Skip to main content

Posts

Showing posts from 2020

காயத்ரி மந்திரங்கள்

வனதுர்கா.. ஓம் உத்திஷ்ட புருஷ்யைச வித்மஹே மகாசக்த்யைச தீமஹி தந்நோ வனதுர்கா: ப்ரசோதயாத்| ஆஸுரி துர்கா.. ஓம் மகா காம்பீர்யைச வித்மஹே சத்ரு பக்ஷிண்யைச தீமஹி தந்நோ ஆஸுரிதுர்கா: ப்ரசோதயாத்| திருஷ்டி துர்கா.. ஓம் ஹ்ரீம் தும் திருஷ்டிநாசின்யைச வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் துஷ்ட நாஷின்யைச தீமஹி தந்நோ திருஷ்டிதுர்கா: ப்ரசோதயாத்| ஜாதவேதோ துர்கா.. ஓம் மஹாதேவ்யைச வித்மஹே வந்நி ரூபாயைச தீமஹி தந்நோ ஜாதவேதோ: ப்ரசோதயாத்| ஜய துர்கா.. ஓம் ஹ்ரீம் லவநாராயைச வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் பயநாசின்யைச தீமஹி தந்நோ ஜயதுர்கா: ப்ரசோதயாத்| சந்தான துர்கா.. ஓம் காத்யாயண்யைச வித்மஹே கர்பரக்ஷிண்யைச தீமஹி தந்நோ சந்தானதுர்கா: ப்ரசோதயாத்| சபரி துர்கா.. ஓம் காத்யாயண்யைச வித்மஹே கால ராத்ர்யைச தீமஹி தந்நோ சபரி துர்கா ப்ரசோதயாத்| சாந்தி துர்கா.. ஓம் மஹாதேவ்யைச வித்மஹே ஜயவரதாயைச தீமஹி தந்நோ சாந்திதுர்கா: ப்ரசோதயாத்| சூலினி துர்கா.. ஓம் ஹ்ரீம் தும் ஜ்வாலாமாலினி வித்மஹே தும் ஹ்ரீம் ஓம் மஹாசூலினிச தீமஹி ஓம் ஹ்ரீம் தும் தந்நோ துர்கா: ப்ரசோதயாத் ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்.. ப்ராம்ஹி.. ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே மஹா சக்தி...

கந்த சஷ்டி கவசம்

காப்பு துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலரருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. அமர ரிடர்தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி. நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்க வென்று வந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரஹண பவச ர ர ர ர ர ர ர ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரஹண வீரா நமோநம நிபவ சரஹண நிறநிற நிறென வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில்bபன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும் ...

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம் சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும் சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய். வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில் வரத முத்திரையும் கொண்டு முத்து விமானத்தில் பவனி வரும் சந்திரபகவானே எழுந்தருள்வாய் பேரெழிலுக்கு முதன்மையானவனே புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய் ஒரு முகம் கொண்ட எழில் திருமுகத்தோனே மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய் விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய் வெண்ணிற ஆடைப் ப்ரியனே முத்தை ரத்தினமாக கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய் வளமான வாழ்வும் சுகபோகமும் தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய் இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய் ஆயுள் விருத்தியை தந்து அற்புத வாழ்வை தந்து அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய் ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய் நான் வாழ அருள்புரியும் சந்திரபகவானே எழுந்தருள்வாய் மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய் ரோஹினி ஹஸ்தம் திருவ...

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் சூர்யாஷ்டகம்

ஸ்ரீ சூர்ய பகவான் சுப்ரபாதம் கொனார்க் சூரிய கோயில் அருள்கோடிப் பிரகாசமாய் அவனிக்கு ஒளிதந்து இருள்நீக்கி அருள் புரியும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் நீ எழுகில் இவ்வுலகெழும் இவ்வுலகுக்கு நீயே ஒளிமயம் இம் மண்ணுயிர்களை துயிலெழுப்ப சூர்ய பகவானே உதித்தெழுவாய் மங்கலக் குடியினில் மங்களமாய்க் குடிகொண்டு மங்காத ஒளிவீசும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிழக்குதிசையில் வெண்தாமரை மலரில் பத்மாசனமிட்டு அமர்ந்திருப் போனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சூர்யனார் கோவிலில் சுந்தரமாய் வீற்றிருக்கும் வீர்யனே ஆதித்யனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் நவகோள்களுக்கு ஆதியாய் விளங்கி சிவபெருமானை அதி தேவதையாய் கொண்ட ஞாயிறே சூர்ய பகவானே உதித்தெழுவாய் கிருத்திகை உத்திரம் உத்திராட நக்ஷ்த்திரத்துக்கு அதிபதியானவனே சந்திரன் செவ்வாய் பிரகஸ்பதியை நண்பனாய் கொண்டவனே சூர்ய பகவானே உதித்தெழுவாய் சமுக்யாதேவி சாயாதேவி சமேதராய் காட்சிதரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் சப்தகுதிரைகளைப் பூட்டி ஒரே  சக்கரத்தில் தேரைஓட்டி பவனிவரும் சூர்ய பகவானே உதித்தெழுவாய் அக இருளை நீக்கி சுகமுடன் நான் வாழ உன்திருமுகம் காட்டி அருள்புரியும் சூர்ய பகவானே உதித்தெழ...

அஷ்டாங்க யோகம்

அஷ்டாங்க யோகம் என்ற அட்டாங்க யோகம் தெரிவது அவசியம். குரு சொன்னதை அப்படியே எனக்கு புரிந்த விதத்தில் விளக்குகிறேன். எட்டுவிதமான யோகத்தில் அப்படி என்ன சிறப்பு? யாம நியம ஆசன பிராணாயமமே முதல் நான்கு படி. பிரதியாகார தாரணை தியானமுஞ் சமாதியே பின்நான்கு படி. 1. யாமம் அல்லது இயமம் 2. நியமம் 3. ஆசனம் 4. பிராணனின் யாமம் 5. ப்ரதியாகாரம் 6. தாரணை 7. தியானம் 8. சமாதி. இந்த எட்டு 1. யாமம் – நெறி – அதாவது வாழ்வியல் நெறி பிறரை கொல்லாதிரு மனதாலும், உடலாலும். ஒரு எளியவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது. தனது காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது. சிலர் சொல்லுவாங்க உன் பணம் எனக்கு வேண்டாம் என் பணம் உனக்கு வேண்டாம். அதுவே இயமம். இது ‪#‎கர்மயோகம்‬. கருமமே கண்ணாயிருப்பது! 2. நியமம் – மேலே சொன்ன அதே வாழ்வியல் அடிப்படை கோட்பாடு மட்டுமின்றி, மற்றவர்களைப் பற்றியும், இந்த உலகத்தைப் பற்றியும் மனதில் கொண்டு, சில அனுஷ்டானங்களை, ஆகமங்களை கடைப்பிடித்து தானும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ்விக்கும் நிலை. தனக்கென்று சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு வாழ்வது. சுத்தம் (உள் மற்றும் புறம்).இறைவனிடம் சரணாகதி ஆவது . நெற...

கலியுகம் பற்றி மகான் கோரக்கர்

கலியுகம் பற்றி மகான் கோரக்கர் யோகி பர மானந்த கலியின் தோற்றம் உண்மை நிற சாதிமத பேதம் மெத்த பாகிதமாய்ப் பிரபலங்கள் பெண்பால் விருத்திப் பாருலகில் ஆண்மக்கள் குறைவுண்டாகும் மோகித்தே முன்பின்னும் முறைமை கெட்ட மூதரிய தாயினையே சேய்தான் சேர்ந்து போகிதமாய் மதனையது பயில்வார் பங்கில் பூவலகிற் கலியுனுட பான்மை கேளே – கோரக்கர் உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு. கேளே நன்மனுக்கள் நூற்றுக் கொன்று கெடியாகப் பிறந்திருத்தல் அரிதே யாகும் நாளேமுன் கலியவனும் வளர்ந்து ஓங்க நடுங்கிடுவர் மனிதர்களும் உயரங்கட்டை வாளே முன் பின் வயது ஆண்டு நூறு வயங்கிடுவேன் கலியுதிக்கு மிடத்தைத் தென்பா சூளே மெய்ச் சும்பலப் பட்டன் வைணவ தத்தன் கொல்லை புண்னை மரத்தின்கீழ்க் கலி செ னிப்பே – கோரக்கர் இன்னும் சொல்கிறேன...

லக்னமும் தொழில் அமைப்பும்

என்ன லக்னம் எந்த தொழில் செய்யலாம் மேஷம் லக்னமும் தொழில் அமைப்பும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவன ஸ்தானாதிபதி சனி பகவானாவார். பொதுவாக, தொழில் காரகன் என வர்ணிக்கப்படக்கூடிய சனி பகவான் இந்த லக்னத்திற்கு 10ம் அதிபதி என்பதால் அவர் சுக்கிரன், புதன், குரு போன்றகிரகங்களின் சேர்க்கை பெற்று பலமாக அமையப் பெற்றால்,சொந்தத் தொழில்  செய்து அதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய யோகம் உண்டாகும். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு ஜீவனாதிபதி சனியே பாதகாதிபதியாகவும் இருப்பதால், வேலையாட்களிடமும் ஸ்பெகுலேஷன் சார்ந்த தொழில்  விஷயங்களிலும் முதலீடு செய்கின்ற போது முன்னெச்சரிக்கையுடன் இருந்து நிலையான விஷயங்களில் மட்டும் முதலீடு செய்தால், லாபங்களை அடைய முடியும். 10ம் அதிபதி சனி பலமாக அமையப் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் இரும்பு, எந்திரங்கள், வண்டி,வாகனங்களில்  மூலம் அனுகூலங்கள், பழைய பொருட்களை விற்பனை செய்யும் தொழில், கடின உடல் உழைப்பு சார்ந்த தொழில்கள் போன்றவற்றை செய்ய நேரிடும். சனி சுக்கிரனுடன் புதனும் இருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் யோகம், பலரை நிர்வாகம் செய்து சொந்த தொழில் செய்யக்கூடிய யோகம...