Skip to main content

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும் சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்.


வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில் வரத முத்திரையும் கொண்டு முத்து விமானத்தில் பவனி வரும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்


பேரெழிலுக்கு முதன்மையானவனே

புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஒரு முகம் கொண்ட எழில்

திருமுகத்தோனே மஞ்சள் கலந்த

வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய்

விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


வெண்ணிற ஆடைப் ப்ரியனே

முத்தை ரத்தினமாக கொண்டவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


வளமான வாழ்வும் சுகபோகமும்

தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்


இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து

வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஆயுள் விருத்தியை தந்து அற்புத

வாழ்வை தந்து அருள்பவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய்

நான் வாழ அருள்புரியும்

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக

நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து

அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ரோஹினி ஹஸ்தம் திருவோணம்

நட்சத்திரத்துக்கு அதிபதியானவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


திருப்பதியை ஷேத்திரமாகக் கொண்டு

வெங்கடேசப் பெருமாளை மூர்த்தியாகக்

கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ராஜசூய யாகம் செய்து நாராயணனின்

அருள் பெற்று தேஜோமயமாய்

திகழ்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்


பத்து குதிரைத் தேரில்

இருசக்கிரங்கள் பூட்டி பவனிவரும்

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


அத்ரி புத்ரனே ஆத்ரேயனே

அமைதியான பார்வை கொண்டவனே

சந்திரபகவானே எழுந்தருள்வாய்


பிரதி திங்களும் பௌர்ணமி நாளிலும்

விரதமிருந்து வெண் அலரி மலரால்

அர்ச்சித்து வணங்கிட நலம் உண்டாகும்.


பச்சரிசி பால்சாதம் நிவேதனம் செய்து

சந்ர பகவானுக்குரிய தான்யமான

நெல்லை தானம் செய்திட கார்ய சித்தியாகும்.


மூன்றாம் பிறையில் சந்த்ர தரிசனம்

செய்து வந்தால் ஆயுள் விருத்தியாகும்.


சந்திரனுக்கு உகந்த ஷேத்திரமான திருப்பதி

சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை

தரிசித்தால் சர்வ ஜெயம் உண்டாகும்.


சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்

சரணம் சரணம் சோமனே சரணம்

சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்

சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்


சரணம் சரணம் சந்ரபகவானே சரணம்

சரணம் சரணம் சோமனே சரணம்

சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்

சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

ஸ்ரீ சந்திரன் காயத்ரி மந்திரம்:

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தந்நோ சந்திர ப்ரசோதயாத்

Comments

Popular Posts

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம...

இஸ்ரோ போகர் 7000

  "தட்டையிலே காத்தாடி தான்பறந்து சந்திரனார் மண்டலத்தின் அளவுமட்டும்" போகர் 7000த்தில் விண்ணுலகம் செல்வதற்கு காத்தாடி செய்யும் முறையை போகர் கூறியிருப்பார். காத்தாடியின் அளவு (size), காத்தாடி செலுத்துவதற்கான கயிறு நீளம் (fuel), சந்திரயானின் ராக்கெட் லாஞ்சர் மற்றும் ரோவரின் தன்மையை வெளிவட்டம் நடுவட்டம் உள் வட்டம் என மூன்று பிரிவுகளாக கூறியிருப்பார். இந்தப் பாடலை கவனமாக படித்து பார்த்தால் ஒரு எளிய அறிவியல் சூத்திரத்தை போகர் கூறியிருப்பது புரியவரும். பூமியின் காந்தாற்றலும் (gravitational force) சந்திரனின் இருpபாற்றலும் (airless exosphere) எப்படி காத்தாடி (விண்கலம்) வெற்றிகரமாக சந்திரனில் (moon) இறங்க இருக்கிறது சூட்சுமமாக கூறியிருப்பது விஞ்ஞானத்துக்கு சவால் விடும் தமிழர்களின் மெய் அறிவியலுக்கு சான்றாகும். போகரின் மரபணு தாக்கம்தானோ என்னவோ சந்திராயன் ஒன்று, இரண்டு, மூன்று என தமிழரின் மரபணு சார்ந்த மூளைதான் கைலாசவடிவு சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீரமுத்துவேல் ஆகிய சந்திரயான் இயக்குனர்களின் வெற்றிக்கு அடித்தளமிட்டிருக்கிறது. போகர் 7000 நூலின் இரண்டாம் பாகத்தில் ...

27 நட்சத்திரங்களின் காயத்ரி மந்திரங்கள்

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம். அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத் மிருகசீரிடம் ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத் திருவாதிரை ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத் புனர்பூசம் ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத் பூசம் ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத் ஆயில்யம் ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத் மகம் ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத் பூரம் ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத் உத்திரம் ஓம் மஹாபகாயை வித்ம...

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் கொனார்க் சூரிய கோயில் அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப சூர்ய பகவானே உதித்தெழுவாய் மங்கலக் குடியினில் மங்களமாய்க் குடிகொண்டு மங்காத ஒளிவீசும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில் பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சூர்யனார் கோவிலில் சுந்தரமாய் வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு அதிபதியானவனே சந்திரன் செவ்வாய் பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே  சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ உன்திருமுகம் காட்டி அருள்புரியும் சூர்ய பகவானே உதித்தெழ...

விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்

நீங்கள் நட வேண்டிய நட்சத்திர விருட்சம் or விருட்ச சாஸ்திரப்படி 27 நட்சத்திரக்காரர்களின் மரங்கள்!!! நம்மை அறியாமல் நாம் செய்யும் பாவங்களை,பாவ கதிர்களை கிரகிக்கும் சக்திவிருட்சங்களுக்கு உண்டு..உங்கள் நட்சத்திரத்துக்குரிய மரத்தை , நீங்களே உங்கள் கையால்நட்டு ,நீரூற்றி வளர்த்து வாருங்கள்.அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளம்பெறும். உங்கள்பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை இந்த மரங்கள் செய்யும். சிலமரங்களை வீட்டில் வளர்க்க முடியாது. உங்கள் கண்படும் இடங்களில், உங்கள் தோட்டத்திலோ, சாலை ஓரங்களிலோ, இல்லை ஆன்மிக ஸ்தலங்களில், ஒரு கோயில் சார்ந்த வனப்பகுதியில் (சதுரகிரி, திருஅண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம்,பாபநாசம்,குருவாயூர், திருப்பதி, திருத்தணி, சுவாமி மலை) தென்மேற்குப்பகுதியில் சூரியக்கதிர்கள் படும் இடத்தில் நட வேண்டும் அந்த மரக்கன்றையும் அவரது பிறந்த நட்சத்திரம் உதயமாகும் நாளில் நடுவது மிகநன்று. மரக்கன்றை நட்டதும் அவரது கையால் நவதானியங்களைஊற வைத்த நீரை அச்செடிக்கு விட்டு ஊறிய நவதானியங்களையும் அந்தமரக்கன்றுக்கு உரமாகப்போட வேண்டும். இப்படிச் செய்த மறு விநாடிமுதல்,...