகத்கர்த்தா குல்பௌபாது கணாதிப:
சரணௌ கருணாஸிந்து: ஸர்வாங்கனி ஸாதாசிவ:
எதாம் சிவபலோபேதாம் ரக்ஷாம் யஸ்ஸுக்ருதீ படேத்
ஸ புக்த்வா ஸகலான் காமான் சிவஸாயுஜ்யமாப்னுயாத்
க்ரஹ பூத பிசாசாத்யாஸ் த்ரைலோக்ய விசரந்தி யே
தூராதாசு பாலாயந்தே சிவநாமாபி ரக்ஷணாத்.
அபயங்கர நாமேதம் கவசம் பார்வதீபதே:
பக்த்யா பிபர்த்திய: கண்டே தஸ்ய வச்யம் ஜகத்த்ரயம்.
இமாம் நாராயணன் ஸ்வப்னே சிவரக்ஷாம் யதாசிசத்
ப்ராதருத்தாய யோகீந்த்ரோ யக்ஞவல்கீய ஸ்ததாலிகத்.
இந்த ஸ்தோத்திரம் மிகவும் அபூர்வமானது. இதற்கு சிவ அபயங்க ஸ்தோத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்த ஸ்தோத்திரத்தை யோகீஸ்வரர் யாக்ஞவல்க்யரின் கனவில் ஸ்ரீமந்நாராயணன் சொன்னதை காலையில் தன் சிஷ்யர்களின் மூலம் பலரும் பயனடையச் செய்தார்.
இந்த ஸ்தோத்திரத்தை சிவ ஆலயத்தில் சிவனுக்கும் அம்பாளுக்கும் எதிரில் நின்று கொண்டு பாராயணம் செய்பவர்களுக்கும் தினம் மாலையில் தங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து இதனைப் பாராயணம் செய்பவர்கள் தனக்கு வேண்டியதை அடைவார்கள். பூத, பிசாசங்கள் நெருங்காது. நவக்ரஹங்களின் பாதகநிலை விலகி எல்லா வசியமும் ஏற்பட்டு கடைசியில் சிவ சாயுஜ்யம் அடைவார்கள் என்றும் இதனைத் தகட்டில் எழுதி கழுத்தில் கட்டிக் கொள்பவனுக்கு மூன்று உலகமும் வசமாகும் என்று ப்ருஹத் ஸ்தோத்ர ரத்னாகரம் என்ற நூலில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.
எல்லா நன்மைகளைப் பெற்று சிவோஹ நிலையை அடைய ஸ்ரீ சிவரக்ஷா ஸ்தோத்திரம் பாராயணம் பண்ணி சிவ அருளைப் பிரார்த்திப்போம்.
'ஓம் தத்ஸத்"
பயம் போக்கும் பைரவர்.
பைரவரை வழிபட்டால் பிரம்மகத்தி தோஷம் நீங்கும், எம பயம் இருக்காது. திருமண தடைகள் நீங்கும், அத்துடன் பைரவர் சனிஸ்வரனின் ஆசிரியராவார் அதனால் இவரை வணங்குவதால் சனியின் தொல்லைகள் நீங்கும். எதிரிகள் அழிவர், பில்லி, சூனியம், அகலும். வழக்குகளில் வெற்றிகள் கிட்டும்.
கார்த்திகை மாதத்தில் வரும் வளர்பிறை அஷ்டமி, மற்றும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு உகந்த நாளாகும். அன்றைய தினத்தில் பைரவருக்கு அர்த்தசாம பூஜை மிக விசேஷமானதாகும்.
காசியின் காவல் தெய்வமான கால பைரவர் அவதரித்ததது கார்த்திகை மாத வளர்பிறை அஷ்டமி நாளிலேயே ஆகும்.
சூலமும் , உடுக்கையும், மழுவும், பாசக்கயிறும் கைகளில் ஏந்தியபடி காட்சி தரும் கால பைரவரின் வாகனம் நாய்.
பைரவ காயத்ரி மந்திரம்...
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே
ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ; ப்ரசோதயாத்”
மேலும் சில பைரவ அம்சங்களாவன...
அன்ன வாகனத்துடன் காட்சிதருபவர்...
அசிதாங்க பைரவர்.
காளை மாட்டு வாகனத்துடன் காட்சிதருபவர்...
உரு பைரவர்.
மயில் வாகனத்துடன் காட்சிதருபவர்...
சண்ட பைரவர்.
கழுகு வாகனத்துடன் காட்சிதருபவர்...
குரோத பைரவர்.
குதிரை வாகனத்துடன் காட்சிதருபவர்...
உன்மத்த பைரவர்.
யானை வாகனத்துடன் காட்சிதருபவர்...
கபால பைரவர்.
சிம்ம வாகனத்துடன் காட்சிதருபவர்...
பீஷண பைரவர்.
Comments
Post a Comment