மாற்றுப்பெயர்; கொல்லங்கொவை, சாகாமூலி, கருடன்கிழங்கு. வளரியல்பு ; கோவையினத்தைச் சேர்ந்த பெருங் கிழங்குடைய ஏறுகொடி மருத்துவ பாகம் ; கிழங்கு, பூ, காய் குணம் ; வியதாபேதகாரி, பலகாரி. தீர்க்கும் நோய்கள்; "அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை கரையாத கட்டியிவை கானார் – வரையிற் றிருடரெனச்செல்லும் விடஞ்சேர் பாம்புமஞ்சுங் கருடன் கிழங்கதனைக் கண்டு." - கருடன் கிழங்கிற்கு அரையாப்புகட்டி, வெள்ளை, கொறுக்குமாந்தை, அற்புதவிரணம் நீங்கும். விஷத்தையுடைய பாம்பும் இதனைக் கண்டால் நடுங்கும் என்க. "துட்டவிஷம் பாண்டுவெப்பு சூலைவா தங்கிரந்தி குட்டமரிப்பக்கி கோண்குடணோய் – கெட்டகண்ட மாலைபோங் கொல்லன்கோவைக் கிழங்கால் முத்தோஷ வேலைப்போம் பாரில் விளம்பு." - கொல்லன்கோவைக்கிழங்கால் மகாவிஷம், தேகவெளுப்பு, சுரம், வாத சூலை, சிரங்கு, பெருவியாதி, நமைச்சல், வக்கிரநேத்திரம், குடல்வலி, கண்டமாலை, திரிதோஷம் நீங்கும் என்க. 1. கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாய் அரைத்து 50மிலி நீரில் கலந்து 3 நாள் காலையில் கொடுத்து மேற்பூச்சாகவும் பூசிவர நாய்,நரி, பூனை,குரங்கு முதலிய விலங்குகளின் கடிநஞ்சு தீரு...