Skip to main content

Posts

Showing posts from 2019

மூலம் பவுத்திரம் HEMORROIDS

ஆசனவழிக் கனலேறித் தூவாரப்பட்டு 9விதமான மூலத்தையும், பலவிதமான வியாதியையும் பெறுதல். காயத்தில் மூலங் கண்டவிதங் கேளு                                 பாயொத்ததீபனம் பரிந்தே அடக்கிடினும்                                             மாயை அடக்க மலத்தை   அடக்கிடினும்                                           ஓயற்ற குண்டலியினுள் புகும் வாயுவே உள்மூலம், பிறமூலம், இரத்தமூலம், சீழ்மூலம், மூலபாண்டு, முளைமூலம், வாத, பித்த, சிலேத்ம மூலம் என 9வகை. மூல நோயின் அறிகுறிகள் : மலச்சிக்கல், அடித்தொடை கணுக்கால் வலி குடைச்சல், உடல் சோர்வு, களைப்பு, ஆசன வாய் எரிச்சல், ஆசனக்கடுப்பு, மலத்தோடு இரத்தம் கழிதல், மார்பு துடிப்பு, முக வாட்டம்,போன்றவை ஏற்படும். மேலும் இரத்தமூலம் ஏற்பட்டு தினமும் இரத்தம் வெளி ஏறிக்கொண்டிருந்தால் உடலில் பலம் குறையும்,மயக்கம் உண்டாகும். உள்மூலக்குணம்;அபானத்துள் தசைபோல் வளர்ந்திருக்கும்;மலத்தை இறுக்கும்; மந்திக்கும்;  இரத்தம் மலத்தில் விழும்;இடையில் வயிறு வலிக்கும்;பலங்கெடும்;தேகம் வரளும். பிறமூலக்குணம்;அஸ்தியில் அனலேறி அபானவழியில்கத்திபோல் சதை வளர்ந்து உள்ளும் புறமுமாயிருக்கும்; அபானங் க

இந்திய முறை கழிப்பறை

காலை எழுந்தவுடனும் இரவு படுக்கச் செல்வதற்கு முன்னும், நாம் பயன்படுத்துவது கழிப்பறை.  இதைப் பற்றி பேசுவதற்குப் பலரும் முகம் சுளிக்கலாம்.  ஆனால், கழிப்பறைகளில்தான் நம் ஆரோக்கியம் அடங்கியிருக்கிறது. “இயல்பாகக் கிடைத்த நல்ல விஷயங்களையும் நாகரிகத்தின் பெயரால் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதில் கழிப்பறைகளும் அடக்கம். “உலகில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்து கிறார்கள்: இந்திய முறை கழிப்பறை (squat position), மேற்கத்திய முறை (sitting position).  ஆதிகாலம் முதல் கழிவை வெளியேற்றக் குத்தவைத்து (squat position) உட்காரும் முறையையே மனித இனம் பின்பற்றிவந்தது.  இதற்கு மலாசனம் என்று பெயர். நமக்குத் தெரியாமலே நாம் செய்யும் ஆசனம் இது.  இதை எத்தனை முறை செய்கிறோமோ, அந்த அளவுக்கு உடல் உறுதி கூடும். இதனால், மூலநோய் தொந்தரவு சீரடையும்; மலச்சிக்கல் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  கால்களும் முதுகும் உறுதியாகும். வயிற்று உறுப்புகள் திறம்பட வேலை செய்யும்.  உலகின் பெரும்பாலான நாடுகளில், இந்த முறைதான் பின்பற்றப்படுகிறது. எப்போது வந்தது? இந்த ஆசன கழிப்பறை முறை 19-ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத

வர்மம் varmam

வர்மங்களின் வகைகள்..! வர்மக் கலையை அகத்தியர் நான்கு பெரும் பிரிவுகளாய் பிரித்திருக்கிறார். உடலில் உள்ள வர்ம புள்ளிகள் மற்றும், அவற்றை கையாளும் விதத்தினால் இவற்றை வேறு படுத்துகிறார். இவை “படு வர்மம்”, ”தொடு வர்மம்”, ”தட்டு வர்மம்”, ”நோக்கு வர்மம்” படுவர்மம் நான்கு வகை வர்மங்களில் மிகவும் ஆபாயகரமான பிரிவு இதுவேயாகும். உடலிலுள்ள வர்மப் பகுதிகளில் அடியோ அல்லது தாக்குதலோ ஏற்படுமானால் அப்போது ஏற்படும் வர்மமே "படுவர்மம்" என்கிறார். இந்த படுவர்ம தாக்குதலுக்கு உள்ளாகும் நபர்கள் உயிரிழக்கும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதால் இவை மிகவும் ஆபத்தானவை என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். ஒரு மனிதன் படுவர்மப் புள்ளிகளில் அடிபட்டால் உடனடியாக மயங்கி விழுவான் என்றும், அவன் வாய் பிளந்து நாக்கு வெளியே தள்ளும், வாயில் நுரையும் வெளியேறும் அத்துடன் அந்த அடிபட்ட இடங்களில் கைவைத்து பார்த்தால் அந்த இடம் மிகவும் குளிர்ச்சியாகக் காணப்படும் என்றும் குறிப்பிடுகிறார். எல்லோராலும் இதை செய்திட முடியாது என்றும், மிகுந்த பயிற்சி உள்ள ஒருவரால் மட்டுமே இத்தகைய செயல்களை செய்திட முடியும் என்றும் கூறுகிறார். தொடு

சொறிசிரங்கு கரப்பான் தவளைச்சொறி தோல்நோய் scabies eczema phrynoderma dermatitis

ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி,எலி,பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை,மாதா,பிதாக்கள் மன நோக்காட்டாலும்,தெய்வ உருக்களை அழித்தலாலும்,பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக. தோலைப் பற்றிய 18வகை சொரிப்படைகளைக் கூறுவது கிரந்தி என்று அறிக.  கருங்கிரந்திகுணம்: தேகத்தில் எரிவு தினவு கண்டு கறுப்பாய் தடித்ததில் அடிக்கடி செம்முளை போல் தோன்றி நீர்கட்டி வெடித்து வற்றி கறுமையான அசருண்டாகி உதிரும் தழும்பு கருப்பாயிருக்கும் சிலவேளை ரணமாய் இருக்கும்                      செங்கிரந்திக்குணம்: தேகத்தில் செம்மை நிறமாய் வட்டவட்டமாய் தடித்துப் படர்ந்து இவற்றின் மத்தியில் வெண்மையாய் சுற்று ஓரங்களில் முளைமுளையாய்ச் சீழ்கட்டி வற்றிச் சிவந்து சருகுபோல் உதிர்ந்து தழும்பு சிவப்பாய் இருக்கும்         அரிகிரந்திகுனம்;தேகத்தில் சிறுசிரங்குபோல் தோன்றி படர்ந்து மாறாத்தினவு அரிப்பு காணும்.                                              ஆலங்காய்கிரந்திகுணம்;தேகாதியந்தமும் கழ

முகப்பரு கரும்புள்ளி ACNE VULGARIES

உடம்பில் எண்ணைபசை சுரப்பிகளில் (sebaceous glands) தோன்றுகிற நோய் ஆக்னி (acne) யாகும். இதில் பலவகை உண்டு. நாள்பட்ட வயிற்றுக்கோளாறுகளாலும், மலச்சிக்கலாலும் தவறான உணவுப் பழக்கங்களாலும் உண்டாகும்.                                                       பொடுகை உண்டாக்கி முடி உதிர்தல், மூக்கு, கண்னங்களில் பொருக்கு கட்டும் படை உண்டாக்குவது  ஒரு வகை. வயதானவர்களுக்கு முகத்தில் அல்லது தலையில் சிறுசிறு கெட்டியான கட்டிகளை உண்டாக்குவது ஒருவகை. குழந்தைகளின் முகத்தில் மிருதுவான கட்டி (பாலுண்ணி) உண்டாக்குவது ஒருவகை.  ஆக்னிரோஸஸீ (acne rosaeea) ; மூக்கையும்,கன்னங்களையும் சிவக்க வைக்கும்.   ஆக்னிவாரியோலிஃபார்மிஸ் (acne vorioliformis); நெற்றி சிவந்துபோய்,எரிச்சலும் இருக்கும்.    ஆக்னி வல்காரிஸ் (acne vulgaris); முகத்தில் கரும்புள்ளிகளையும்,பருக்களையும் உண்டாக்கும். இது 4 -25 வயது வரை உள்ள ஆண்களுக்கும்,12 -21 வயதுவரை உள்ள பெண்களுக்கும் மட்டுமே வரும். அதிக எண்ணெய் பசை இருந்தால் முகத்தில் பரு வரவாய்ப்புகள் அதிகம்ஆகையால் எண்ணெய் பசையில்லாமல் பார்க்கவும் உடலில் சேரும் கொழுப்புச்சத்துக்களின் ஒவ்வாமையினால்மு

வலிப்பு Epilepticseizures

நரம்பு மண்டலத்தில் இரு வகை உள்ளது.                                     1. மூளையின் கட்டுப்பாட்டில் இயங்குபவை (Cerebro-spinal system of nerves); பேசுதல், நடத்தல், செயல் புரிதல். 2. தாமாகவே இயங்குபவை (Autonomic system of nerves); இதயம் துடித்தல், நுரையீரல் விரிந்து சுருங்குதல், குடல்கள் இயக்கம். காக்கை வலிப்பு (epilepsy); பித்தம் சரீரமெங்கும் பாய்ந்து சித்தங் கலங்கிப் பிரதிக்ஞையற்று மயங்கி நாக்கை, உதட்டை, நாசியை, விழியை, புருவத்தை சேர்த்திழுத்து வலிப்புக்கண்டு அவயங்களுதறிக் கூலமலக்கிக் கீழே தள்ளும்.வாயில் வெண்ணுரை தள்ளும்.மேற்சுவாசம் வாங்கும். குதிரைவலிப்பின் குணம்;கண்ணும் புருவமும் கருத்திருக்கும்,கையும்காலும் ஒருபக்கந் திருத்தி வலிப்புக் காணும்,வாயில் வெண்ணுறை தள்ளும், விழி கண்ணைப் பார்த்து நிற்கும். அவயங்கள் தீப்போல் காந்தும்.உடல் படபடத்து நடுக்கும்.நெஞ்சில் கபம் கட்டும். குமரகண்டவலிப்பின் குணம்; கண்ணும் வாயும் கோணும்; காலும் கையும் ஒருபக்கம் விட்டுவிட்டு வலிப்பெடுக்கும்; சுரங் காயும்; தலை வலிக்கும்; எமக் கோட்டாலைப்போல வருத்தப்படுத்தும்; மூர்ச்சை காணும். முயல்கண்டவலிப்பின் க

தேமல், வெண்படை, படர்தாமரை, தொழுநோய் TINEA VERSI COLOR, LEUCODERMA

ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி, எலி, பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை, மாதா, பிதாக்கள் மன நோக்காட்டாலும், தெய்வ உருக்களை அழித்தலாலும், பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக. 1.   திரிபலாசூரணமாத்திரை மூன்று, தினமிருவேளை சாப்பிட்டுவர  வெண்படை  நீங்கும் 2.   அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம், 5-10மிலி தேனில் கலந்து, தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும் 3.   கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும் 4.   பலகறைபற்பம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1கிராம், 5-10மிலி பாலில் கலந்து பருகி, அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும் 5.   சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல்  குணமாகும் 6.   திருநீற்றுப்பச்சை  இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் நீங்கும் 7.   திப்பிலிச்சூரணம்  அரைதேக்கரண்டி,தேனில்,தினம்3வேளை நீடித்துச் சாப்

அல்லி Nymphae nouchali

வளரியல்பு ; நீரில் மிதக்கும் நீர்ச்செடி இலை ; அகன்ற நீள்வட்ட இலைகளையும் நுண்குழலுடைய காம்புகளையும் உடையது வகைகள் ; நீர்மேல் மிதந்து கொண்டிருக்கும் வெள்ளைநிற மலர்களையுடையது வெள்ளையல்லியெனவும் செந்நிற மலர்களையுடையது செவ்வல்லி, அரக்காம்பல் எனவும் நீல மலர்களையுடையது கருநெய்தல் (நீலோற்பலம்), குவளையெனவும் வழங்கப் பெறும். மருத்துவபாகம் ; இலை, பூ, விதை, கிழங்கு செய்கை ; சீதளகாரி, ரக்தஸ்தம்பனகாரி, தாதுக்ஷீணரோதி                              மருத்துவ குணம் ; கிழங்கு குளிர்ச்சி தரும். பூ தாது வெப்பகற்றும் குருதிக்கசிவைத் தடுக்கும். இரத்தபிரமேகம்,ஆண் குறித்துவார விரணம், வெகுமூத்திரம், தாகம், உட்சூடு நீக்கும். கிழங்கு அக்கிப்புண், பித்த எரிச்சல், திரிதோஷம், பிரமேகம், இரத்தக்கிராணி, பித்த நோய் போக்கும், கண் குளிர்ச்சி,தாது விருத்தி உண்டாக்கும். கண்ணுங்குளிரு மக்கி காணாது காந்துபித்த மெண்னுந்தோ ஷம்மேக மேகுங் காண் – பெண்ணே வயிற்றுக் கடுப்பிரத்த மாறுநெய்தலுக்குப் பயித்தியம்போம் விந்தூறும்பார். மேகமறும் புண்ணாறும் விட்டேகு நீரிழிவு தாகந்தணியும் தழலகலும் –வாகான மெல்லியலே யாயுன்மறை வேதியரே லாமுறைக்

கடுக்காய் Terminalia chebula அரிதகிக்காய்

  அரிதகிக்காய்  மாற்றுப்பெயர்   ; பச்சைக் கடுக்காய்                                        வளரியல்பு ; இலையுதிர்மரம் இலைஅமைப்பு ; மாற்றடுக்கில் நீள்வட்ட இலைகள் பூ,காய் ; பளபளப்பான நீண்ட உருளை வடிவ காய்கள் மருத்துவ பாகம் ; குணம் ;  மலகாரி, ஜடராக்கினிவர்தினி தீர்க்கும் நோய்கள்  பச்சை யரிதகிக்காய் பண்ணும் வகைகேளா பிச்சை யுறத்துவைத்துப் பிட்டழுத்தி – வைச்செடுத்துத் தின்ன வரோசியறுந் தீபனமா முன்மலம்போ மன்னநடை மாதே யறி பச்சைக் கடுக்காயை கொட்டை நீக்கியிடித்து ,ஐந்திலொரு பங்கு உப்பிட்டு,15 நாள் சென்றபின் பிசைந்து அன்னத்தில் கலந்தோ தனித்தோ புசிக்கின் அரோசிகம் தீரும். பசியுண்டாம். மலங்கழியும். கடுக்காய் Terminalia chebula Retz.;Combretaceae கடுக்காயுந் தாயும்கருதிலொன்றென் றாலுங் கடுக்காய்த் தாய்க்கதிகங் காணீ – கடுக்காய்நோ யோட்டி யுடற்றேற்று முற்றவன்னையோ சுவைக ளூட்டி யுடற்றேற்று முவந்து. கடுக்காயுந் தாயும் ஒன்றென ஒருவாறு நினைத்திருந்தாலும் தாயைப் பார்க்கிலும் கடுக்காயே அதிகமாம்.ஏனெனில் கடுக்காய் பிணிகளை நீக்கி உடலை தேற்றும்.தாயானவள் அறுசுவை ஊட்டி உடலை வளர்ப்பாள். பிணிகள் நீங்கினால்