ஸ்திரீகள் சம்பந்தத்தாலுண்டான மேகம் கிரந்தி இவைகளால் 6 வித குட்டமும், மண்ணுளியன் முதலிய சர்ப்பக்கடி, எலி, பூச்சி கடிகளுண்டாவது 9 வித குட்டமும், ஜீவ வதை, மாதா, பிதாக்கள் மன நோக்காட்டாலும், தெய்வ உருக்களை அழித்தலாலும், பெரியோரை பங்கப்படுத்தி மனம் குன்றச் செய்வதாலும் 4வித குட்டமும் ஆக19 குட்டங்களின் காரணமென்றறிக. 1. திரிபலாசூரணமாத்திரை மூன்று, தினமிருவேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும் 2. அன்னபேதிச்செந்தூரம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1-2கிராம், 5-10மிலி தேனில் கலந்து, தினம் 2வேளை சாப்பிட்டுவர வெண்படை நீங்கும் 3. கார்போகபற்று தயிரில் அல்லது எலுமிச்சைசாறில் கலந்து தடவ வெண்படை நீங்கும் 4. பலகறைபற்பம்100-200மிகி, பறங்கிப்பட்டைசூரணம்1கிராம், 5-10மிலி பாலில் கலந்து பருகி, அருகன்தைலம் தடவிவர தேமல் நீங்கும் 5. சீமைஅகத்திஇலையுடன்,கஸ்தூரி மஞ்சள் சேர்த்தரைத்துப் பூசி,1மணி நேரம் ஊறவைத்து குளிக்க தேமல் குணமாகும் 6. திருநீற்றுப்பச்சை இலைகளையரைத்துப்பூசி,1மணி நேரம் ஊறவைத்துக் குளிக்க தேமல் ...